Nayanthara : அந்த ஹீரோவுடன் நடிக்க ரூ.18 கோடியைச் சம்பளமாகக் கேட்ட நயன்தாரா.. அதிர்ச்சியில் படக்குழு?
Nayantharas Shocking Salary : தமிழ் சினிமாவில் நம்பர் 1 கதாநாயகிகளில் ஒருவராக இருந்து வருபவர் நயன்தாரா. இவர் தமிழில் மட்டுமில்லாமல் பான் இந்திய அளவில் பிரபலமாக இருந்து வருகிறார். இவர் சமீபத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டாருடன் நடிப்பதற்கு ரூ.18 கோடியைச் சம்பளமாகக் கேட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது, அது குறித்துப் பார்க்கலாம்.

நடிகை நயன்தாரா (Nayanthara) என்றாலே தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த நடிகை என்பது அனைவருக்கும் தெரியும். ஆண்டுக்கு சுமார் 5 முதல் 6 படங்கள் வீதம் பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான படம் டெஸ்ட் (Test). இந்த திரைப்படத்தில் நடிகர் ஆர். மாதவனுக்கு (R. Madhavan) ஜோடியாக நடித்திருந்தார். இந்த படமானது திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக நெட்பிளிக்ஸில் (Netflix) வெளியானது. ஓடிடியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகியுள்ளார். கன்னடத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகிவரும் டாக்சிக் (Toxic) படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிப்பதற்கு அவர் ரூ.10 கோடிக்கும் அதிகமாகச் சம்பளம் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான தகவலின்படி, நடிகை நயன்தாரா சுமார் 69 வயது தக்க நடிகர் ஒருவருடன் நடிப்பதற்கும் சுமார் ரூ. 18 கோடிகளைச் சம்பளமாகக் கேட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த நடிகர் வேறு யாருமில்லை தெலுங்கு பிரபல நடிகர் சிரஞ்சீவிதான் (Chiranjeevi) என்று கூறப்படுகிறது. இந்த தகவல்களானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை நயன்தாராவின் இன்ஸ்ட்டாகிராம் பதிவு :
View this post on Instagram
நடிக சிரஞ்சீவியின் இந்த படத்தை பிரபல இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷ்ன் பணிகள் நடந்துவரும் நிலையில், நடிகைக்கான தேடுதல்கள் நடந்து வந்துள்ளது. அப்போது நடிகை நயன்தாராவிடன் இந்த படத்தில் நடிப்பதற்காகக் கேட்டபோது அவர், படத்தில் நடிப்பதற்கு சுமார் ரூ. 18 கோடிகளைச் சம்பளமாகக் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த தகவலானது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. தென்னிந்திய சினிமாவிலேயே சுமார் ரூ. 10 கோடிகளுக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெயரைப் பெற்றவர் நயன்தாரா. மேலும் இவர் நடிகர் சிரஞ்சீவியுடன் நடிப்பதற்கு சுமார் ரூ 18 கோடியைச் சம்பளமாக கேட்டது படக்குழுவினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகை நயன்தாரா தமிழில் மட்டுமே சுமார் 4 திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அந்த திரைப்படங்களில் அவர்தான் லீட் ரோலில் சிறப்பாக நடித்து வருகிறார். இயக்குநர் சுந்தர் சியின் இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் அம்மனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜைகள் சமீபத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இதைத் தொடர்ந்து படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து நடிகை நயன்தாராவின் கைவசம் மட்டும் சுமார் 6 படங்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.