Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kayadu Lohar : சிம்புவிற்கு ஜோடியாக இணையும் கயாடு லோஹர்.. STR49 படக்குழு வெளியிட்ட நியூ அப்டேட் இதோ!

Silambarasan STR49 Update : தமிழ் சினிமாவில் டிராகன் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் கயாடு லோஹர். இந்த படத்தின் பிரபலத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த தமிழ் படங்களில் கதாநாயகியாகக் களமிறங்கியுள்ளார். இந்நிலையில் இவர் நடிகர் சிலம்பரசனின் STR49 படத்தில் நடிகையாக நடிக்கவுள்ளார். இந்த அறிவிப்பைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

Kayadu Lohar : சிம்புவிற்கு ஜோடியாக இணையும் கயாடு லோஹர்.. STR49 படக்குழு வெளியிட்ட நியூ அப்டேட் இதோ!
சிலம்பரசன் மற்றும் கயாடு லோஹர் Image Source: X
barath-murugan
Barath Murugan | Updated On: 27 Apr 2025 20:04 PM

நடிகர் சிலம்பரசனின் (Silambarasan) நடிப்பில் ரிலீசிற்கு தயாராகிவரும் படம் தக் லைப் (Thug Life). இந்த படத்தைப் பிரபல இயக்குநர் மணிரத்னம் (Mani Ratnam)  இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் (Kamal Haasan) முன்னணி கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், அவருக்கு இணையான ரோலில் சிலம்பரசன் நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து, ரிலீசிற்கு தயாராகி வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் நடிக்கவுள்ள படம் STR49. இந்த படத்தை பார்க்கிங் (Parking)  பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் (Ramkumar Balakrishnan) இயக்கவுள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு 2025, பிப்ரவரி மாதத்தில் வெளியாகியது. இந்த படத்தை அடுத்தாக STR 50 மற்றும் 51 போன்ற படங்களிலும் நடிக்கவுள்ளார். இதில் STR49 படமானது முதலில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தைப் பிரபல தயாரிப்பு நிறுவனமா டான் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது தயாரித்து வருகிறது. இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக மிருணாள் தாகூர் மற்றும் கயாடு லோஹர் நடிக்கவுள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகிவந்த நிலையில், படக்குழு நடிகை கயாடு லோஹர் (Kayadu Lohar) இந்த படத்தில் இணைந்துள்ளதை உறுதிசெய்துள்ளது. தற்போது இந்த அப்டேட் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது, மேலும் சிம்பு மற்றும் கயாடு லோஹரின் ஜோடி மிகவும் அருமையாக இருக்கும் என்று கூறி வருகின்றனர்.

டான் பிக்ச்சர்ஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :

பல நாட்களாக இந்த படத்தில் யார் கதாநாயகி என்று சந்தேகம் இருந்து வந்த நிலையில், படக்குழு நடிகை கயாடு லோஹர்தான் கதாநாயகி என்று உறுதி செய்துள்ளது. இதைத் தொடர்ந்த அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 2025 ஏப்ரல் இறுதியில் பெரிய அப்டேட் ஒன்று வெளியாகும் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த STR 49 படமானது கல்லூரி சார்ந்தக் கதைக்களத்துடன் அமையும் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்காக இளம் இசையமைப்பாளர் சாய் அபியங்கர் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்காக 3 பாடல்கள் தயாராகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் வரும் 2025, மே மாதத்தின் இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் STR 50 படத்திலும், டிராகன் பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவின் இயக்கத்தில் STR 51 படத்திலும் நடிக்கவுள்ளனர். இந்த STR 51 படத்தின் ஷூட்டிங் வரும் 2025, ஜூன் மாதத்தில் தொடங்கவிருப்பதாக இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கத்தை உருக்கி நொடி பொழுதில் பணமாக தரும் மெஷின் - வைரல் வீடியோ!
தங்கத்தை உருக்கி நொடி பொழுதில் பணமாக தரும் மெஷின் - வைரல் வீடியோ!...
கை பம்ப் மூலம் விமானத்திற்கு காற்றடித்த விமானி!
கை பம்ப் மூலம் விமானத்திற்கு காற்றடித்த விமானி!...
ஹல்தி விழாவில் டைனோசர் உடையணிந்து வந்த மணப்பெண் வீடியோ வைரல்!
ஹல்தி விழாவில் டைனோசர் உடையணிந்து வந்த மணப்பெண் வீடியோ வைரல்!...
அந்நியன் படத்தில் நடித்தது எனக்குத் தொந்தரவாக இருந்தது- விக்ரம்!
அந்நியன் படத்தில் நடித்தது எனக்குத் தொந்தரவாக இருந்தது- விக்ரம்!...
குட்டி யானைக்கு சாப்பிட சொல்லி தரும் தாய் யானை - வைரல் வீடியோ!
குட்டி யானைக்கு சாப்பிட சொல்லி தரும் தாய் யானை - வைரல் வீடியோ!...
பாகிஸ்தான் உடனான அனைத்து வர்த்தக உறவுகளும் துண்டிப்பு!
பாகிஸ்தான் உடனான அனைத்து வர்த்தக உறவுகளும் துண்டிப்பு!...
சிம்புவுடன் நடிக்கணும்னா ஒரு கண்டிஷன்.. ஹரிஷ் கல்யாண் சொன்ன பதில்
சிம்புவுடன் நடிக்கணும்னா ஒரு கண்டிஷன்.. ஹரிஷ் கல்யாண் சொன்ன பதில்...
தமிழக அமைச்சரவை மாற்றம்.. பொன்முடி, செந்தில்பாலாஜி ராஜினாமா..
தமிழக அமைச்சரவை மாற்றம்.. பொன்முடி, செந்தில்பாலாஜி ராஜினாமா.....
செப்சிஸ் போன்ற தொற்றுநோய்களுக்கு ஆயுர்வேத சிகிச்சை-பதஞ்சலி தகவல்
செப்சிஸ் போன்ற தொற்றுநோய்களுக்கு ஆயுர்வேத சிகிச்சை-பதஞ்சலி தகவல்...
தமிழ் சினிமாவின் சிறந்த டான்ஸர்.. நானி சொன்னது யாரை தெரியுமா?
தமிழ் சினிமாவின் சிறந்த டான்ஸர்.. நானி சொன்னது யாரை தெரியுமா?...
STR49ல் சிம்புவிற்கு ஜோடியாக இணையும் கயாடு லோஹர்!
STR49ல் சிம்புவிற்கு ஜோடியாக இணையும் கயாடு லோஹர்!...