இது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும், இன்னும் மோசமாகப் போகிறது – உடல்நிலை குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை சமந்தா
Actress Smantha about her health: மயோசிடிஸ் நோய் கண்டறிதலுக்குப் பிறகு சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் தனது உடல்நிலை குறித்து மனம் திறந்து பேசினார். இந்த உடல் நலக் குறைவு தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் எவ்வாறு பாதித்து வருகிறது என்பதையும் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.

நடிகை சமந்தா
பான் இந்திய அளவில் பிரபலமாக உள்ள நடிகை சமந்தா ரூத் பிரபு (Samantha Ruth Prabhu) சமீபத்தில் தனது உடல் நிலை குறித்தும் மயோசிடிஸ் (myositis) குறித்தும் வெளிப்படையாக பேசியது அவரது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் அதர்வாவின் நடிப்பில் வெளியான பானா காத்தாடி (Baana Kaathadi) படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் சமந்தா. முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை சமந்தா. அதனைத் தொடர்ந்து தெலுங்கு திரையுலகின் நேச்சுரல் ஸ்டார் என அழைக்கப்படும் நானியுடன் இணைந்து ‘நான் ஈ’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் கியூட் நாயகியாக வலம் வரத் தொடங்கினார் சமந்தா.
தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்டவர்களுக்கு நாயகியாக நடிக்கத் தொடங்கினார் சமந்தா.
சமந்தாவும் டோலிவுட் நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து கடந்த 2017-ஆம் ஆண்டு பிரம்மாணடமாக திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் நடைப்பெற்ற 4 ஆண்டுகளிலேயே தோல்வியில் முடிந்தது. 2021-ம் ஆண்டு நடிகர்கள் சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் தங்கள் பிரிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
அதனை தொடர்ந்து தாயாக வேண்டாம் என்பதற்காக சமந்த இந்த விவாகரத்து முடிவை எடுத்ததாகவும் பல விமர்சனங்களை சினிமா வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் எதிர்கொண்டார் சமந்தா. அதனை தொடர்ந்து சர்ச்சைகளையும் வதந்திகளையும் பொருட்படுத்தாமல் வெப் சீரிஸ், படங்கள் என படு பிசியாக நடித்து வந்தார் நடிகை சமந்தா.
பின்னர் கடந்த 2022-ம் ஆண்டு தனக்கு மயோசிடிஸ் என்ற அறிய வகை நோய் இருப்பதாக சமந்தா தெரிவித்தார். அது சமந்தாவின் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. படங்களில் நடிப்பதில் இருந்து விலகி ஓய்வு எடுக்க முடிவு செய்தார் சமந்தா. அந்த நேரத்தில் படங்களில் நடிக்க வாங்கிய முன்பணத்தையும் தயாரிப்பாளர்களிடம் திருப்பி அளித்தார் சமந்தா. அதனை தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து சிறிது காலம் விலகி சிகிச்சையில் கவனம் செலுத்த தொடங்கினார்.
இந்த நிலையில் அந்த நோயில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு தற்போது படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். சமீபத்தில் தனது உடல்நிலை குறித்து சமீபத்தில் பேசியது வைரலாகி வருகின்றது. அதில் அவர் கூறியுள்ளதாவது, எனக்கு ஆட்டோ இம்யூன் நோய் இருப்பது கண்டறியப்பட்டபோது, நான் மிகவும் தனிமையான சூழலில் இருந்தேன்.
எங்க இருந்து இப்போ சொல்வது என்று எனக்குத் தெரியல. நீங்கள் உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஒரு வாரத்திற்கு ஒரு மாத்திரை சாப்பிட்டால், உங்களுக்கு உடல்நிலை சரியாகும் என்று நினைக்கிறீர்கள். ஏனென்றால் உங்கள் வாழ்நாள் முழுவதும் இப்படித்தான் இருக்கும். ஆனால், இந்த நோய் அப்படி இல்லை. இது நாள்பட்ட நோய். மேலும் இது குணப்படுத்த முடியாத நோய் என்று உங்களிடம் கூறினால்.
இது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என்றும் தொடர்ந்து அந்த நோயின் தாக்கம் மிகவும் மோசமாகப் போகிறது என்றும் உங்களிடம் கூறினால். இது குறித்து அறிந்த போது நானும் ஒரு கட்டத்தில் கோபமாக இருந்தேன். என் முழு வாழ்க்கையும் என் முன்னால் இருந்தது. எல்லாம் ஒரு நொடியில் நின்றுவிடுகிறது. நான் மிகவும் உதவியற்றவளாக உணர்ந்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.