Cinema Rewind : நடிகை சினேகாவுடைய சினிமா க்ரஷ் யார் தெரியுமா? அவரே சொன்ன விஷயம்!

Actress Sneha : தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சினேகா. இவருக்கு புன்னகை அரசி என்று செல்ல பெயரும் உண்டு. சினிமாவில் முன்னணி கதாநாயகர்களுடன் சினிமாவில் நடித்து மிகவும் பிரபலமான இவருக்கு மிகவும் பிடித்த நடிகர் யார் தெரியுமா. அது குறித்து முழுமையாக பார்க்கலாம்.

Cinema Rewind : நடிகை சினேகாவுடைய சினிமா க்ரஷ் யார் தெரியுமா? அவரே சொன்ன விஷயம்!

நடிகை சினேகா

Published: 

14 Apr 2025 20:29 PM

நடிகை சினேகா (Sneha) சமீபத்தில் வெளியான டிராகன் (Dargon) திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இந்த படத்தில் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்து ஆடியன்ஸை சர்ப்ரைஸ் செய்தார். மேலும் கதாநாயகியாக நடிகர் விஜய்யின் (Vijay) கோட் (GOAT) திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விஜய்யுடன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் மூலம் மிகுந்த வரவேற்பை பெற்றார். மேலும் நடிகை சினேகா தற்போது தனியார் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். வெள்ளித்திரையை தொடர்ந்து, சின்னதிரையிலும் சாதனை படைத்து வருகிறார். நடிகை சினேகா கடந்த 2000ம் ஆண்டு வெளியான “இங்கனே ஒரு நிலபக்ஷி” (Ingane Oru Nilapakshi) என்ற மலையாள படத்தில் நடித்து அறிமுகமானார்.

அதே ஆண்டில் தமிழில் வெளியான “என்னவளே” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். தனது முதல் தமிழ் திரைப்படத்தில் நடிகர் ஆர். மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்த படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார்.

இவர் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் மட்டுமில்லாமல் கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். தற்போது சினிமாவில் சிறப்பு கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகை சினேகா முன்னதாக பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அவர் அந்த வீடியோவில் அவரின் சினிமா நடிகர்களில் யார் பிடிக்கும் என்பது குறித்து பேசியுள்ளார்.

நடிகை சினேகா பேசிய விஷயம் :

நடிகை சினேகா முன்னதாகபேசிய வீடியோவில் “எனது அக்கா தீவிர விஜய் ரசிகை, அவர் அவரது அறை, பீரோல் முழுவதும் விஜய்யின் புகைப்படங்களை வைத்திருப்பார். அவருக்கு ஆப்போசிட் நான் தீவிர அஜித் ரசிகை. நான் சினிமாவில் நுழைவதற்கு முன்னே எனக்கு அஜித் சார் மிகவும் பிடிக்கும், அவர்தான் எனது சினிமா க்ரஷ் என்று நடிகை சினேகா கூறியிருந்தார்.

நடிகை சினேகா :

நடிகை சினேகா 2000 ஆம் ஆண்டில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்து வந்தார். இவர் விஜய், சூர்யா, அஜித், தனுஷ், விக்ரம் சிம்பு என பல்வேறு உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து திரைப்படங்களில் நடித்துள்ளார். 2000ம் ஆண்டு காலத்தில் இவருக்கு தொடர்ந்து ஆண்டுக்கு 4 படங்கள் முதல் 6 படங்கள் வரை நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகை சினேகா இறுதியாக விஜய்க்கு ஜோடியாக கோட் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் பல ஆண்டுகளுக்கு பின் இவருடன் ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து படங்களில் சிறப்பு கதாபாத்திரம் மற்றும் முக்கிய தோற்றத்தில் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.