மீண்டும் சிக்கலில் கங்கனா ரனாவத்தின் எமர்ஜென்சி படம்… என்ன நடந்தது?
Actress Kangana Ranaut: நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா ரனவாத் சமீபத்தில் எமர்ஜென்சி என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ஓடிடியில் வெளியாகியும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுவந்த நிலையில் தற்போது புதிய சிக்கலி சிக்கியுள்ளது.

எமர்ஜென்சி படம்
இந்தியில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கங்கனா ரனாவத் (Kangana Ranaut). இவர் தமிழில் இயக்குநர் ஜீவா இயக்கத்தில் 2008-ம் ஆண்டு வெளியான தாம் தூம் படம் மூலம் கோலிவுட் ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகர் ரவி மோகன் நாயகனாக நடித்திருந்தார். படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்த நிலையில் கங்கனா ரனாவத் தனது கடைசி வெளியீடான ‘எமர்ஜென்சி’ (Emergency) படத்திற்காக புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான கூமி கபூர், கங்கனா ரனாவத்தின் மணிகர்ணிகா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃபிக்ஸ் மீது வழக்குத் தொடர்ந்தார். கங்கனாவின் படம் அவரது ‘தி எமர்ஜென்சி: எ பெர்சனல் ஹிஸ்டரி’ புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது என்று கூறி, அவர்களின் ஒப்பந்தத்தை மீறியதாகவும், அவரது நற்பெயருக்கு சேதம் விளைவித்ததாகவும் குற்றம் சாட்டினார்.
பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியின்படி , கூமி கபூர் மணிகர்ணிகா பிலிம்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். மேலும், எமர்ஜென்சி படம் தனது புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது என்று கூறி தயாரிப்பு நிறுவனம் தனது பெயரைப் பயன்படுத்தி ஒப்பந்தத்தை மீறியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மாதம் 3 ஆம் 2025-ம் ஆண்டு தேதி கங்கனாவின் படக்குழுவிற்கும் ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸுக்கும் அனுப்பிய நோட்டீஸ் அனுப்பி எந்த பதிலும் கிடைக்காததால் அவர் இந்த வழக்குத் தொடர்ந்துள்ளார். “என் மகள் ஒரு வழக்கறிஞர், எனவே அவரது ஆலோசனையின் பேரில், நான் இரண்டு பிரிவுகளைச் இந்த வழக்கில் சேர்த்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படத்தை உருவாக்க தயாரிப்பாளர்களுக்கு முழு கலை சுதந்திரம் இருந்தபோதிலும், பொதுவில் கிடைக்கும் வரலாற்று உண்மைகளுக்கு முரணான எதையும் மாற்றக்கூடாது,” என்று கூமி கபூர் அந்த செய்தியில் கூறியுள்ளார்.
ஜனவரி மாதம்-ம் 17-ம் தேதி 2025-ம் ஆண்டு அன்று திரையரங்குகளில் எமர்ஜென்சி படம் வெளியிடப்பட்டது. இதில் முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார். மேலும் 1975 முதல் 1977 வரை இந்திரா காந்தி விதித்த 21 மாத கால அவசரநிலையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை கங்கனா ரனாவத் இய்கவும் செய்திருந்தார். இவரைத் தவிற எமர்ஜென்சி படத்தில் நடிகர்கள் ஜெயபிரகாஷ் நாராயணனாக அனுபம் கெர், அடல் பிஹாரி வாஜ்பாயாக ஷ்ரேயாஸ் தல்படே, ஃபீல்ட் மார்ஷல் சாம் மானேக்ஷாவாக மிலிந்த் சோமன், புபுல் ஜெயகராக மஹிமா சவுத்ரி மற்றும் சஞ்சய் காந்தியாக விஷக் நாயர் ஆகியோரும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.