Rambha : சினிமாவில் இருந்து விலகுவதற்கு காரணம் இதுதான்.. நடிகை ரம்பா சொன்ன தகவல்!

Reason For Rambha Leaving Cinema : தென்னிந்திய சினிமாவில் 90கள் மற்றும் 2000ம் ஆண்டு காலகட்டங்களில் மிகவும் பிரபலமான கதாநாயகியாக இருந்தவர் நடிகை ரம்பா. இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து வந்த இவர் சினிமாவில் இருந்து விலகியது குறித்து ஓபனாக பேசியுள்ளார்.

Rambha : சினிமாவில் இருந்து விலகுவதற்கு காரணம் இதுதான்.. நடிகை ரம்பா சொன்ன தகவல்!

நடிகை ரம்பா

Published: 

22 Apr 2025 16:05 PM

நடிகை ரம்பா (Rambha) தெலுங்கு திரைப்படங்களில் நடித்து சினிமாவில் நுழைந்தார். இவரின் உண்மையான பெயர் ரம்பா கிடையாது, இவரின் ஒரிஜினல் பெயர் விஜயலட்சுமி (Vijayalakshmi) ஆகும். தெலுங்கு சினிமாவில் அறிமுகமான இவருக்கு விஜயலட்சுமி என்ற பெயர் சரியாக அமையாத காரணத்தினால், இவர் நடித்த ஒரு தெலுங்கு படத்தின் கதாபாத்திரத்தின் பெயரான ரம்பா என்ற பெயரே இவருக்கு சினிமா பெயராக மாறியது. இதைத் தொடர்ந்து இவர் அடுத்தடுத்து நடித்து வந்த படங்களில் ரம்பா என்ற பெயரிலேயே குறிப்பிடப்பட்டது. இவர் கடந்த 1992ம் ஆண்டு வெளியான டோலிவுட் படமான “ஆ ஒக்கடி அடக்கு” (Aa Okkati Adakku) என்ற படத்தில் நடித்து, கதாநாயகியாக அறிமுகமாகினார். இந்த படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த தெலுங்கு படங்களில் கிளாமர் காட்சிகளில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். மேலும் இவர் தமிழில் “உழவன்” (Uzhavan) என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து நடிகர் கார்த்திக்கின் நடிப்பில் வெளியான உள்ளத்தை அள்ளித்தா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவருக்குத் தமிழில் அடுத்தடுத்த படங்கள் அமைந்தது. இவர் ஆண்டுக்கு 5 படங்கள் வீதம், 90கள் காலகட்டத்தில் கமர்ஷியல் நாயகியாக வலம் வந்தார். பின் இவர் 2009ம் ஆண்டைத் தொடர்ந்து படங்களில் நடிப்பதைத் தவிர்த்தார். இந்நிலையில், இவர் சினிமாவில் இருந்து விலகியது குறித்து ஓபனாக பேசியுள்ளார்.

நடிகை ரம்பா சினிமாவில் இருந்து விலகுவதற்கு காரணம் :

நடிகை ரம்பா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அதில் அவரிடம் ஏன் நீங்கள் சினிமாவில் இருந்து விலகினீர்கள் என கேட்டுள்ளனர், அதற்கு நடிகை ரம்பா “எனக்குக் கல்யாணமாகி குழந்தைகள் பிறந்தபோது, பெற்றோர் யாரவது ஒருவராவது அவர்களுடன் இருக்கவேண்டும் என்று நான் நினைத்தேன். இதன் காரணமாகத்தான் நான் சினிமாவில் இருந்து விலகி, சில ஆண்டுகளாக எனது குழந்தைகளுடன் இருந்தேன். நான் சினிமாவில் இருந்து விலகி இருந்தபோதும் எனக்கு நடிப்பின் மீதான ஆசை கொஞ்சம் கூட குறைவில்லை. ஏனென்றால் எனது ஃப்ர்ஸ்ட் லவ்வே சினிமாதான் என்று நடிகை ரம்பா ஓபனாக பேசியுள்ளார்.

நடிகை ரம்பாவின் இன்ஸ்டாகிராம் பதிவு :

சின்னத்திரையில் ரம்பா :

நடிகை ரம்பா தற்போது சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார். இவர் தமிழ் தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழில் டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக இருந்து வருகிறார். மேலும் சில நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டு வருகிறார்.