Priyanka Mohan : சிறந்த நடிகர் சூர்யாவா? சிவகார்த்திகேயனா? நடிகை பிரியங்கா மோகன் யாரை சொன்னாங்க தெரியுமா?
Priyanka Mohans Best Pair In On-Screen : தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்து வருபவர் பிரியங்கா மோகன். இவர் இறுதியாகத் தமிழில் பிரதர் என்ற படத்தில் ரவி மோகனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் தற்போது தெலுங்கு படங்களில் நடிப்பதில் ஆர்வம் செலுத்து வருகிறார். படங்களில் சூப்பரான கெமிஸ்ட்ரி இருந்தது சூர்யாவுடனா அல்லது சிவகார்த்திகேயனுடனா என்ற கேள்விக்கு, அவர் என்ன கூறினார் என்பதை முழுமையாகப் பார்க்கலாம்.

கன்னட சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி மிகவும் பிரபலமானவர் நடிகை பிரியங்கா மோகன் (Priyanka Mohan). இவர் கடந்த 2019ம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான “ஒன்த் கதே ஹெல்லா” (Ondh Kathe Hella) என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தைப் பிரபல இயக்குநர் கிரிஷ் ஜி (Girish G) இயக்கியிருந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து டோலிவுட்டில் நடிகர் நானியின் (Nani) , நானிஸ் கேங் லீடர் (Nani’s Gang Leader) என்ற படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். இயக்குநர் விக்ரம் குமாரின் இயக்கத்தில் வெளியான இந்த படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானார். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கினார். மேலும் இவருக்கு கோலிவுட் சினிமாவில் அறிமுக படமாக அமைந்தது டாக்டர். இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் நடித்து , தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
தமிழில் முதல் படத்திலேயே பலகோடி ரசிகர்களைக் கவர்ந்த பிரியங்கா மோகன், தனது அடுத்த படத்திலே சூர்யாவிற்கு ஜோடியாக நடித்தார். ஆனால் இந்த படமானது ஓரளவு வரவேற்பைப் பெற்றது. தனது முதல் இரு படங்களிலே சிவகார்த்திகேயன் மற்றும் சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்தார். இந்நிலையில் இவரின் ஆன் ஸ்க்ரீன் பெஸ்ட் ஜோடி சிவகார்த்திகேயனா அல்லது சூர்யாவா என்ற கேள்விக்கு இவர் என்ன பதில் அளித்தார் தெரியுமா?
நடிகை பிரியங்கா மோகன் கொடுத்த பதில் :
நடிகை பிரியங்கா மோகன் அந்த கேள்விக்கு “ரெண்டுபேருமே மிகவும் அருமையான நடிகர்கள். இவர்கள் இருவருடன் நான் நடித்த படங்களும் மிகவும் அருமையாகத்தான் இருந்தது. எனக்கு ஆன் ஸ்க்ரீன் பெஸ்ட் ஜோடி என்றால் இவர்கள் இருவரையுமே சொல்வேன். நான் இவர்களுடன் நடித்த படங்களைப் பார்த்தாலே தெரியும்” என்ற பதிலைக் கூறியிருந்தார்.
நடிகை பிரியங்கா மோகனின் இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
நடிகை பிரியங்கா மோகன் கடைசியாகத் தமிழில் பிரதர் திரைப்படத்தில் நடித்திருந்தார். கடந்த 2024ம் ஆண்டு வெளியான இந்த படத்தை இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கியிருந்தார். இந்த படத்தில் தமிழ் பிரபல நடிகர் ரவி மோகனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் இந்த படமானது எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இந்த படத்துடன் சிவகார்த்திகேயனின் அமரன் படம் வெளியான நிலையில், இந்த படத்திற்கு ஈர்ப்பு கிடைக்கவில்லை.
இந்த படத்தை தொடர்ந்து நடிகை பிரியங்கா மோகன், நடிகர் தனுஷின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இந்த படத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான கோல்டன் ஸ்பேரோ என்ற பாடலுக்குச் சிறப்பு நடனமாடியிருந்தார். இதன் மூலம் மிகவும் பிரபலமானார்.
மேலும் தற்போது இவர் புதிதாக வேறு எந்த படங்களிலும் கதாநாயகியாக நடிக்கிறார் என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை. மேலும் இவரின் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் சுஜித் இயக்கத்தில் உருவாகியுள்ள ஓஜி என்ற திரைப்படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. இந்த படத்தில் முன்னணி கதாநாயகனாகப் பவன் கல்யாண் நடித்துள்ளார் . இந்த படமானது இந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.