Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Pooja Hegde : ருக்மினி சிம்பிள் கேர்ள்.. ரெட்ரோ படத்தில் நடித்த ரோல் குறித்து பூஜா ஹெக்டே விளக்கம்!

Pooja Hegde Explains The Character Of Rukmini : தமிழ் சினிமாவின் மூலம் திரைப்படங்களில் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இவரின் நடிப்பில் இதுவரை தமிழில் சில படங்கள் மட்டும் வெளியானாலும் இவருக்கு ரசிகர்கள் அதிகம். இவர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் நடித்திருந்த ருக்மினி கதாபாத்திரம் குறித்து அவர் பேசியுள்ளார்.

Pooja Hegde : ருக்மினி சிம்பிள் கேர்ள்.. ரெட்ரோ படத்தில் நடித்த ரோல் குறித்து பூஜா ஹெக்டே விளக்கம்!
சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 29 Apr 2025 16:42 PM

சூர்யாவின் (Suriya) 44- வது திரைப்படம் ரெட்ரோ (Retro). இந்த திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க பூஜா ஹெக்டே (Pooja Hegde) கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் அவர் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். தளபதி விஜய்யின் (Vijay) பீஸ்ட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழில் இவர் நடித்துள்ள 3வது திரைப்படமாகும். பூஜா ஹெக்டே, ஒரு காலத்தில் பிரபல தெலுங்கு கதாநாயகியாக வலம் வந்தாலும் இவரின் சினிமா அறிமுகத்திற்குக் காரணமான திரைப்படம் முகமூடி (Mugamoodi). கடந்த 2012ம் ஆண்டு வெளியான இந்த படத்தை இயக்குநர் மிஷ்கின் இயக்க, ஜீவா கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்துதான் தெலுங்கில் கதாநாயகியாகக் கலக்கி வந்தார். பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமானார். மேலும் இவரின் நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் படம் ரெட்ரோ.

இந்த படத்தின் ரீலீஸை தொடர்ந்து புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய பூஜா ஹெக்டே, இந்த படத்தில் அவர் நடித்திருந்த கதாபாத்திரமான ருக்மினியைப் பற்றிப் பேசியுள்ளார். தற்போது அந்த கதாபாத்திரத்தை பற்றி அவர் கூறிய விஷயம் ரசிகர்களிடையே இந்த படத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

நடிகை பூஜா ஹெக்டே கூறிய விஷயம் :

ரெட்ரோ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகை பூஜா “ருக்மினி கதாபாத்திரத்தைப் பற்றிக் கூறும்போது அவள் மிகவும் எளிமையான பெண். ஆடம்பரமாக அவளுக்கு எதுவும் தேவையில்லை. அதை அவளும் விரும்புவதில்லை. மேலும் ருக்மினி கதாபாத்திரம் மிகவும் வலிமையானவள், மிகவும் புத்திசாலித்தனமானவள். இந்த கதாபாத்திரத்தைப் பற்றி என்னிடம் இயக்குநர் கூறும்போது நான் நிச்சயம் நடிப்பேன் என்று கூறினேன். மேலும் இந்த ருக்மினி கதாபாத்திரத்திற்கு மேக்கப் அவ்வளவாகத் தேவைப்படவில்லை, மேலும் என்னுடைய கதாபாத்திரத்தை முழுவதும் நேச்சுரல் லைட்டிங் வைத்துதான் எடுத்தார்கள். நிச்சயமாக இந்த கதாபாத்திரத்தை அனைவரும் விரும்புவார்கள்” என்று நடிகை பூஜா ஹெக்டே ஓபனாக பேசியுள்ளார்.

ரெட்ரோ படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :

ரெட்ரோ திரைப்படத்தை நடிகர் சூர்யாவும் மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படமானது வரும் 2025, மே 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

பூஜா ஹெக்டேவின் புதிய படங்கள் :

ரெட்ரோ படத்தைத் தொடர்ந்து நடிகை பூஜா ஹெக்டே தமிழில் நடிகர் விஜய்யுடன் ஜன நாயகன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இவர் நடிகர் விஜய்யுடன் இரண்டாவது முறையாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் இந்தியில் நடிகர் வருண் தவானுடன் புதிய படத்திலும் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து நடிகர் ராகவா லாரன்ஸின் காஞ்சனா 4 படத்திலும் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

பிரதமர் மோடி தலைமையில் கூடுகிறது அமைச்சரவை..!
பிரதமர் மோடி தலைமையில் கூடுகிறது அமைச்சரவை..!...
3 மாதங்களில் 9 கிலோ குறைத்த ஜோதிகா - அவரே பகிர்ந்த சீக்ரெட்!
3 மாதங்களில் 9 கிலோ குறைத்த ஜோதிகா - அவரே பகிர்ந்த சீக்ரெட்!...
ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறீர்களா? ரூ.1 கோடி சேமிக்க ஈஸியான வழி!
ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறீர்களா? ரூ.1 கோடி சேமிக்க ஈஸியான வழி!...
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி! தேதியை குறிக்க சொன்ன பிரதமர் மோடி!
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி! தேதியை குறிக்க சொன்ன பிரதமர் மோடி!...
எளிமையாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.. அஜித் குமார்!
எளிமையாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.. அஜித் குமார்!...
KKR அணிக்குள் மனஸ்தாபமா? பயிற்சியாளர் மீது வீரர்கள் அதிருப்தியா?
KKR அணிக்குள் மனஸ்தாபமா? பயிற்சியாளர் மீது வீரர்கள் அதிருப்தியா?...
ஆட்டோ ஓட்டுநராக முகேஷ் அம்பானி - ஏஐ உருவாக்கிய வீடியோ வைரல்
ஆட்டோ ஓட்டுநராக முகேஷ் அம்பானி - ஏஐ உருவாக்கிய வீடியோ வைரல்...
அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்க வேண்டிய தமிழ் திகில் படங்கள்
அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்க வேண்டிய தமிழ் திகில் படங்கள்...
வைரல் வீடியோவால் மீண்டும் பெற்றோருடன் இணைந்த பச்சிளம் குழந்தை!
வைரல் வீடியோவால் மீண்டும் பெற்றோருடன் இணைந்த பச்சிளம் குழந்தை!...
பிரதமர் மோடி தலைமையில் அவசர கூட்டம்.. முப்படை தளபதிகள் பங்கேற்பு!
பிரதமர் மோடி தலைமையில் அவசர கூட்டம்.. முப்படை தளபதிகள் பங்கேற்பு!...
இந்திய வேளாண்மையில் டிஜிட்டல் புரட்சி: பதஞ்சலி ஆராய்ச்சி
இந்திய வேளாண்மையில் டிஜிட்டல் புரட்சி: பதஞ்சலி ஆராய்ச்சி...