எக்ஸ் அக்கவுண்டை ஹேக் செய்தவரிடம் இருந்து வந்த மெசேஜ்… நடவடிக்கை எடுக்கக் கோரி குஷ்பு கோரிக்கை

நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு சுந்தர் தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து தனக்கு இந்த செய்தி வந்ததாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அந்தப் பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

எக்ஸ் அக்கவுண்டை ஹேக் செய்தவரிடம் இருந்து வந்த மெசேஜ்... நடவடிக்கை எடுக்கக் கோரி குஷ்பு கோரிக்கை

குஷ்பு

Updated On: 

20 Apr 2025 08:02 AM

நடிகை குஷ்புவின் (Kushboo) எக்ஸ் (ட்விட்டர்) அக்கவுண்டை ஹேக் செய்தவர் அவருக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட நடிகை குஷ்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் 1988-ம் ஆண்டு நடிகர்கள் ரஜினிகாந்த (Rajinikanth) மற்றும் பிரபு நடிப்பில் வெளியான தர்மத்தின் தலைவன் என்ற படத்தில் மூலம் நடிகையாக கோலிவுட் சினிமாவில் அறிமுகம் ஆனார் நடிகை குஷ்பு. அதனைத் தொடர்ந்து 1989-ம் ஆண்டு வருஷம் 16 படத்தில் நடிகர் கார்திக்கு நாயகியாக நடித்தார் குஷ்பு. இதனைத் தொடர்ந்து கிழக்கு வாசல், மை டியர் மார்த்தாண்டம், மைக்கேல் மதன காமராஜன், சின்னதம்பி, அண்ணாமலை, மன்னன், நாட்டாமை, முறை மாமன் என பல ஹிட் படங்களில் நடித்துள்ளார் நடிகை குஷ்பு.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல் ஹாசன், கார்த்திக், பிரபு, சத்யராஜ், சரத்குமார், லிவிங்ஸ்டன், ஜெயராம் என பலருடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். தொடர்ந்து 2000-ம் ஆண்டு வரை நாயகியாக நடித்து வந்த குஷ்பு அதனை தொடர்ந்து படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் வந்து நடனம் ஆடுவது, அம்மா கதாப்பாத்திரம், அக்கா, அண்ணி என நடிக்கத் தொடங்கினார்.

வெள்ளித்திரை மட்டும் இன்றி சின்னத்திரையில் சீரியல்களில் நடிப்பது, ரியாலிட்டி ஷோக்களுக்கு நடுவராக இருப்பது என்று தொடர்ந்து பணியாற்றி வந்தார். இதற்கு இடையில் அரசியலில் களம் இறங்கிய அவர் சினிமா அரசியல் என இரண்டையும் தற்போது ஒரே நேரத்தில் கவனித்து வருகிறார்.

தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வந்த நடிகை குஷ்பு இயக்குநர் சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் தனது எக்ஸ் தள அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக நடிகை குஷ்பு தற்போது அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், எனது எக்ஸ் தள அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பாஸ்வேட்ர்டை கொண்டு எனது அக்கவுண்டை பயன்படுத்த முயற்சி செய்தேன் ஆனால் அது வேலை செய்யவில்லை. மேலும் எனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் ஏதேனும் பதிவு வந்தால் அதை நான் போடவில்லை என்பதை மனதில் கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

நடிகை குஷ்பு வெளியிட்ட இன்ஸ்டா பதிவு:

மேலும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வாட்ஸ் ஆப் ஸ்கீர்ன் சார்ட்டையும் வெளியிட்டுள்ளார். அதில் குஷ்புவின் எக்ஸ் அக்கவுண்டை ஹேக் செய்தவர் ஹே குஷ்பு நான் தான் உங்கள் அக்கவுண்டை ஹேக் செய்துள்ளேன். ஆனால் இந்த அக்கவுண்டால் எனக்கு எந்த பலனும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஹேக்கர்கள் என்னுடைய எக்ஸ் தள அக்கவுண்டை கிரிப்டோ கரன்சிக்காகப் பயன்படுத்தி வருகின்றனர். எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, நான் அதை ஆதரிக்கவும் இல்லை என்று நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.