Pooja Hegde : நல்ல கதை கிடைத்தால் நடிப்பேன்.. நடிகை பூஜா ஹெக்டே சொன்ன தகவல்!

Allu Arjun And Pooja Hegde : பான் இந்திய நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. இவர் தற்போது தமிழ் மற்றும் இந்தி படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் தமிழில் ரெட்ரோ மற்றும் ஜன நாயகன் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர் அல்லு அர்ஜுனுடன் மீண்டும் படத்தில் நடிப்பதைப் பற்றிப் பேசியுள்ளார்.

Pooja Hegde : நல்ல கதை கிடைத்தால் நடிப்பேன்..  நடிகை பூஜா ஹெக்டே சொன்ன தகவல்!

நடிகை பூஜா ஹெக்டே

Published: 

19 Apr 2025 14:12 PM

நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde)  முகமூடி (Mugamoodi) படத்தைத் தொடர்ந்து, சுமார் 10 வருடங்களுக்குப் பின் விஜய்யின் (Vijay ) பீஸ்ட் (Beast) படத்தின் மூலம் தமிழில் மீண்டும் நடிக்கத் தொடங்கினர். மேலும் தற்போது இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி திரைப்படங்களிலும் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார். இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் பக்கம் சென்றார் பூஜா ஹெக்டே. இவருக்குத் தமிழை விட தெலுங்கில் பல சூப்பர் ஹிட் படங்கள் அமைந்தது, அல்லு அர்ஜுன் (Allu Arjun)  முதல் பிரபாஸ் வரை பல நடிகர்களுடன் இணைந்து தெலுங்கில் படங்களில் நடித்துள்ளார். மேலும் அதீத வரவேற்பைப் பெற்ற இவருக்கு, அதைத் தொடர்ந்து தெலுங்கில் வாய்ப்புகள் குறையத் தொடங்கியது. மேலும் தற்போது அவர் தெலுங்கில் படங்களில் நடித்து 3 வருடங்களுக்கும் மேல் ஆகிறது. மேலும் தெலுங்கில் இவரின் இறுதி வெற்றிப் படமாக அமைந்தது வைகுண்டபுரம்.

நடிகர் அல்லு அர்ஜுனுடன் இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கியிருந்தார்.இந்த படத்தை அடுத்தற்காக இவரின் அடுத்தடுத்த தெலுங்கு படங்கள் கடும் தோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் அல்லு அர்ஜுனுடன் மீண்டும் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு அவர் என்ன கூறியுள்ளார் எதிரியா? அவர் அதில் “நல்ல கதையும், நல்ல கதாபாத்திரமும் இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன்” என அவர் கூறியுள்ளார்.

அல்லு அர்ஜுன் -பூஜா ஹெக்டே படங்கள்

நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது பான் இந்திய நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். புஷ்பா 1 மற்றும் 2 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவருக்கு உலகளாவிய ரசிகர்கள் கிடைத்துள்ளனர். மேலும் தற்போது இவர் இயக்குநர் அட்லீ இயக்கத்திலும், சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இவர் நடிகை பூஜா ஹெக்டேவுடன் வைகுண்டபுரம் மற்றும் டிஜே போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை பூஜா ஹெக்டேவின் புதிய படங்கள்

நடிகர் சூர்யாவின் முன்னணி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள ரெட்ரோ படத்தில் அவருடன் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் என எல்லாம் முடிந்து, வரும் 2025, மே 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய்யின் முன்னணி நடிப்பில் உருவாகிவரும் ஜன நாயகன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படமும் வரும் 2026ம் ஆண்டு ஜனவரியில் வெளியாகிறது.

மேலும் தற்போது இவர் இந்தியில் நடிகர் வருண் தவானின் முன்னணி நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தெலுங்கு சினிமாவை தவிர்த்து, தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.