Pooja Hegde: டப்பிங் ஸ்டார்ட்.. உற்சாகத்தில் பூஜா ஹெக்டே.. ரெட்ரோ அப்டேட்!
Retro Movie Updates : பான் இந்திய கதாநாயகிகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தமிழில் சூர்யாவுடன் நடித்து வந்த திரைப்படம் ரெட்ரோ. இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து தற்போது ரிலீசிற்கு தயாராகிவரும் நிலையில், இப்படத்தின் டப்பிங் பணியை நடிகை பூஜா ஹெக்டே ஆரம்பித்துள்ளார்.

நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) தமிழில் மூன்றாவதாக நடித்துள்ள திரைப்படம் ரெட்ரோ (Retro). இந்த திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் (Karthik Subbaraj) இயக்கியுள்ளார். மேலும் முன்னணி கதாநாயகனாக நடிகர் சூர்யா (Suriya) நடித்துள்ளார். இந்த படமானது காதல், ஆக்ஷ்ன் மற்றும் நகைச்சுவை போன்ற கதைக்களத்துடன் உருவாகியுள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் இப்படமானது 90ஸ் படங்களைப் போல இருக்கும் என்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2024ம் ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பமாகி, அதே ஆண்டின் இறுதியில் நிறைவடைந்தது. இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டெர்டைமென்ட் நிறுவனமும், கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. தற்போது இப்படமானது இறுதிக்கட்ட பணியிலிருந்து வரும் நிலையில், நடிகை பூஜா ஹெக்டே டப்பிங் பணியை மீண்டும் தொடங்கியுள்ளார்.
இவர் ஏற்கனவே இப்படத்தின் டப்பிங் செய்துவந்த நிலையில், தேதி இல்லாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் இணைந்துள்ளார். தற்போது அவர் வெளியிட்டிருந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரி இணையத்தில் வைரலாகி வந்தது. அந்த ஸ்டோரியில் நடிகை பூஜா ஹெக்டே ” நான் இன்னொரு முறை பேச தயாராக இருந்தேன், ஆனால் இயக்குநர் ஓகே சொல்லிவிட்டார்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரெட்ரோ படத்தின் 3வது பாடல் :
Fuel the fire within you 🔥#TheOneSong from #Retro 💿https://t.co/TD60dNle24
A @Music_Santhosh Musical
ft. @sidsriram x @shanvdp x #SaNa
✒ @Lyricist_Vivek & Backing vocals by #Mahalakshmi & #Victor #LoveLaughterWar #RetroFromMay1 #TheOne@Suriya_Offl #Jyotika… pic.twitter.com/RWVxeVR4Vv— 2D Entertainment (@2D_ENTPVTLTD) April 12, 2025
நடிகை பூஜா ஹெக்டே சூர்யாவின் ரெட்ரோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படமானது வரும் 2025, மே 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படமானது தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் வெளியாகிறது. நடிகை பூஜா ஹெக்டே தமிழ் நடித்த 3வது திரைப்படம் இதுதான். தொடர்ந்து தமிழில் ஜன நாயகன் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்யின் ஜோடியாக நடித்துள்ளார்.
மேலும் ரஜியினின் கூலி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். நடிகர் ராகவா லாரன்ஸின் காஞ்சனா 4 படத்திலும் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.ஒரு காலத்தில் டோலிவுட் சினிமாவில் கொடிக்கட்டிப் பறந்த நடிகை பூஜா ஹெக்டே தற்போது தமிழ் மற்றும் இந்தி போன்ற படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இவருக்குத் தொடர்ந்து பல படங்கள் தோல்வியில் முடிந்தாலும், இவருக்குப் படங்களின் நடிக்கும் வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்து வருகிறது. மேலும் ரெட்ரோ படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்துள்ள இவர் நடனமாடிய கனிமா பாடல் இணையத்தில் ட்ரெண்டிங் பட்டியலில் உள்ளது. அதைப் போல இந்த ரெட்ரோ படமும் பிளாக்பஸ்டாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.