Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Pooja Hegde : கூலி படத்தில் ஸ்பெஷல் பாடல்.. கண்டிப்பா ஹிட்டாகும்.. நடிகை பூஜா ஹெக்டே!

Coolie Movie : டோலிவுட் சினிமாவில் பிரபல நாயகியாக இருந்துவந்த நடிகை பூஜா ஹெக்டே, தற்போது தமிழிலும் மாபெரும் திரைப்படங்களில் முக்கிய தோற்றத்திலும், பாடல்களிலும் பங்கேற்றுவருகிறார். மேலும் இவர் ரஜினிகாந்த்தின் கூலி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடியுள்ளார். அது குறித்து நடிகை பூஜா ஹெக்டே வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

Pooja Hegde : கூலி படத்தில் ஸ்பெஷல் பாடல்.. கண்டிப்பா ஹிட்டாகும்.. நடிகை பூஜா ஹெக்டே!
நடிகை பூஜா ஹெக்டேImage Source: X
barath-murugan
Barath Murugan | Published: 16 Apr 2025 15:30 PM

நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) , தமிழில் நடிகர் ஜீவாவின் முகமூடி  (Mugamoodi) என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். அதைத் தொடர்ந்து இவர் டோலிவுட் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். தற்போது டோலிவுட்டில் அந்த அளவிற்கு இவருக்குப் படங்கள் தற்போது அமையாத நிலையில், இந்தி மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இவர் நடிகர் சூர்யா (Suriya) மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் கூட்டணியில் உருவாகியுள்ள ரெட்ரோ (Retro) படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் நடிகர் விஜய்யின்(Vijay)  கடைசி படமான ஜன நாயகன் (Jana Nayagan) திரைப்படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் தமிழில் பிரம்மாண்ட படங்களில் நடித்துவந்த பூஜா ஹெக்டே, நடிகர் ரஜினிகாந்த்தின்  (Rajinikanth) முன்னணி நடிப்பில் உருவாகியுள்ள கூலி (Coolie) படத்தில் சிறப்புப் பாடல் ஒன்றிற்கு நடனமாடியுள்ளார்.

மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் கூலி படத்தில் நடனமாடியது குறித்தும், அந்த பாடல் குறித்தும் நடிகை பூஜா ஹெக்டே ஓபனாக பேசியுள்ளார். ரஜினிகாந்த்தின் கூலி படத்தில் நடனமாடிய பாடல் முழுவதும் ஸ்பெஷலாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

நடிகை பூஜா ஹெக்டே பேசிய விஷயம் :

தற்போது ரெட்ரோ படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்துவரும் நிலையில், நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் நேர்காணலில் கூலி படத்தில் நடித்ததை பற்றிக் கூறியுள்ளார். அதில் அவர் ” நான் கூலி திரைப்படத்தில் நடிக்கவில்லை, ஒரு கேமியோ தோற்றத்தில் தோன்றி சிறப்பு பாடல் ஒன்றிற்கு நடனமாடியுள்ளேன். இந்த பாடல் கண்டிப்பாக ஹிட் பாடலாகும். இந்த சிறப்புபப் பாடல் முழுக்க வேடிக்கை நிறைந்ததாக இருக்கும் என்று கூறியிருந்தார். மேலும் தமன்னாவின் காவலா பாடல் போல இந்த பாடல் இருக்காது, அது வேற வைப், கூலி படத்தில் நான் நடனமாடியுள்ள பாடல் வேற வைப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ்- ரஜினிகாந்த்தின் கூலி :

நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது திரைப்படம்தான் கூலி. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க, சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் இதுவரை நடித்திடாத முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் இவருடன் பான் இந்திய நடிகர்கள் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சௌபின் ஷாஹிர், ரெபா மோனிகா ஜான், மோனிஷா பிளெஸ்ஸி, மற்றும் நடிகர் அமீர்கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் பான் இந்தியப் பிரபல நடிகை பூஜா ஹெக்டே சிறப்புப் பாடல் ஒன்றில் நடனமாடியுள்ளார். பிரம்மாண்ட கதைக்களத்துடன் உருவாகிவரும் இந்த கூலி படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது.

பெங்களூருவை வச்சு செய்த வதேரா.. வெற்றி நடைப்போகும் ஷ்ரேயாஸ் படை!
பெங்களூருவை வச்சு செய்த வதேரா.. வெற்றி நடைப்போகும் ஷ்ரேயாஸ் படை!...
'தாஜ்மஹால் எனக்கு சொந்தமானது' - உரிமை கோரிய நபரால் பரபரப்பு
'தாஜ்மஹால் எனக்கு சொந்தமானது' - உரிமை கோரிய நபரால் பரபரப்பு...
வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா? - வாஸ்து சொல்லும் டிப்ஸ் இதுதான்
வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா? - வாஸ்து சொல்லும் டிப்ஸ் இதுதான்...
ப்ரொபோஸ் செய்யும் போது நீர்வீழ்ச்சியில் விழுந்த மோதிரம் - வைரல்!
ப்ரொபோஸ் செய்யும் போது நீர்வீழ்ச்சியில் விழுந்த மோதிரம் - வைரல்!...
ரூ.2,000-க்கு மேல் செய்யப்படும் UPI பரிவர்த்தனைகளுக்கு GST?
ரூ.2,000-க்கு மேல் செய்யப்படும் UPI பரிவர்த்தனைகளுக்கு GST?...
மருதமலை முருகன் கோயிலுக்கு போறீங்களா? முக்கிய அறிவிப்பு இதோ!
மருதமலை முருகன் கோயிலுக்கு போறீங்களா? முக்கிய அறிவிப்பு இதோ!...
'ஹேராம்' பட அனுபவங்களை பகிர்ந்துகொண்ட ராணி முகர்ஜி
'ஹேராம்' பட அனுபவங்களை பகிர்ந்துகொண்ட ராணி முகர்ஜி...
கிளாம்பாக்கம் நடை மேம்பாலத்தின் மதிப்பு ரூ.350 கோடியா..!
கிளாம்பாக்கம் நடை மேம்பாலத்தின் மதிப்பு ரூ.350 கோடியா..!...
யுவன் இசையில் விஜய் பாடிய முதல் பாடல் எது தெரியுமா?
யுவன் இசையில் விஜய் பாடிய முதல் பாடல் எது தெரியுமா?...
இளையராஜாவுக்கு மிஸ்ஸான தேசிய விருது? தேவர் மகனில் நடந்த சம்பவம்!
இளையராஜாவுக்கு மிஸ்ஸான தேசிய விருது? தேவர் மகனில் நடந்த சம்பவம்!...
சிறந்த காதல் படங்களின் லிஸ்ட் - உங்க பேவரைட் எது?
சிறந்த காதல் படங்களின் லிஸ்ட் - உங்க பேவரைட் எது?...