Sreeleela : 3வது குழந்தையைத் தத்தெடுத்த பராசக்தி நடிகை.. பெருமையின் உச்சத்தில் ஸ்ரீலீலா!
Actress Sreeleela Adopted A Child : கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தவர் நடிகை ஸ்ரீலீலா. இவர் தற்போது தமிழில் பராசக்தி திரைப்படத்தில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார். புஷ்பா 2 படத்தில் கிஸ்ஸிக் பாடலைத் தொடர்ந்து, பான் இந்தியா அளவிற்கு மிகவும் பிரபலமானார். இவர் ஏற்கனவே இரு குழந்தைகளைத் தத்தெடுத்திருந்தார், அதைத் தொடர்ந்து மூன்றாவதாகக் குழந்தை ஒன்றை தத்தெடுத்துள்ளார்.

இயக்குநர் சுதா கொங்கராவின் (Sudha Kongara) இயக்கத்தில் தமிழில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் பராசக்தி (Parasakthi). இந்த படத்தில் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) முன்னணி கதாநாயகனாக நடித்து வருகிறார். அந்த படத்தில் நடிகை ஸ்ரீலீலாவும் (Sreeleela) முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழில் மட்டுமில்லை, பான் இந்தியா அளவிற்குப் பலவேறு மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2019ம் ஆண்டு வெளியான கிஸ் (Kiss) படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த இவர், அதைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். இவர் பிரபல நடிகையாக இருந்தாலும் தனது இளம் வயதிலே இரு குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தற்போது மூன்றாவதாக ஒரு குழந்தையையும் தத்தெடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பதிவின் கீழ் பலரும் தங்களின் வாழ்த்துகளையும், ஆசீர்வாதங்களையும் தெரிவித்து வருகின்றனர். இளம் வயதிலே இப்படி ஒரு நல்ல சேவை செய்கிறார் என்றும் கூறி வருகின்றனர்.
நடிகை ஸ்ரீலீலாவின் இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
நடிகை ஸ்ரீலீலா தற்போது சில படங்களில் பிஸியாக இருக்கிறார். தனது வெற்றி தோல்விகளைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். திரைப்படங்கள் ஒருபுறம் இருக்கத் தனது இளம் வயதிலேயே ஸ்ரீலீலாவுக்கு மிகப்பெரிய மனம் இருக்கிறது. அதனால்தான் அவர் இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளைத் தத்தெடுத்து அவர்களின் நலனில் அக்கறை கொண்டு வருகிறார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு குரு மற்றும் ஷோபிதா என்ற இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளைத் தத்தெடுத்திருந்தார்.
ஏற்கனவே தனது இரண்டு குழந்தைகளையும் ஒரு தாயைப் போல கவனித்துக் கொள்ளும் ஸ்ரீலீலா, இன்னொரு குழந்தையைத் தனது வீட்டிற்குள் கொண்டு வந்ததாகக் கூறியிருக்கிறார். சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் ஸ்ரீலீலா குழந்தையை முத்தமிடும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம்வருகிறார். தமிழில் இவரின் நடிப்பில் உருவாகிவரும் பராசக்தி படமானது வரும் 2026ம் ஆண்டு வெளியாகவுள்ளது என்று கூறப்படுகிறது. இது குறித்து தயாரிப்பாளரும் கூட சமீபத்தில் பேசியிருந்தார். பெரும் புகழைக் கொண்ட நடிகை ஸ்ரீலீலா குழந்தைகளை அதுவும் , ஊனமுற்ற குழந்தைகளை தத்தெடுத்து வரத்து வருவது ரசிகர்கள் மத்தியில் இவருக்குத் தனி மரியாதையை ஏற்படுத்தியுள்ளது.