சரியான நேரத்தில் சரியான விஷயங்கள் நடக்கும்… குட் பேட் அக்லி படம் குறித்து மனம் திறந்து பேசிய பிரியா பிரகாஷ் வாரியர்
Actress Priya Prakash Varrier: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நாயகனாக நடித்தப் படம் குட் பேட் அக்லி. இந்தப் படம் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

பிரியா பிரகாஷ் வாரியர்
ஓவர் நைட்ல ஒருத்தர் வைரலாக முடியாமானு கேட்டா முடியும். அதற்கு ஒரு பெரும் எடுத்துக்காட்டு நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் (Priya Prakash Varrier) தான். சமீபத்தில் நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படத்தில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸின் காதலியாக நடித்திருந்தார். இவர் தற்போதுதான் தமிழ் படத்தில் என்ட்ரி கொடுத்து இருந்தாலும் 2018-ம் ஆண்டே பான் இந்திய அளவில் பிரபலம் ஆனார். அதற்கு காரணம் 2018-ம் ஆண்டு இயக்குநர் உமர் லூலூ இயக்கத்தில் ஒரு அடார் லவ் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டது. இதில் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் கண் அடிப்பது போல ஒரு காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அந்த காட்சி ஓவர் நைட்டில் பான் இந்திய அளவில் வைரலானது.
முன்னதாக ஒரு அடார் லவ் படத்தில் நடிகை பிரியா பிரகாஷ் வாரியருக்கு சிறிய காட்சி மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் பான் இந்திய அளவில் பிரபலம் ஆனதை தொடர்ந்து ஒரு அடார் லவ் படக்குழுவினர் பிரியா வாரியருக்கு படத்தில் காட்சிகளை அதிகப்படுத்தினர். படம் 2019-ம் ஆண்டு வெளியாகினாலும் அந்த காட்சிக்கு கிடைத்த வரவேற்பு படத்திற்கு கிடைக்கவில்லை என்பதே உண்மை.
வைரலாகி ஆறு வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளார் பிரியா பிரகாஷ் வாரியர். தாமதமாகிவிட்டாலும், அவர் ஒன்றல்ல இரண்டு தொடர்ச்சியான படங்களில் நடித்துள்ளார். அதில் தனுஷ் இயக்கத்தில் நீக் மற்றும் அஜித் குமாருடன் குட் பேட் அக்லி.
இது குறித்து நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் சிஎன்என் நியூஸ் 18 செய்திக்கு அளித்தப் பேட்டியில் கூறியதாவது, நேர்மையா சொல்லணும்னா, அது சரியான ஸ்கிரிப்ட்க்காக காத்திருப்பது மாதிரிதான்னு நினைக்கிறேன். சரியான விஷயங்கள் சரியான நேரத்துல நடக்கும்னு நான் உண்மையிலேயே நம்புறேன்.
இப்போ, எல்லாமே ஒண்ணா சேர்ந்து வருது போல இருக்கு. முதலில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நடந்தது. அப்புறம் குட் பேட் அக்லியும் அதைத் தொடர்ந்து வந்தது. நட்சத்திரங்கள் இணைந்த மாதிரி இருக்கு. நான் எல்லா நேரத்துலயும் ஸ்கிரிப்ட்களைக் கேட்டுட்டு இருக்கேன், ஆனா “என்னால இதை மிஸ் பண்ண முடியாது”னு சொல்ல வைக்கும் கதைகள் கிடைப்பது அரிது.
பிரியா பிரகாஷ் வாரியரின் இன்ஸ்டா பதிவு:
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் குட் பேட் அக்லி பத்தி கேட்டப்போ எனக்கு அப்படித்தான் தோணுச்சு. ரெண்டுமே என் தமிழ் அறிமுகத்துக்குப் பொருத்தமான படங்கள் மாதிரி மாதிரி தோணுச்சு என்றும் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். குட் பேட் அக்லி படத்தில் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது படம் பார்த்தவர்களுக்கு தெரியும்.
மேலும் படம் பார்க்கவில்லை என்றாலும் குட் பேட் அக்லி படத்தில் நடிகை சிம்ரனின் நடிப்பில் முன்னதாக வெளியான தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலுக்கு நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் குட் பேட் அக்லி படத்தில் அர்ஜுன் தாஸ் உடன் இணைந்து நடனமாடியது ஓவர் நைட்டில் வைரலானது குறிப்பிடத்தக்கது.