Actress Rambha : ’கொஞ்சம் விட்டுருந்தா தண்ணியோட போயிருப்பேன்’ – நடிகை ரம்பா சொன்ன விஷயம்
Rambha Untold Story : தமிழ் சினிமாவில் 90ஸ் சினிமாவில் மிகவும் பிரபலமான கதாநாயகியாக இருந்து வந்தவர் ரம்பா. இவர் அப்போதே தென்னிந்திய நடிகைகளில் மிகவும் பேமஸான நடிகையாக இருந்தார். தற்போது சின்னதிரை நிகழ்ச்சிகளில் நடுவராக வாழ்க்கையை தொடர்ந்துவரும் இவர், சுந்தர புருஷன் படத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து பேசியுள்ளார்.

நடிகை ரம்பா (Rambha ) ஆரம்பத்தில் தெலுங்கு படங்களில் முன்னணி கதாநாயகியாக படங்களில் நடித்து வந்தார். பின் இவருக்கு தமிழில் அறிமுக திரைப்படமாக அமைந்தது உழவன் (Uzhavan). கடந்த 1993ம் ஆண்டு வெளியான இந்த படத்தை இயக்குநர் கதிர் இயக்கியிருந்தார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான இவருக்கு தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் தேடிவந்தது. தெலுங்கு சினிமாவில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான இவர்க்கு, தொடர்ந்து கமர்ஷியல் படங்களாக அமைந்தது. மேலும் இவர் தமிழிலும் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அப்போதுதான் இயக்குநர் டி. சபாபதி இயக்கத்தில் “சுந்தர புருஷன்” (Sundara Purushan) படத்தில் நடித்த வந்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகர் லிவிங்ஸ்டன் நடித்திருந்தார்.
இவர் நடிப்பில் வெளியான இந்த படமானது மக்களிடையே எவ்வாறு வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் முதலில் எந்த கதாநாயகியாக நடிப்பதற்கு முன்வரவில்லை என்று கூறப்பட்ட நிலையில், நடிகை ரம்பாதான் இந்த படத்தில் நடிப்பதற்கு ஒத்துக்கொண்டாராம்.
மேலும் இந்த படத்தில் அவர் நடித்ததை குறித்து, சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அதில் இந்த படத்தின் நடிக்கும்போது எதிர்பாராத விபத்து ஏற்பட்டதாகவும், அப்போது இந்த படத்தில் நடிக்கமாட்டன் என்று கூறியதாகவும் நடிகை ரம்பா பேசியுள்ளார். தற்போது அவர் பேசியது குறித்து முழுவதும் பார்க்கலாம்.
நடிகை ரம்பா சொன்ன விஷயம் :
நடிகை ரம்பா “நான் ஆரம்பத்தில் சினிமாவில் எந்த நல்ல கதைகள் வந்தால் நடித்துவிடுவேன், அதில் எந்த நடிகர் நடிக்கிறார் என்று எல்லாம் கேட்கமாட்டேன். அதைப்போலத்தான் சுந்தர புருஷன் திரைப்படத்திலும் நடித்தேன். எனக்கு தெலுங்கு படங்களில் முழுக்க கிளாமர் ரோலில்தான் நடிக கூப்பிடுவார்கள் ஆனால், தமிழில் சுந்தர புருஷன் படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த படத்தின் கதையை கேட்டதும் படத்தில் நடித்துவிடவேண்டும் என்றுதான் நினைத்தேன். உடன் எந்த நடிகர் நடிக்கிறார்வ் என்று எல்லாம் கேட்கவில்லை. மேலும் அந்த படத்தில் ஒரு காட்சியில் நடிக்கும்போது நான் இறந்துவிடுவேன் என்று நினைத்தேன்.
அந்த படத்தில் பெண்கள் ஒரு 6 அல்லது 7 பேர் ஒன்றாக குளத்தில் உள்ளே அப்படியே செல்லவேண்டும். எனக்கு நீச்சல் தெரியாது. அவ்வாறு குளத்தின் உள்ளே செல்லும்போது அப்படியே என்னை பெண்கள் எல்லரும் சேர்ந்து தண்ணீரினுள் இழுக்கிறார்கள்.நான் அப்போது எனது உயிர் போய்விடும் என்றுதான் நினைந்தேன். அதன் பிறகு எனது உதவியாளர் வந்து என்னை காப்பாற்றினார்.
அதை தொடர்ந்து நான் இந்த படத்தில் நடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டு சென்று விட்டேன். அதன் பிறகு லிவிங்ஸ்டன் சார் வந்து என்னிடம் பேசினார். இது நான் ஹீரோவாக நடிக்கும் முதல் படம், இந்த படத்திற்கு நீங்கதான் செட் ஆகுவீங்க எனக்காக இந்த படத்தில் நடிங்க என்று நடிகர் லிவிங்ஸ்டன் கூறினார் என நடிகை ரம்பா தெரிவித்துள்ளார்.