Rajisha Vijayan : கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனா இது.. ஸ்லிம்மாக ஆளே மாறிடாங்க…!

Rajisha Vijayan Transformation : மலையாள சினிமாவில் அறிமுகமாகி தென்னிந்தியா அளவிற்கு பிரபாலமான பல நடிகைகள் இருந்து வருகின்றனர். அதில் ஒருவர்தான் நடிகை ரஜிஷா விஜயன். இவர் தமிழில் தனது முதல் படத்திலே தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது அவர் உடல் எடை குறித்து ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படங்கள் இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.

Rajisha Vijayan : கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனா இது.. ஸ்லிம்மாக ஆளே மாறிடாங்க...!

நடிகை ரஜிஷா விஜயன்

Published: 

13 Apr 2025 22:21 PM

நடிகை ரஜிஷா விஜயன், (Rajisha Vijayan)  மலையாள சின்னதிரை நிகழ்ச்சிகளில் அறிமுகமாகி பிரபலமானார். அதை தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டு வெளியான “அனுராகா கரிக்கின் வெல்லம்” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் நுழைந்தார். இந்த படத்தை தொடர்ந்து பல மலையாள படங்களிலும் நடித்து வந்தார். இவருக்கு தென்னிந்தியா அளவிற்கு பிரபலத்தை தந்த திரைப்படம் ஸ்டாண்ட் அப் (Stand up). கடந்த 2019ம் ஆண்டு வெளியான இந்த மக்களிடையே மிகவும் பிரபலமானது. இந்த படம் முழுக்க மலையாள படமாக அமைந்தாலும், தென்னிந்திய மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து தமிழில், கடந்த 2021ம் ஆண்டு வெளியான கர்ணன் (Karnan) படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். நடிகர் தனுஷ் (Dhanush)  நடிப்பில் வெளியான இப்படத்தில், அவருடன் இணைந்து நடித்திருந்தார்.

இதை தொடர்ந்து தமிழில் ஜெய் பீம் , சர்தார் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த திரைப்படங்களில் குண்டாக கொலு கொழுவென இருந்த நடிகை ரஜிஷா விஜயன், தற்போது வெளியிட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக இருக்கும் இவரின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

நடிகை ரஜிஷா விஜயன் வெளியிட்ட பதிவு :

இந்த பதிவில் நடிகை ரஜிஷா விஜயன் ஜிம்மில் உடற்பயிற்சி உதவியாளருடன் நிற்கும்படி இருக்கிறது. அவர் உடல் எடையை குறைப்பதற்கு முன் மற்றும் உடல் எடை குறித்த பின் உள்ள புகைப்படத்தை ஒப்பீடு வெளியிட்டுள்ளார். தற்போது இவரின் இந்த பதிவின் கீழ் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த போட்டோஸ் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை ரஜிஷா விஜயன் இறுதியாக தமிழில் சர்தார் படத்தில் நடித்திருந்தார். கடந்த 2022ம் ஆண்டு வெளியான இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த பாடம் நல்ல வரவேற்பை கொடுத்தது. தற்போது மீண்டும் சர்தார் 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் பைசன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த பைசன் திரைப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் முன்னணி கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும் இவருடன் நடிகைகள் அனுபமா பரமேஸ்வரன் மற்றும் நடிகை ரஜிஷா விஜயனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படமானது 2025ம் ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் கபடி விளையாட்டு கதைக்களத்துடன் உருவாகிவருவதாக கூறப்படுகிறது. வாழை படத்தை போல இந்த படமும் வரவேற்பைப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.