Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Samantha Ruth Prabhu: என்னோட மோசமான நடிப்பு.. தன் படங்களை சாடிய சமந்தா!

Samantha Spoke Passionately On Stage : நடிகை சமந்தா ரூத் பிரபு தற்போது பான் இந்திய கதாநாயகிகளில் ஒருவராக இருந்து வருகிறார். மேலும் இவர் தற்போது திரைப்படங்களில் நடிப்பதைத் தொடர்ந்து, சிறு சிறு நடிகர்களின் படங்களைத் தயாரித்தும் வருகிறார். இவரின் தயாரிப்பில் தற்போது தெலுங்கில் சுபம் என்ற படமானது ரிலீசாகவுள்ளது. அந்த படத்தின் நிகழ்ச்சி மேடையில் பேசிய சமந்தா தனது முதல் இரு படங்களைப் பற்றி பேசியுள்ளார்.

Samantha Ruth Prabhu: என்னோட மோசமான நடிப்பு.. தன் படங்களை சாடிய சமந்தா!
நடிகை சமந்தா ரூத் பிரபுImage Source: Instagram
barath-murugan
Barath Murugan | Published: 22 Apr 2025 12:55 PM

தென்னிந்தியக் கதாநாயகியாகப் பிரபலமாகி, தற்போது பான் இந்தியக் கதாநாயகிகளில் ஒருவராக நடிகை சமந்தா ரூத் பிரபு (Samantha Ruth Prabhu) இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாகத் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான படம் குஷி (Kushi). கடந்த 2023ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் (Vijay Deverakonda) இணைந்து நடித்திருந்தார். இந்த படமானது திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் ரிலீஸை தொடர்ந்து, நடிகை சமந்தா சரும நோயால் அவதிப்பட்டார். அதைத் தொடர்ந்து சில வருடங்களாக இந்தப் படங்களிலும் அவர் நடிக்கவில்லை. மேலும் 2 வருடங்களுக்கும் மேலாக இந்தப் படங்களிலும் நடிக்கவில்லை. இவரின் நடிப்பில் இறுதியாக இந்தியில் சிட்டாடல் ஹன்னி பன்னி (Citadel Honey Bunny) என்ற வெப் தொடர்தான் வெளியாகியிருந்தது.

மேலும் இதைத் தொடர்ந்து தற்போது திரைப்படங்களைத் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இவரின் தயாரிப்பு நிறுவனமானது ட்ராலாலா மோவிங் பிக்ச்சர் (Tralala Moving Pictures)  நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் கீழ் பல படங்களைத் தயாரித்து வருகிறார். தற்போது இவரின் தயாரிப்பில் தற்போது தெலுங்கில் உருவாகியுள்ள படம் சுபம் (Subham). இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. மேலும் சமீபத்தில் நடந்த ப்ரோமொஷன் நிகழ்ச்சியில் பேசிய சமந்தா தான் நடித்த முதல் இரண்டு படங்களை தற்போது பார்த்தாலும் வெட்கமாக இருக்கும் என அவர் அந்த மேடையில் ஓபனாக பேசியுள்ளார்.

நடிகை சமந்தா ரூத் பிரபு சொன்ன விஷயம் :

நடிகை சமந்தா சுபம் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் மேடையில் பேசும்போது, “எனது நடிப்பில் வெளியான முதல் இரண்டு படங்களை இப்போது பார்த்தல் கூட, எனக்கு வெட்கமாக இருக்கும். அந்த திரைப்படங்களில் நான் எவ்வளவு மோசமாக நடித்திருக்கிறேன் என்று நான் யோசிக்கிறேன். ஆனால் சுபம் படத்தின் இளம் நடிகை, நடிகர்களின் நடிப்பைப் பார்த்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று நடிகை சமந்தா புகழ்ந்துள்ளார். தற்போது நடிகை சமந்தா பேசிய விஷயம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

நடிகை சமந்தா அல்லு அர்ஜுன் மற்றும் அட்லீ கூட்டணி படத்தில் நடிக்கிறாரா ?

நடிகை சமந்தா அதைத்தொடர்ந்து 2 வருடங்களுக்கும் மேலாக எந்த படங்களிலும் நடிக்கவில்லை. அவர் தற்போது படங்களைத் தயாரிப்பது, விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது என அதில் பிசியாக இருந்து வருகிறார். மேலும் அவர் விரைவில் நான் திரைப்படத்தில் நடிப்பேன் என்று தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் அட்லீயின் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த திரைப்படத்தில் முதலில் நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்கவிருப்பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், அவர் இப்படத்திலிருந்து விலகியுள்ளாராம். அதைத் தொடர்ந்து நடிகை சமந்தா இந்த படத்தில் நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே அட்லீயின் இயக்கத்தில் தமிழில் தெறி மற்றும் மெர்சல் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். ஒருவேளை அல்லு அர்ஜுனுடன் இந்த படத்தில் அவர் நடித்தால், அட்லீயின் இயக்கத்தில் சுமார் 8 வருடத்திற்கு இந்த மீண்டும் இணைவார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரம்பரிய அரிசியா? சாதாரண அரிசியா? நீரிழிவு நோய்க்கு எது நல்லது?
பாரம்பரிய அரிசியா? சாதாரண அரிசியா? நீரிழிவு நோய்க்கு எது நல்லது?...
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்! சுற்றுலா பயணிகள் காயம்!
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்! சுற்றுலா பயணிகள் காயம்!...
சினிமாவில் இருந்து விலகுவதற்கு காரணம் இதுதான்.. நடிகை ரம்பா!
சினிமாவில் இருந்து விலகுவதற்கு காரணம் இதுதான்.. நடிகை ரம்பா!...
ஆஸ்கர் புதிய ரூல்ஸ்.. இது பாரபட்சத்தை முடிவுக்குக் கொண்டு வருமா?
ஆஸ்கர் புதிய ரூல்ஸ்.. இது பாரபட்சத்தை முடிவுக்குக் கொண்டு வருமா?...
திமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்வா? செந்தில் பாலாஜி விளக்கம்!
திமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்வா? செந்தில் பாலாஜி விளக்கம்!...
கனிமா பாடல் சிம்பு பாடலின் இன்ஸ்பிரேஷனா? - சந்தோஷ் நாராயணன்
கனிமா பாடல் சிம்பு பாடலின் இன்ஸ்பிரேஷனா? - சந்தோஷ் நாராயணன்...
மனித கண்களுக்கு புலப்படாத புதிய நிறம் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
மனித கண்களுக்கு புலப்படாத புதிய நிறம் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு...
சித்ரா பௌர்ணமி.. திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல சரியான நேரம்!
சித்ரா பௌர்ணமி.. திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல சரியான நேரம்!...
வீடு மற்றும் தோட்டத்திலிருந்து எலிகளை விரட்டணுமா? இதை செய்யுங்க!
வீடு மற்றும் தோட்டத்திலிருந்து எலிகளை விரட்டணுமா? இதை செய்யுங்க!...
புள்ளிகள் பட்டியலில் எந்த அணி எந்த இடத்தில்? கடைசி இடத்தில் CSK!
புள்ளிகள் பட்டியலில் எந்த அணி எந்த இடத்தில்? கடைசி இடத்தில் CSK!...
டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ரூ.15 கோடி ஊழல் - எடப்பாடி பழனிசாமி!
டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ரூ.15 கோடி ஊழல் - எடப்பாடி பழனிசாமி!...