Samantha Ruth Prabhu: கேமியோ ரோலில் ரீ என்ட்ரி.. சமந்தாவின் சுபம் படத்தின் ட்ரெய்லர்!

Actress Samanthas Cameo Role Entry : பான் இந்திய கதாநாயகிகளில் ஒருவராக இருந்து வருபவர் சமந்தா ரூத் பிரபு. இவரின் நடிப்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த படங்களும் வெளியாகவில்லை. இந்நிலையில், நடிகை சமந்தா சுபம் என்ற படத்தைத் தயாரித்து வந்தார். தெலுங்கில் உருவாகியுள்ள அந்த திரைப்படத்தில் அவர் கேமியோ ரோலில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

Samantha Ruth Prabhu: கேமியோ ரோலில் ரீ என்ட்ரி..  சமந்தாவின் சுபம் படத்தின் ட்ரெய்லர்!

நடிகை சமந்தா ரூத் பிரபு

Published: 

27 Apr 2025 19:05 PM

தெலுங்கு சினிமாவின் மூலம் சினிமாவில் நுழைந்தவர் சமந்தா ரூத் பிரபு (Samantha Ruth Prabhu) . தனது முதல் படத்தில் நடிகரும் முன்னாள் கணவருமான நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்திருந்தார். பின் தமிழில் இவர் மாஸ்கோவின் காவேரி (Moscowin Kavery) மற்றும் பானா காத்தாடி போன்ற படங்களில் நடித்து தமிழிலும் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து மிகவும் பிரபலமானார். தற்போது இவர் பான் இந்தியப் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் கடந்த 2 வருட காலமாகத் தென்னிந்திய மொழிகளில் எந்த படங்களிலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது நடிகை சமந்தா படங்களைத் தயாரிப்பதிலும் இறங்கியுள்ளார். இவரின் தயாரிப்பில் முதல் படமாக உருவாகியுள்ளது சுபம் (Shubham).

இந்த படமானது முற்றிலும் தெலுங்கில் உருவாகியுள்ளது. இந்த படத்தை இயக்குநர் பிரவீன் காந்த்ரோகுலா (Praveen Kanthrogula) இயக்கியுள்ளார். அறிமுக நடிகர்களை வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று (ஏப்ரல் 27.2025) வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகை சமந்தா கேமியோ ரோலில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் சாமியார் தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது தெரியவருகிறது. தற்போது இந்த சுபம் படத்தின் ட்ரெய்லரானது வைரலாகி வருகிறது.

சுபம் படத்தின் ட்ரெய்லர் பதிவு :

நடிகை சமந்தாவின் சொந்த தயாரிப்பில் உருவாகியுள்ள முதல் படம் என்ற நிலையில், மக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.. இந்த படத்தில் புது முக நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். சமந்தாவின் சொந்த தயாரிப்பு நிறுவனம் ட்ரலாலா மூவிங் பிக்ச்சர்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் கீழ் சுபம் படம் உருவாகியுள்ளது. இந்த படமானது வரும் 2025, மே 9ம் தேதியில் வெளியாகிறது.

சமந்தாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் அவரே கேமியோ ரோலில் நடித்துள்ளார். இந்த விஷயத்தை நிச்சயமாக யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். 2 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த படங்களிலும் சமந்தா நடிக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்தது. மேலும் இவரின் நடிப்பில் இறுதியாக சிட்டாடல் ஹன்னி பன்னி என்ற வெப் தொடர் இந்தியில் வெளியாகியது.

இதை அடுத்தாக மீண்டும் ஒரு வெப் தொடரில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன் மற்றும் அட்லீயின் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்திலும் இணையவுள்ளார் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் அது உண்மை இல்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

மேலும் சமந்தா விரைவில் தமிழிலும் ஒரு படத்தில் கமிட்டாகவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சுபம் படமானது ஒரு தொலைக்காட்சியை வைத்து நடக்கும் அமானுஷ்யங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திகில் கலந்த நகைச்சுவை படமாக உருவாகியுள்ளது.