அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில் நாயகி இவரா? வைரலாகும் தகவல்
Actress Mrunal Thakur: சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. படம் அறிவிப்பு வெளியான இரண்டு வாரங்களுக்குப் பிறகு, நடிகை மிருணாள் தாக்கூர் படத்தின் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக இறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரைத் தவிற இந்தப் படத்தில் இன்னும் இரண்டு நாயகிகள் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது

இயக்குநர் சுகுமாரன் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் (Allu Arjun) நடித்த புஷ்பா 2 படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு தற்போது அவர் தனது அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இயக்குனர் அட்லியுடன் (Atlee) நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு நடிகரின் பிறந்த நாளான ஏப்ரல் மாதம் 8-ம் தேதி 2025-ம் ஆண்டு அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. நடிகர் அல்லு அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. படம் அறிவிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு, இந்த படத்தில் மூன்று பெண் கதாநாயகிகளில் ஒருவராக நடிகை மிருணாள் தாக்கூர் இறுதி செய்யப்பட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை மிருணாள் தாக்கூர் தவிர, மேலும் இரண்டு பாலிவுட் நடிகைகள் இந்தப் படத்திற்கு பரிசீலிக்கப்படுவதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது. பீப்பிங்மூன் (Peepingmoon) வெளியிட்ட செய்தியின் அறிக்கையின்படி, VFX ஆக்ஷனராகக் கருதப்படும் இந்தப் படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் காதல் ஜோடியாக நடித்துள்ளார்.
நடிகை மிருணாள் தாக்கூர் இன்ஸ்டா பதிவு:
View this post on Instagram
இரு வேறு கிரகங்களில் நடக்கும் கதையாக உள்ள இந்தப் படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் இரட்டை வேடத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இயக்குநர் அட்லி இந்தப் படத்திற்காக லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த முன்னணி ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.
நடிகை மிருணாள் தாக்கூரைத் தவிர, இந்தப் படத்தில் நடிக்க நடிகைகள் தீபிகா படுகோனே மற்றும் ஜான்வி கபூர் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் கூறப்படுகிறது. இதில் நடிகை ஜான்வி கபூர் விரைவில் இந்தப் படத்தில் கையெழுத்திட வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நடிகை தீபிகா படுகோனே உடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றும் தற்போது படத்தின் ப்ரீ புரெக்ஷன் பணிகள் தொடங்கிவிட்டது. இருப்பினும், அதன் படப்பிடிப்பு எப்போது தொடங்க உள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி 2025-ம் ஆண்டு சன் பிக்சர்ஸ் நிறுவனம் அல்லு அர்ஜுன் – அட்லி படத்தின் அறிவிப்பு வீடியோவைப் பகிர்ந்து கொண்டது.
இது தற்காலிகமாக A22xA6 என்று பெயரிடப்பட்டுள்ளது. யூடியூப்பில் வீடியோவைப் பகிரும்போது, தயாரிப்பாளர்கள், “A22xA6, ஒரு மைல்கல் சினிமா நிகழ்விற்கு தயாராகுங்கள். சன் பிக்சர்ஸ் தயாரித்தது. ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிக்கிறார். அட்லியின் படம் என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தது.