Shruti Haasan : ரஜினி சார் என் அப்பாவை விட வித்தியாசமானவர்… கூலி பட அனுபவத்தை பகிர்ந்த ஸ்ருதி ஹாசன்!

Shruti Haasan Talks About Actor Rajinikanth : தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாகக் கலக்கி வருபவர் ஸ்ருதி ஹாசன். இவர் தற்போது தமிழில் மட்டுமில்லாமல், தெலுங்கு, இந்தி மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.மேலும் இவரின் நடிப்பில் தமிழில் உருவாகிவரும் படம் கூலி. லோகேஷ் கனகராஜின் இந்த கூலி படத்தில் நடிகர் ரஜினிகாந்த்துடன் நடித்த அனுபவம் குறித்து ஸ்ருதி ஹாசன் பேசியுள்ளார்.

Shruti Haasan : ரஜினி சார் என் அப்பாவை விட வித்தியாசமானவர்... கூலி பட அனுபவத்தை பகிர்ந்த ஸ்ருதி ஹாசன்!

ஸ்ருதி ஹாசன் மற்றும் ரஜினிகாந்த்

Published: 

27 Apr 2025 15:35 PM

கோலிவுட் முன்னணி நாயகனாக இருந்து வருபவர் கமல்ஹாசன் (Kamal Haasan). இவர் திரைப்படங்களில் நடித்து எவ்வாறு பிரபலமானாரோ, அதைப் போல வளர்ந்து வருபவர்தான் நடிகையும், கமலின் மூத்த மகளுமான ஸ்ருதி ஹாசன் (Shruti Haasan). இவர் தனது சிறு வயதிலே இந்தி படங்களில் நடித்துள்ளார். நடிகர் கமலின் ஹே ராம் (Hey Ram) என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து பாடல்கள் போன்றவற்றைப் பாடுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற படங்களில் உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமானார். இவரின் நடிப்பில் தமிழில் உருவாகிவரும் படம் கூலி (Coolie). இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் ரஜினிகாந்த்தின் மகள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படமானது மிகவும் பிரம்மாண்டமாகக் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்தது வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷ்ன் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ஸ்ருதி ஹாசன், நடிகர் ரஜினியுடன் கூலி படத்தில் நடித்த அனுபவம் குறித்துப் பேசியுள்ளார். அது குறித்து முழுமையாகப் பார்க்கலாம்.

ரஜினியுடன் கூலி படத்தில் நடித்ததை குறித்து ஸ்ருதி ஹாசன் பேச்சு :

அதில் அவர் ” ரஜினி சாருடன் நடித்தது மிகவும் மனநிறைவாக இருக்கிறது. ரஜினி சார் மிகவும் வித்யாசமானாவார், எனது அப்பாவை ஒப்பிடும்போது அவர் மிகவும் வித்தியாசமாக இருக்கிறார். நான் சிறு வயதில் இருந்து எனது அப்பாவை பார்த்துத்தான் வளர்ந்தேன், ஆனால் ரஜினி சார் மற்றும் அவரின் நடிப்பு எனக்கு மிகவும் வித்தியாசமாக இருந்தது. நடிகர் ரஜினிகாந்த் சார் மிகவும் தைரியமானவர் அவர் மிகவும் புத்திசாலி மற்றும் கூர்மையானவரும் கூட, அந்த அளவிற்கு அருமையான ஸ்டார். ரஜினி சார் எல்லாரிடையேயும் மரியாதையாக நடந்துகொள்வார், எல்லாரையும் மிகவும் கூர்மையாகக் கவனிப்பார். ரஜினி சாருடன் கூலி படத்தில் பணியாற்றியது எனது புண்ணியம் என்று நடிகை ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார்.

கூலி திரைப்படத்தின் அறிவிப்பு :

நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழில் கூலி திரைப்படத்தைத் தொடர்ந்து, நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. மேலும் தெலுங்கில் இவரின் நடிப்பில் சூப்பர் ஹிட்டான சலார் 1-க்கு தொடர்ச்சியான, சலார் 2 படத்திலும் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது இவர் தமிழ் நடிகையாக மட்டுமல்லாமல் பான் இந்தியக் கதாநாயகியாக வலம்வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .