விருதுகளை விட எனக்கு அதுதான் முக்கியம் என்று நினைக்கிறேன் – நடிகை சாய் பல்லவி சொன்ன விசயம்!
Actress Sai Pallavi: இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ராமாயணம். இதில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, அனுமனாக சன்னி தியோல், சூர்ப்பனகையாக ரகுல் ப்ரீத் சிங், ராவணனாக நடிகர் யாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் நாயகியாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி (Sai Pallavi). தமிழில் 2008-ம் ஆண்டு நடிகர்கள் ரவி மோகன் மற்றும் கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான தாம் தூம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து 2015-ம் ஆண்டு மலையாளத்தில் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் (Premam) படத்தில் நாயகியாக அறிமுகம் ஆனார் சாய் பல்லவி. இந்தப் படத்தில் நடிகர் நிவின் பாலி நாயகனாக நடிக்க 3 நாயகிகளில் ஒருவராக நடிகை சாய் பல்லவி நடித்திருந்தார். 3 நாயகிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் அதில் சாய் பல்லவி நடித்திருந்த மலர் டீச்சர் கதாப்பாத்திரத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
மலையாளத்தில் இந்தப் படம் வெளியாகி இருந்தாலும் தென்னிந்திய அளவில் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் சாய் பல்லவிக்கும் தென்னிந்திய மொழிகளில் படங்களின் வாய்ப்புகள் தொடர்ந்து குவியத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நடிகை சாய் பல்லவி நடிப்பில் வெளியான தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களுக்கு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் இறுதியாக தமிழில் இவர் அமரன் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். மேலும் நாயகனாக இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். அவரது மனைவியாக நடிகை சாய் பல்லவி நடித்திருந்தார். மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது.
நடிகை சாய் பல்லவியின் இன்ஸ்டா பதிவு:
View this post on Instagram
படத்தில் நடிகை சாய் பல்லவி நடித்த இந்து ரெபேகா வர்கீஸ் கதாப்பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனை தொடர்ந்து தெலுங்கில் இவரது நடிப்பில் வெளியான படம் தண்டே. நடிகர் நாக சைதன்யா இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருந்தார்.
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் நடிகை சாய் பல்லவி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விருதுகள் குறித்து பேசியுள்ளார். அதில் தான் அதிக விருதுகளை வாங்கி குவிப்பதைவிட ரசிகர்களிடம் இருந்து வரும் அன்பே போதுமானது என்று தெரிவித்துள்ளார்.