Samantha Ruth Prabhu: என்னப்பா இது.. ஆளே மாறிட்டங்க.. சமந்தாவின் க்யூட் போட்டோஸ்!

Samanthas photos In A Golden Saree Viral : இந்திய சினிமாவில் கடந்த 2 வருடங்களில் எந்த படங்களில் நடிக்கவில்லை என்றாலும், தனக்கென ரசிகர்களை ஈர்த்து வைத்திருப்பவர் நடிகை சமந்தா. இவர் தற்போது திரைப்படங்களில் நடிப்பதற்குத் தயாராகி வருகிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சமந்தாவின் புதிய லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samantha Ruth Prabhu: என்னப்பா இது.. ஆளே மாறிட்டங்க.. சமந்தாவின் க்யூட் போட்டோஸ்!

சமந்தா ரூத் பிரபு

Updated On: 

08 Apr 2025 19:58 PM

தனது நடிப்பினால் மற்றும் க்யூட் ரியாக்‌ஷன்கள் மூலம் ரசிகர்களைக் கட்டிப்போட்டிருப்பவர் சமந்தா ரூத் பிரபு (Samantha Ruth Prabhu) . இவர் பான் இந்திய சிறந்த நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். இவரின் நடிப்பில் கடந்த 2 ஆண்டுகளாக எந்த படங்களும் வெளியாகாமல் இருந்தாலும், தனது இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் மற்றும் பிட்னஸ் வீடியோக்களின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். இவர் இறுதியாகத் தமிழில் குஷி (Kushi)என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படமானது தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளிலும் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டவுடன் (Vijay Deverakonda) இணைந்து நடித்திருந்தார். இப்படத்தில் இவர்கள் இருவரின் ஜோடியும் அருமையாகவே இருந்தது. இந்த படத்தின் ரிலீஸை தொடர்ந்து இவருக்கு, உடல் நிலை சரியில்லாமல் போனது. அதன் காரணமாக சில ஆண்டுகளாகப் படங்களில் எதுவும் நடிக்கவில்லை. மேலும் இவர் எப்போது படங்களில் நடிப்பார் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் இருந்து வருகின்றனர்.

தற்போது சினிமாவின் பக்கம் தனது கவனத்தைச் செலுத்திய சமந்தா, படங்களின் கதையைக் கேட்டுவருவதாகக் கூறப்படுகிறது. மேலும் தற்போது வெளியான தகவலின்படி, அட்லீ – அல்லு அர்ஜுனின் கூட்டணியில் உருவாகவுள்ள புதிய படத்தில் இவர்தான் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையானதா என்று தெளிவாகத் தெரியவில்லை.

மேலும் சமீபத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சமந்தா, சேலையை வித்தியாசமாக அணிந்து வந்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் சமந்தாவின் புதிய லுக் ரசிகர்களைக் கவர்ந்தது. தங்க நிற உடையில் அவர் இருக்கும் புகைப்படம் இணையத்தில், ரசிகர்கள் மத்தியில் தீயாகப் பரவி வருகிறது.

நடிகை சமந்தா ரூத் பிரபுவின் இன்ஸ்டாகிராம் பதிவு :

நடிகை சமந்தாவின் ரீசென்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. நடிகை சமந்தா நடிப்பு ஒருபுறம் இருந்தாலும், அதையும் கடந்து பல்வேறு பிஸினஸிலும் இறங்கியுள்ளார். அவர் தயாரிப்பாளர், அழகுசாதன பொருட்கள், மார்டன் விவசாயம், மேலும் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது என பல்வேறு தொழில்களையும் தனது கைவசம் வைத்துள்ளார். இவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், அவரின் பிஸ்னஸ் வளர்ந்துகொண்டேதான் போகும்.

நடிகை சமந்தா கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக எந்த ஒரு படங்களிலும் கமிட்டாகவில்லை என்று என அனைவருக்குமே தெரியும். மேலும் தற்போது படங்களின் கதைகளைக் கேட்டுவருவதாகக் கூறப்படுகிறது. திரைப்படத்தின் தயாரிப்பாளராகவும் மாறிய சமந்தா படங்களைத் தயாரித்து வருகிறார். தற்போது இவரின் தயாரிப்பு நிறுவனமான “ட்ராலாலா மோவின் பிக்சர்ஸ்” நிறுவனத்தின் கீழ் சுபம் என்ற திரைப்படமானது தயாராகியுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லரும் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இப்படமானது வெற்றி பெரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.