Shruti Haasan : பிரம்மாண்டமாக உருவாகும் கூலி.. டப்பிங் பணியை தொடங்கிய ஸ்ருதி ஹாசன்!

Coolie Movie Update : நடிகர் கமல்ஹாசனின் மகள் மற்றும் பான் இந்திய பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் ஸ்ருதி ஹாசன். இவரின் முன்னணி நடிப்பில் தற்போது தமிழில் தயாராகிவரும் படம் கூலி. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் முன்னணி கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், தற்போது நடிகை ஸ்ருதி ஹாசன் டப்பிங் பணியை தொடங்கியுள்ளார்.

Shruti Haasan : பிரம்மாண்டமாக உருவாகும் கூலி.. டப்பிங் பணியை தொடங்கிய ஸ்ருதி ஹாசன்!

ஸ்ருதி ஹாசன்

Published: 

20 Apr 2025 15:12 PM

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஸ்ருதி ஹாசன் (Shruti Haasan). இவர் தற்போது இந்திய படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் ஹாலிவுட் (Hollywood) திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் தற்போது தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj)  இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் கூலி (Coolie). இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் அறிவிப்புகள் கடந்த 2024ம் ஆண்டு தொடக்கத்திலே வெளியானது. அதை தொடர்ந்து இந்த படத்தின் ஷூட்டிங் பல்வேறு இடங்களில் சிறப்பாக நடந்து வந்தது. இந்த படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இதில் அவர் ரஜினியின் மகள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் வெளியான லியோ படடகத்தை தொடர்ந்து, இந்த திரைப்படமும் மிக பிரம்மாண்ட கதைக்களத்துடன் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் கடந்த 2025, மார்ச் மாதத்திலே நிறைவடைந்தது. அதை தொடர்ந்து தற்போது இப்படத்தின் டப்பிங் பணியில் சிறப்பாக ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில், தற்போது நடிகை ஸ்ருதி ஹாசன் கூலி திரைப்படத்தின் டப்பிங் பணியை தொடங்கியுள்ளார். தற்போது அவர் வெளியிட்டிருந்த புகைப்படம் இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த திரைப்படம் ரிலீசாகுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டும் உள்ள நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷ்ன் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது.

கூலி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பதிவு :

நடிகர் ரஜினிகாந்தின் 171வது திரைப்படமான கூலி, வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் முன்னணி கதாநாயகனாக நடிக்க, அவருடன் நடிகர்கள் நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் மற்றும் பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் பாலிவுட் நாயகன் அமீர்கானும் முக்கிய தோற்றத்தில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜின் இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது தயாரித்து வருகிறது. மேலும் இசையமைப்பாளர் அனிருத் இணையமைத்து வருகிறார். இப்படத்திலிருந்து ஏற்கனவே சிக்கிடு வை என்ற தீம் பாடல் வெளியாகியிருந்தது. பொதுவாக ரஜினிகாந்த்தின் படங்களை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது தயாரித்து வருகிறது.

கூலி படத்தை தொடர்ந்து அடுத்தாக ஜெயிலர் 2 படத்தையும் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனமே தயாரித்து வருகிறது. மிக பிரம்மாண்ட கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்த படத்தின் ரிலீஸிற்காக ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர். இந்த கூலி படத்தை தொடர்ந்து ஸ்ருதி ஹசன் விஜய்யின் ஜன நாயகன் படத்திலும் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.