Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நடிகை சிம்ரன் சொன்ன டப்பா ரோல் நடிகை யார்? அவர் சொன்ன விளக்கம்!

Actress Simran: தமிழ் சினிமாவில் 90களில் பிரபலமாக இருந்த நடிகை அதனைத் தொடர்ந்து அம்மா கதாப்பாத்திரத்திலும், வில்லி கதாப்பாத்திரத்திலும் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றார். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் நடிகை சிம்ரன் நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தில் நடித்திருந்தார்.

நடிகை சிம்ரன் சொன்ன டப்பா ரோல் நடிகை யார்? அவர் சொன்ன விளக்கம்!
நடிகை சிம்ரன்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 27 Apr 2025 18:24 PM

சமீபத்தில் JFW விருது வழங்கும் விழாவில் நடிகை சிம்ரன் (Actress Simran) அவருக்கு பிரசாந்தின் (Prashanth) அந்தகன் படத்தில் வில்லியாக நடித்ததற்கு விருது வழங்கப்பட்டது. அப்போது பேசிய சிம்ரன், சமீபத்தில் நடிகை சிம்ரன் அவர்கள் ஒரு சக பெண்  நடிகையின் நடிப்பைப் பாராட்டி தான் மெசேஜ் செய்தததை கூறினார். அதற்கு அந்த நடிகையிடம் இருந்து வந்த பதில் தன்னை மிகவும் வருத்தப்பட வைத்ததாக சிம்ரன் தெரிவித்திருந்தார். அதில் அந்த நடிகை சிம்ரனுக்கு அளித்த ரிப்ளை என்ன என்றால், “ஆண்டி கதாப்பாத்திரத்தில் நடிப்பதை விட இது சிறந்தது” என்று தெரிவித்துள்ளார். அதனைப் படித்த நடிகை சிம்ரன் அதிர்ச்சியடைந்த நிலையில் எந்த பதிலும் சொல்லவில்லை என்று தெரிவித்தார்.

அதுகுறித்து விருது விழாவில் தெரிவித்த போது நடிகை சிம்ரன், ​​“டப்பா’ கதாப்பாத்திரத்தில் நடிப்பதை விட 25 வயது இளைஞனுக்கு அம்மாவாக ஆண்டி கதாப்பாத்திரத்தில் நடிப்பது பரவாயில்லை” என்றும் தெரிவித்திருந்தார். மேலும் நடிகை சிம்ரன் குறிப்பிட்ட அந்த நடிகை ஜோதிகா தான் என்று நெட்டிசன்கள் தொடர்ந்து கமெண்ட் செய்து வந்தனர்.

சமீபத்தில், ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் நடிகை சிம்ரன் தனது பேச்சு குறித்து தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் இரண்டு நடிகைகள் தொழில்துறையில் ஒருபோதும் நண்பர்களாக இருக்க முடியாது என்று இப்போது உண்மையிலேயே நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

நடிகை சிம்ரன் பேசியதாவது “நடிகைகள் தொழில்துறையில் நண்பர்களாக இருக்க முடியாது என்று நான் நினைக்கிறேன். இந்த சம்பவம் அதை நிரூபித்துள்ளது. நண்பர்கள் உங்களை காயப்படுத்தும்போது அது மிகவும் வேதனை அளிக்கிறது. அந்த நபர் அடுத்த நாள் என்னிடம் பேசினார் – அது சங்கடமாக இல்லை, ஆனால் அந்த உறவு அப்படியே இருக்காது என்றும் தெரிவித்தார்”.

தொடர்ந்து பேசிய நடிகை சிம்ரன், ”தான் புண்பட்ட பிறகு அந்த அறிக்கையை வெளியிட்டதாகவும், தனது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவித்தார். தனக்கு, ஆண்டி வேடங்களில் நடிப்பது ஒரு மோசமான விஷயம் அல்ல என்றும்” நடிகை சிம்ரன் அந்தப் பேட்டியில் தெளிவுபடுத்தியுள்ளார்.

தனது தொழில் வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும், தனக்குப் பிடித்தமான விஷயம், “ஆண்டி வேடங்களில் நடிப்பது ஒரு மோசமான விஷயம் அல்ல” என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் நடிகை சிம்ரன் சமீபத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லியில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நடிகை சிம்ரனின் காட்சிகள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் தற்போது நடிகை சிம்ரன் நாயகியாக நடிக்கும் டூரிஸ்ட் ஃபேமிலி படம் ரிலீஸிற்காக காத்திருக்கின்றது. இதில் டீனேக் பையனுக்கு அவர் அம்மாவக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தங்கத்தை உருக்கி நொடி பொழுதில் பணமாக தரும் மெஷின் - வைரல் வீடியோ!
தங்கத்தை உருக்கி நொடி பொழுதில் பணமாக தரும் மெஷின் - வைரல் வீடியோ!...
கை பம்ப் மூலம் விமானத்திற்கு காற்றடித்த விமானி!
கை பம்ப் மூலம் விமானத்திற்கு காற்றடித்த விமானி!...
ஹல்தி விழாவில் டைனோசர் உடையணிந்து வந்த மணப்பெண் வீடியோ வைரல்!
ஹல்தி விழாவில் டைனோசர் உடையணிந்து வந்த மணப்பெண் வீடியோ வைரல்!...
அந்நியன் படத்தில் நடித்தது எனக்குத் தொந்தரவாக இருந்தது- விக்ரம்!
அந்நியன் படத்தில் நடித்தது எனக்குத் தொந்தரவாக இருந்தது- விக்ரம்!...
குட்டி யானைக்கு சாப்பிட சொல்லி தரும் தாய் யானை - வைரல் வீடியோ!
குட்டி யானைக்கு சாப்பிட சொல்லி தரும் தாய் யானை - வைரல் வீடியோ!...
பாகிஸ்தான் உடனான அனைத்து வர்த்தக உறவுகளும் துண்டிப்பு!
பாகிஸ்தான் உடனான அனைத்து வர்த்தக உறவுகளும் துண்டிப்பு!...
சிம்புவுடன் நடிக்கணும்னா ஒரு கண்டிஷன்.. ஹரிஷ் கல்யாண் சொன்ன பதில்
சிம்புவுடன் நடிக்கணும்னா ஒரு கண்டிஷன்.. ஹரிஷ் கல்யாண் சொன்ன பதில்...
தமிழக அமைச்சரவை மாற்றம்.. பொன்முடி, செந்தில்பாலாஜி ராஜினாமா..
தமிழக அமைச்சரவை மாற்றம்.. பொன்முடி, செந்தில்பாலாஜி ராஜினாமா.....
செப்சிஸ் போன்ற தொற்றுநோய்களுக்கு ஆயுர்வேத சிகிச்சை-பதஞ்சலி தகவல்
செப்சிஸ் போன்ற தொற்றுநோய்களுக்கு ஆயுர்வேத சிகிச்சை-பதஞ்சலி தகவல்...
தமிழ் சினிமாவின் சிறந்த டான்ஸர்.. நானி சொன்னது யாரை தெரியுமா?
தமிழ் சினிமாவின் சிறந்த டான்ஸர்.. நானி சொன்னது யாரை தெரியுமா?...
STR49ல் சிம்புவிற்கு ஜோடியாக இணையும் கயாடு லோஹர்!
STR49ல் சிம்புவிற்கு ஜோடியாக இணையும் கயாடு லோஹர்!...