Simran : நடிகை சிம்ரனின் பெயருக்கு அர்த்தம் இதுதான்.. அவரே சொன்ன விளக்கம்!
Actress Simran’s Name Meaning : 90ஸ் மற்றும் 2000ம் ஆண்டு தொடக்கத்தில் உச்ச நடிகைகளில் ஒருவராக இருந்து வந்தவர் சிம்ரன். இவர் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு , இந்தி என பல்வேறு மொழிகளில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவரின் பெயரின் மீது அனைவருக்கும் ஒரு சந்தேகம் நிச்சயமாக இருந்திருக்கும். அப்படி சிம்ரன் என்ற பெயரின் அர்த்தம் என்ன என்பதைப் பற்றி முழுமையாகப் பார்க்கலாம்.

நடிகை சிம்ரன்
நடிகை சிம்ரன் (Simran) தமிழில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்து வந்தவர். இவர் கோலிவுட் சினிமாவில் விஐபி மற்றும் ஒன்ஸ்மோர் (VIP and Oncemore) என்ற இரு படங்களிலும் ஒரே நேரத்தில் நடித்து வந்தார். இவரின் முதல் திரைப்படமாகக் கருதப்படுவது விஐபி (VIP). கடந்த 1997ம் ஆண்டு வெளியான இந்த படத்தை இயக்குநர் சபாபதி தேட்சிணாமூர்த்தி இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர்கள் பிரபு தேவா மற்றும் அப்பாஸ் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவருக்குத் தொடர்ந்து அடுத்தடுத்த தமிழ்ப் படங்கள் வெளியாகியிருந்தது. இவர் பல்வேறு பிரபலங்களுடன் இணைந்து நடித்திருந்தாலும், விஜய் மற்றும் சிம்ரன் இவர்கள் இருவரின் காமினேஷன் மக்களிடையே மிகவும் பேவரட்டான ஒன்றாக மாறியது.
இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிகர் விஜய்யுடன் கூட்டணியில் நடித்திருந்தார். இவர் நடிகர் விஜய்யுடன் ஒன்ஸ்மோர், துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே, உதயா மற்றும் யூத் போன்ற படங்களை இணைந்து நடித்திருந்தார். 90ஸ் மற்றும் 2000ம் மானுட தொடக்கத்தில் முன்னணி கதாநாயகியாக வளம் வந்த இவர், தற்போது படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து வருகிறார்.
சிம்ரனின் பெயருக்கான அர்த்தம் இதுதான் :
மேலும் நடிகர் சிம்ரனின் பெயருக்கான அர்த்தம் பற்றிய நிறைய கேள்விகள் ரசிகர்களிடையே இருந்து வருகிறது. சிம்ரன் என்ற பெயருக்கான அர்த்தம் “தியானம்” ஆகும். இதை நடிகை சிம்ரன் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். நடிகை சிம்ரனின் உண்மையான பெயர் அது கிடையாது. அவரின் உண்மையான பெயர் ரிஷிபாலா நேவல், இவர் மும்பையை சேர்த்தவர் ஆவார்.
நடிகை சிம்ரனின் சினிமா ரீ- எண்ட்ரீ :
நடிகை சிம்ரன் பிரபல தயாரிப்பாளரான தீபக் பக்கா என்பவரைக் கடந்த 2003ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு முன் ஆண்டிற்கு 4 முதல் 5 படங்களில் நடித்துவந்த இவர், அதன் பிறகு ஆண்டுக்கொரு 1 அல்லது 2 படங்கள் வீதம் நடிக தொடங்கினார். அதை தொடர்ந்து 2009ம் ஆண்டை தொடர்ந்து படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டார். பின் கடந்த 2014ம் ஆண்டு வெளியான ஆஹா கல்யாணம் என்ற படத்தில் நடித்து ரீ-எண்ட்ரீ கொடுத்தார். இந்த படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் முக்கியமான தோற்றத்தில் நடிக்கத் தொடங்கினார்.
சிம்ரனின் இன்ஸ்டா பக்கம்
டூரிஸ்ட் பேமிலி திரைப்படம்
இவரின் முன்னணி நடிப்பில் ரிலீசிற்கு தயாராகியுள்ள படம் டூரிஸ்ட் பேமிலி. இந்த படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் சசிகுமாரின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முயூரிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் இந்த படமானது உருவாகியுள்ளது.
இந்த படத்தில் இலங்கை பெண் கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். நடிகை சிம்ரனின் இந்த படம் வரும் 2025,மே 1ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதியில்தான் சூர்யாவின் ரெட்ரோ படமும் உலகமெங்கும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது .