சீதையாக சாய் பல்லவி… இணையத்தில் கசிந்தது ராமாயண படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ!

Sai Pallavi At Ramayana Shooting: நடிகை சாய் பல்லவி கடைசியாக தெலுங்கில் நடிகர் நாக சைதன்யாவுடன் இணைந்து தண்டேல் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தனது வரவிருக்கும் ராமாயண படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ரன்பீர் கபூர் ராமராக நடிக்க நடிகை சாய் பல்லவி சீதையாக நடித்து வருகிறார்.

சீதையாக சாய் பல்லவி... இணையத்தில் கசிந்தது ராமாயண படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ!

சாய் பல்லவி

Updated On: 

09 Apr 2025 16:45 PM

தென்னிந்திய நடிகை சாய் பல்லவி (Sai Pallavi) சமீபத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் (Ranbir Kapoor)  இணைந்து நடிக்கும் தனது வரவிருக்கும் ராமாயண (Ramayana) படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கேரவனுக்கு செல்லும் போது இதுவரை யாரும் கண்டிராத தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. சாய் பல்லவி சமீபத்தில் தனது வரவிருக்கும் பாலிவுட் படமான ராமாயண படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். அவர் அந்தப் புகைப்படத்தில் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற சேலை அணிந்து, அழகான வடிவமைப்பில் நடிகை சீதா வேடத்தில் நடிக்கிறார். சமீபத்திய நிகழ்வில் நடிகர் சன்னி தியோல் இந்த வரவிருக்கும் படத்தில் தனது பங்கை உறுதிப்படுத்தினார். நியூஸ் 18 உடனான உரையாடலில், நடிகர் சன்னி தியோல் அளித்த பேட்டியில், நான் ராமாயணத்தில் அனுமனாக நடிக்கிறேன். ஆம் அது உண்மைதான் என்று தெரிவித்திருந்தார்.

நடிகர்களைப் பொறுத்தவரை, சவாலான விஷயங்களை செய்யவே நாங்கள் விரும்புகிறோம். ஏனெனில் அது மகிழ்ச்சியானது. நாங்கள் கதாபாத்திரத்தை சரியாகப் புரிந்துகொண்டு எங்கள் இயக்குனரின் பேச்சைக் கேட்க வேண்டும். மக்கள் அதை நம்புவதற்காக நான் என் கதாபாத்திரத்தில் மூழ்கிவிடுகிறேன்.

இணையத்தில் வைரலாகும் நடிகை சாய் பல்லவியின் புகைப்படங்கள்:

நான் இன்னும் படப்பிடிப்பைத் தொடங்கவில்லை, ஆனால் அது மிகவும் மெகா படங்களில் ஒன்றாக இருக்கும் என்று அவர் கூறினார். இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ராமாயணம். இதில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, அனுமனாக சன்னி தியோல், சூர்ப்பனகையாக ரகுல் ப்ரீத் சிங், ராவணனாக நடிகர் யாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகும், ஒன்று 2026 ஆம் ஆண்டிலும், மற்றொன்று 2027 ஆம் ஆண்டிலும் வெளியாகும் என்று முன்னதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்தப் படத்தில் கைகேயியாக லாரா தத்தா, அனுமனாக சன்னி தியோல், மந்தாராவாக ஷீபா சத்தா ஆகியோரும் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

முன்னதாக தமிழில் நடிகை சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றது. உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவான இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்திருந்தார்.

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். நடிகர் கமல் ஹாசனின் ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை இயக்கியிருந்தது. தொடர்ந்து நடிகை சாய் பல்லவியின் உடை மற்றும் மேக்கப் இல்லாமல் நடிப்பதற்கும் தொடர்ந்து ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற்று வருகிறார். இப்படியான நிலையில் ரசிகர்களிடையே அதிக நன்மதிப்பு உடைய நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி சீதையாக நடிப்பதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.