டப்பா கேரக்டரைவிட ஆண்டி கேரக்டர் பெட்டர்… நடிகை சிம்ரனை கடுப்பாக்கிய பிரபல நடிகை – என்ன நடந்தது?

Actress Simran Viral Speech: தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிகர்கள் பிரசாந்த், விஜய், அஜித், ரஜினி, கமல், சூர்யா, விக்ரம் என பலருடன் இணைந்து நடித்தார் நடிகை சிம்ரன். இவர்களது கூட்டணியில் நடிகை சிம்ரனின் படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதில் பிரசாந்த், விஜய், அஜித் உடன் இணைந்து நடித்த படங்கள் ரசிகர்களுக்கு இன்றளவும் மிகவும் பிடித்தமானதாக உள்ளது.

டப்பா கேரக்டரைவிட ஆண்டி கேரக்டர் பெட்டர்... நடிகை சிம்ரனை கடுப்பாக்கிய பிரபல நடிகை - என்ன நடந்தது?

சிம்ரன்

Published: 

20 Apr 2025 14:22 PM

நடிகை சிம்ரன் (Simran) சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் தன்னுடன் பணியாற்றும் நடிகை குறித்து பேசிய விசயம் தற்போது சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது. நடிகை சிம்ரன் 1997-ம் ஆண்டு இயக்குநர் சபாபதி தக்‌ஷினாமூர்த்தி இயக்கத்தில் வெளியான விஐபி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் நடிகை சிம்ரனின் நடிப்பும் பாராட்டப்பட்டது. அதனைத் தொடந்து இவரது நடிப்பில் 2000-ம் ஆண்டு வரை வெளியான ஒன்ஸ் மோர், நேருக்கு நேர், அவள் வருவாளா, நட்புக்காக, கண்ணெதிரே தோன்றினால், துள்ளாத மனமும் துள்ளும், வாலி, ஜோடி, எதிரும் புதிரும், பிரியமானவளே படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

2000-ம் ஆண்டிற்கு பிறகு நடிகை சிம்ரன் நடிப்பில் வெளியான பம்மல் கே சம்மந்தம், கண்ணத்தில் முத்தமிட்டால், ஏழுமலை, பஞ்சதந்திரம், ரமணா, அரசு, நியூ, வாரணம் ஆயிரம், பேட்ட, மகான், அந்தகன் ஆகிய படங்களும் விமர்சன ரீதியாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

தமிழ் சினிமாவில் 90களில் பிரபலமாக இருந்த நடிகை அதனைத் தொடர்ந்து அம்மா கதாப்பாத்திரத்திலும், வில்லி கதாப்பாத்திரத்திலும் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றார். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் நடிகை சிம்ரன் நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தில் நடித்திருந்தார்.

இதில் பல ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் மற்றும் சிம்ரனின் காம்போவைப் பார்த்த ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். மேலும் அந்தப் படத்தில் சிம்ரனின் நடிப்பில் முன்னதாக வெளியான தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடல் ரீ மிக்ஸ் செய்யப்பட்டது ரசிகர்களிடையே பேராதரவைப் பெற்றது.

இணையத்தில் வைரலாகும் நடிகை சிம்ரன் பேசிய வீடியோ:

இந்த நிலையில் நடிகை சிம்ரன் சமீபத்தில் JFW விருது வழங்கும் விழாவில் அவருக்கு அந்தகண் படத்தில் வில்லியாக நடித்ததற்கு வழங்கப்பட்டது. அப்போது பேசிய அவர், சமீபத்தில் ஒரு சக பெண்  நடிகரின் நடிப்பைப் பாராட்டி மெசேஜ் செய்ததாக சிம்ரன் கூறினார். அதற்கு அந்த நடிகை, “ஆண்டி கதாப்பாத்திரத்தில் நடிப்பதை விட இது சிறந்தது” என்று கூறினார்.

அதனைப் படித்த சிம்ரன் அதிர்ச்சியடைந்து எந்த பதிலும் சொல்லவில்லை என்று தெரிவித்தார். ஆனால் தான் பேசியபோது, ​​“ஆண்டி கதாப்பாத்திரத்தில் நடிப்பது பரவாயில்லை, ‘டப்பா’ கதாப்பாத்திரத்தில் நடிப்பதை விட 25 வயது இளைஞனுக்கு அம்மாவாக நடிப்பது நல்லது” என்றும் அந்த விருது விழாவில் தெரிவித்துள்ளார்.

மேலும் நடிகை சிம்ரன் குறிப்பிட்ட அந்த நடிகை யார் என்று நெட்டிசன்கள் தொடர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர். சமீபத்தில் நடிகை ஜோதிகா டப்பா கார்டெல் என்ற நெட்ஃபிளிக்ஸ் சீரிசிஸ் நடித்திருந்த நிலையில் அது ஜோதிகாவாக இருக்குமோ என்றும் தெரிவித்து வருகின்றனர்.