ரயிலில் முத்தம் கேட்ட நபர்… நடிகை மாளவிகா மோகனன் பகிர்ந்த அதிர்ச்சி சம்பவம்

Malavika Mohanan about Stranger Asked Kiss: சமீபத்தில் ஒரு நேர்காணலில், ரயிலில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் ஏற்பட்ட  கசப்பான அனுபவம் குறித்து நடிகை மாளவிகா மோகனன், அந்த தருணத்திற்கு பிறகு எந்த இடமும் ஒரு பெண்ணுக்கு முழுமையாகப் பாதுகாப்பானது அல்ல என்று உணர்ந்ததாக அவர் கூறியுள்ளார்.

ரயிலில் முத்தம் கேட்ட நபர்... நடிகை மாளவிகா மோகனன் பகிர்ந்த அதிர்ச்சி சம்பவம்

நடிகை மாளவிகா மோகனன்

Published: 

20 Apr 2025 08:03 AM

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பான் இந்திய நடிகையாக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தற்போது நடிகர் கார்த்தி உடன் சர்தார் 2 மற்றும் பிரபாஸ் உடன் தி ராஜா சாப் என இரண்டு படங்களில் நடித்து வருகிறா. 2013-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பட்டம் போலே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனார் மாளவிகா மோகனன். இதில் நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து மலையாளம், இந்தி மற்றும் கன்னட மொழிகளில் நடித்த வந்த நடிகை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தமிழில் 2019-ம் ஆண்டு வெளியான பேட்ட படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இதில் நடிகர் ரஜினிகாந்த் நாயகனாக நடித்திருந்தார்.

அவருடன் இணைந்து நடிகர்கள் சசிக்குமார், த்ரிஷா, சிம்ரன் என பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் சசிக்குமாரின் மனைவியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்திருந்தார். தமிழில் அறிமுகம் ஆன முதல் படத்திலேயே கல்லூரி படிக்கும் இளைஞருக்கு அம்மாவாக நடித்தது ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றுத் தந்தது.

அதனைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் நாயகியாக நடித்தார் மாளவிகா மோகனன். இதில் நடிகை மாளவிகா மோகனனின் நடிப்பு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இறுதியாக தமிழில் தங்கலான் படத்தில் நடித்தார் நடிகை மாளவிகா மோகனன்.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை மாளவிகா மோகனன் அளித்த பேட்டி ஒன்றில் தான் கல்லூரியில் படிக்கும் போது ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து பேசியுள்ளார். அதில், “மும்பை நகரம் பெண்களுக்குப் பாதுகாப்பானது என்று மக்கள் அடிக்கடி கூறுகிறார்கள். ஆனால் அந்தக் கருத்தை நான் சரிசெய்ய விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மாளவிகா மோகனன் இன்ஸ்டா பதிவு:

ஏன் என்றால் இன்று எனக்குச் சொந்தக் காரும் ஒரு ஓட்டுநரும் உள்ளனர். எனவே மும்பை பாதுகாப்பானதா என்று யாராவது என்னிடம் கேட்டால், நான் ஆம் என்று சொல்லலாம். ஆனால் நான் கல்லூரியில் படிக்கும் போது பேருந்துகளிலும் ரயில்களிலும் பயணம் செய்தபோது மும்பை நகரம் ​​எனக்குப் பாதுகாப்பாகத் தெரியவில்லை.

ஒரு முறை நானும் என் தோழிகள் இருவரும் ஒரு லோக்கல் ரயிலில் சென்று கொண்டிருந்தோம். இரவு 9.30 மணி இருக்கும் என்று நினைக்கிறேன். நாங்கள் ஃபர்ட்ஸ் கிளாசில் இருந்தோம். எனவே, பெட்டி மிகவும் காலியாக இருந்தது. உண்மையில் எங்கள் மூவரையும் தவிர வேறு யாரும் இல்லை. நாங்கள் ஜன்னல் கிரில்களில் ஒன்றின் அருகே அமர்ந்திருந்தோம். அப்போது கிரில்லுக்கு மிக அருகில் வந்து ஒருவர் கிரில்லில் முகத்தை ஒட்டிக்கொண்டு எனக்கு ஒரு முத்தம் தருவாயா?” என்று கேட்டதாக நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.