நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முதல் ஹாரர் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது
Actress Rashmika Mandanna: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவரது நடிப்பில் இறுதியாக தெலுங்கில் புஷ்பா 2 மற்றும் இந்தியில் சாவா என தொடர்ந்து இரண்டு படங்கள் வெளியாகி இரண்டுமே வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்தது குறிப்பிடத்தக்கது.

நடிகை ராஷ்மிகா மந்தனா
கன்னட சினிமாவில் நடிகை ராஷ்மிகா மந்தனா (Actress Rashmika Mandanna) நாயகியாக அறிமுகம் ஆகியிருந்தாலும் தெலுங்கு சினிமா தான் இவரை தென்னிந்தியா அளவில் பிரபலம் ஆக்கியது. மேலும் இந்தியாவில் நேஷ்னல் க்ரஷ் (National Crush) என்று ரசிகர்கள் அன்புடன் அழைப்பதற்கு காரணமும் தெலுங்கு சினிமா தான். அந்த வகையில் இவர் இறுதியாக தெலுங்கில் நடிகர் அல்லு அர்ஜுன் உடன் இணைந்து புஷ்பா 2 படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை இயக்குநர் சுகுமாரன் இயக்கியிருந்தார். படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தியில் நடிகர் விக்கி கௌஷல் உடன் இணைந்து இயக்குநர் லக்ஷ்மண் உட்டேகர் இயக்கத்தில் வெளியான சாவா படத்தில் இறுதியாக நடித்திருந்தார் நடிகை ராஷ்மிகா. மராத்தி நாவலை அடிப்படையாக கொண்டு உருவான இந்தப் படமும் வசூலில் மாஸ் காட்டியது.
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பில் தொடர்ந்து புஷ்பா 2, சாவா, சிக்கந்தர் என வெளியாஅன் 3 படங்களுமே பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது அவர் இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளிலும் உருவாகும் இந்தப் படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க நாகர்ஜுனா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து தெலுங்கில் கேர்ள் ஃப்ரண்ட் என்ற படத்திலும் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது முதன்முறையாக ஹாரர் காமெடி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அதன்படி இந்தப் படத்தில் நடிகர் ஆயுஷ்மான் குரானாவும் நடித்துள்ளார்.
இந்தப் படத்தை இயக்குநர் ஆதித்யா சர்போத்தர் இயக்கவுள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்தப் படத்தை ஸ்ட்ரீ, ஸ்ட்ரீ 2, முஞ்யா ஆகிய படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான மேட்காப் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்தப் படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக வாய்ப்பு உள்ளது என்றும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் இன்ஸ்டா பதிவு:
இதனைத் தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் தொடங்கியுள்ளதாக நடிகை ராஷ்மிகா மந்தன்னா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.