வதந்திகளை பரப்பாதீர்கள்… உடல் எடை குறைவு பற்றி நடிகை பவித்ரா லட்சுமி விளக்கம்
Actress Pavithra Lakshmi: சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் தமிழக ரசிகர்களிடையே பரிச்சையமானவர் நடிகை பவித்ரா லட்சுமி. இவரது சமீபத்திய புகைப்படங்கள் உடல் எடை குறைந்து இருப்பதைப் பார்த்து பல வதந்திகள் சமூக வலைதளத்தில் பரவத் தொடங்கியது.

நடிகை பவித்ரா லட்சுமி
தமிழ் சினிமாவில் இயக்குநர் மணிரத்னம் (Maniratnam) இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான ஓ காதல் கண்மணி படத்தின் மூலம் ரசிகர்ளிடையே தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார் நடிகை பவித்ரா லட்சுமி (Pavithra Lakshmi). அதனைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் வெளியான குக் வித் கோமாளி என்ற ஒரு குக்கிங் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பிரபலங்கள் கலந்துகொண்டு சமயல் போட்டியில் காமெடி கலந்து வெளியாகும் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிகழ்ச்சியில் இருக்கும் கோமாளிகளுடன் அவரது காமெடிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் தொடர்ந்து நடிக்கத் தொடங்கினார் நடிகை பவித்ரா லட்சுமி. படங்கள் மட்டும் இன்றி அவ்வப்போது சமூக வலைதளங்கள் மூலமாக ரசிகர்கள் உடன் எப்போதும் கனெக்ஷனில் இருக்கிறார் பவித்ரா லட்சுமி.
இந்த நிலையில் மலையாளத்தில் 2022-ம் ஆண்டு வெளியான உல்லாசம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனார் நடிகை பவித்ரா லட்சுமி. மேலும், இந்தப் படத்தில் நடிகர் ஷான் நிக்கோம் நாயகனாக நடித்திருந்தார். இதில் நாயகியாக பவித்ரா லட்சுமி நடித்திருந்தார். படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டு தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் யுகி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படமும் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது அதனைத் தொடர்ந்து தமிழில் இயக்குநர் அரன் இயக்கத்தில் வெளியான ஜிகிரி தோஸ்த் படத்தில் நடித்தார்.
நடிகை பவித்ரா லட்சுமியின் நடிப்பில் இறுதியாக கடந்த 2024-ம் ஆண்டு இயக்குநர் பிரசாந்த் முருகன் இயக்கத்தில் நடிகர் பரத் நடிப்பில் வெளியான ஒன்ஸ் அப்பான டைம் இன் மெட்ராஸ் படத்தில் நடித்திருந்தார். படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து நடிகை பவித்ரா லட்சுமியின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது.
நடிகை பவித்ரா லட்சுமியின் இன்ஸ்டாகிராம் பதிவு:
அதில் அவர் உடல் எடை மெலிந்து காட்சியளித்தார். அதனைப் பார்த்தவர்கள் சமூக வலைதளத்தில் பல வதந்திகள் பரவத் தொடங்கியது. இதனை மறுக்கும் விதமாக நடிகை பவித்ரா லட்சுமி ஒரு பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், தனது உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதனால் தான் தனக்கு உடல் எடை குறைந்ததாகவும் தன்னை பற்றி வதந்திகள் பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.