Samantha : அப்படி நடித்திருந்தால் கோடி பணம்.. ஆனால் நோ சொன்னேன்- சமந்தா பகிர்ந்த விஷயம்!
Samantha Rejected Brand Deals : இந்திய நடிகைகளில் மிகவும் பிரபலமான ஒருவராக வலம்வருபவர் நடிகை சமந்தா ரூத் பிரபு. இவர் தமிழில் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக என்ற படங்களிலும் நடிக்கவில்லை. மேலும் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய சமந்தா பொருட்களை விளம்பரப்படுத்துவதைத் தவிர்த்ததை பற்றிக் கூறியுள்ளார்.

நடிகை சமந்தா ரூத் பிரபு (Samantha Ruth Prabhu) தமிழில் முன்னணி கதாநாயகியாக அறிமுகமான திரைப்படம் பானா காத்தாடி. கடந்த 2010ம் ஆண்டு வெளியான இப்படத்தில் நடிகர் அதர்வாவுடன் (Atharvaa) இணைந்து நடித்திருந்தார். தமிழ்த் திரைப்படங்களைத் தொடர்ந்து நடிகை சமந்தா தெலுங்கு, மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவரின் நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டில் குஷி (Khushi) என்ற படம் வெளியாகியது. இந்த படத்தைத் தொடர்ந்து அவர் வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இந்த படத்தின் ரிலீஸை தொடர்ந்து இவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போன காரணத்தால் , அவர் படங்களில் நடிப்பதைத் தவிர்த்தார். இதைத் தொடர்ந்து பல மாதங்களாக கடும் சிகிச்சையில் இருந்து வந்தார். மேலும் படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்த நிலையில், இந்தியில் இறுதியாக வெப் தொடர் ஒன்றில் நடித்திருந்தார் .
இந்த வெப் சீரிஸை தொடர்ந்து கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் வெளியாகியிருந்தது. இந்த தொடரில் நடிகர் வருண் தவானுடன் இணைந்து நடித்திருந்தார். மேலும் சமீப காலகாலமாக பல்வேறு விருது வழங்கும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய சமந்தா விளம்பரங்களில் நடித்தால், தற்போது பல கோடிகளைப் பெற்றிருப்பேன் என்றும், விளம்பரங்களில் நடிக்காததைக் குறித்தும் அவர் பேசியுள்ளார். அது குறித்து முழுமையாகப் பார்க்கலாம்.
நடிகை சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
நடிகை சமந்தா கூறிய காரணம் :
நடிகை சமந்தா ரூத் பிரபு, அதில் “ஆரம்பத்தில் நான் படங்களில் நடிக்கும்போது, ஒரு நடிகை அல்லது ஒரு நடிகர் எவ்வாறு வெற்றிகரமாக இருக்கிறார் என்பதற்கு அவர் எத்தனை பிராண்டு விளம்பரங்களில் நடித்துள்ளார் என்பது பொறுத்துத்தான் இருக்கும். அதே சமயத்தில் பல நிறுவனங்கள் என்னையும் அவர்களின் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக இருக்கக் கேட்டனர். அப்போது நான் நல்ல புகழ் மற்றும் அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்பி நானும் அந்த நிறுவனங்களுக்கு பிராண்ட் அம்பாசிடராக ஆனேன்.
மேலும் சில ஆண்டுகளாக உடல் நிலை சரியில்லாமல் விளம்பரங்களில் நடிப்பதைத் தவிர்த்தேன். தற்போது நான் ஒரு பொருளை விளம்பரம் படுத்துவதற்கு முன் குறைந்த பட்சமாக 3 அல்லது 4 மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்பேன். கடந்த ஆண்டு கூட சுமார் 15 பெரிய பிராண்ட் நிறுவனங்கள் வந்து அணுகினார்கள், ஆனால் நான் எதிலும் நடிக ஒத்துக்கொள்ளவில்லை. அப்படிச் சரி என்று கூறியிருந்தால் தற்போது பல கோடி பணம் கிடைத்திருக்கும்” என்று நடிகை சமந்தா ரூத் பிரபு கூறியுள்ளார்.