Priya Prakash Varrier : “குட் பேட் அக்லி” பிளாக்பஸ்டர் கொண்டாட்டம்.. மேடையில் நடனமாடிய நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்!
Good Bad Ugly Block Buster : கோலிவுட் நாயகன் நடிகர் அஜித்தின் முன்னணி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் நடிகை பிரியா பிரகாஷின் நடனம் பிரபலமான நிலையில், குட் பேட் அக்லி படத்தின் வெற்றி விழாவில் மேடையில் அவர் நடனமாடியுள்ளார்.

கோலிவுட் சினிமாவில் கடந்த 2025, ஏப்ரல் 10ம் தேதியில் மாபெரும் கொண்டாட்டத்துடன் வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இந்த திரைப்படத்தில் அஜித் குமார் (Ajith Kumar) அசத்தல் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமானது தயாரித்திருந்தது. இந்த படமானது முற்றிலும் அஜித் ரசிகர்களுக்காகப் படம் என்றே கூறலாம். நடிகர் அஜித்தின் நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த படங்களை இணைத்து உருவாக்கப்பட்ட படம் என்றே கூறலாம். நீண்ட நாள் காத்திருப்பிற்கு அஜித் ரசிகர்களுக்கு இது கொண்டாட்டமாக அமைந்துள்ளது. மேலும் இந்த படத்தில் அஜித் குமார் மிகவும் மாஸ் வசனங்களைப் பேசி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார். இந்த படமானது வெளியாகி திரையரங்கங்களை அதிரவைத்தது வருகிறது.
மேலும் இந்த படத்தில் “தொட்டுப் தொட்டு பேசும் சுல்தானா” என்ற பாடலுக்கு நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் (Priya Prakash Varrier) நடனமாடிய காட்சிகள் சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகி வருகிறது.சமீபத்தில் நடந்த குட்பேட் அக்லி படத்தின் பிளாக் பஸ்டர் கொண்டாட்ட விழாவில் மேடையில் நடனமாடியுள்ளார். தற்போது இந்த வீடியோவும் இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் பலரும் அவரை அடுத்த சிம்ரன் என்றும் கூறிவருகின்றனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் வெளியிட்ட வீடியோ :
Recreating the moment the theatres erupted 💥#PriyaPrakashVarrier dances for #ThottuThottuPesumSultana at the #GoodBadUgly BLOCKBUSTER SAMBAVAM CELEBRATIONS 💥💥 pic.twitter.com/qz3pOFVy0g
— Mythri Movie Makers (@MythriOfficial) April 13, 2025
நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் பிரபல மலையாள நடிகை ஆவார். இவர் கடந்த 2019ம் ஆண்டு வெளியான ஒரு அடார் லவ் என்ற படத்தின் மூலம் பான் இந்தியா அளவிற்குப் பிரபலமானார். மேலும் இவர் தமிழில் நடிகர் தனுஷின் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். மேலும் தற்போது வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸின் காதலியாக நடித்திருந்தார்.
இவர் இந்த படத்தில் நடிகை சிம்ரன் நடனமாடிய தொட்டுப் தொட்டு பேசும் சுல்தானா என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார். இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸுடன் அந்த பாடலுக்கு சிம்ரனைப் போல நடனமாடிய காட்சிகள் திரையரங்குகளில் தீயாக இருந்து. மேலும் அஜித்தின் ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைசாகவும் இருந்தது என்றே கூறலாம்.
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி வெளியாகி 4 நாட்களைக் கடந்த நிலையில், இதுவரை ரூ.120 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த செய்தியானது சினி உலகம் இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜித்தின் மாஸான சம்பவத்திற்கு முக்கிய காரணம் நடிகர் ஜி.வி. பிரகாஷ் என்றே கூறலாம்.
இந்த படத்தில் வெளியான அனைத்து பாடல்களையும் தரமாகச் செதுக்கியிருந்தார். மேலும் அஜித்தின் பழைய ஹிட் பாடல்களும் இப்படத்தில் முக்கியமாக இடம்பெற்றிருந்தது. இப்படமானது தற்போதுவரை திரையரங்குகளில் மாஸாக வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.