ராமாயணா படத்தில் நடிக்க சாய் பல்லவி முதல் தேர்வு இல்லை… யார் தெரியுமா?
Actress Sai Pallavi: இயக்குநர் நித்திஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ராமாயணா. இந்தப் படத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நாயகனாக ராமர் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகை சாய் பல்லவி நாயகியாக சீதா கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை சாய் பல்லவி (Sai Pallavi) தமிழில் இறுதியாக நடித்தப் படம் அமரன் (Amaran). இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க அவரது மனைவியாக நடிகை சாய் பல்லவி நடித்திருந்தார். மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தெலுங்கில் நடிகர் நாக சைதன்யாவுடன் நடிகை சாய் பல்லவி இணைந்து நடித்தப் படம் தண்டேல். இந்தப் படமும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. திரையரங்குகளில் வெளியாகி இந்தப் படமுக் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் வசூலிலும் பாக்ஸ் ஆபிசில் சிறப்பான இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது இந்தியில் இயக்குநர் நித்திஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ராமாயணா படத்தில் நடித்து வருகிறார் சாய் பல்லவி. மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படம் குறித்த அப்டேட்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் இந்த ராமாயணா படத்தில் நடிகர் யாஷ் ராவணனாகவும் நடிகர் சன்னி தியோல் அனுமனாகவும் நடிக்க உள்ள செய்தி முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து புகைப்படங்கள் கசிந்து இணையத்தில் வைரலாகவும் செய்தது.
அதன்படி சமீபத்தில் நடிகை சாய் பல்லவி சீதா கதாப்பாத்திரத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் இந்தப் கதாப்பாத்திரத்திற்கு நடிகை சாய் பல்லவி முதல் தேர்வு இல்லை என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி கே.ஜி.எஃப் படத்தின் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியபோது ராமாயணா படத்தில் நடிக்க ஆடிஷனின் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
ரன்பீர் கபூர் ராமராக நடிக்கும் அந்தப் படத்தில் சீதா வேடத்திற்கான ஆடிஷனின் கலந்துகொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும் தற்போது படப்பிடிப்பு நடந்து வருவதால் இதனை கூறலாம் என்று நினைக்கிறே. மூன்று காட்சிகளை நடித்துக் காட்டினேன். அது அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.
அப்போதுதான் நான் அறிந்தேன் நடிகர் யாஷ் அந்தப் படத்தில் ராவணன் கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளது. அது கேஜிஎஃப் 2 வெளியான நேரம். எங்களின் ஜோடியை கண்டு ரசிகர்கள் கொண்டாடி வந்த வேலை அது. அதனால் நாங்கள் இருவரும் எதிர் எதிர் பாத்திரத்தில் நடிதால் நன்றாக இருந்திருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் பேட்டி தற்போது வைரலாகி வருகின்றது.