Cinema Rewind : எனக்கு நடிக்கவே ஆசை இல்லை.. எல்லாம் அவரால்தான்.. நடிகை ஜோதிகா பேச்சு!
Actress Jyothika : தமிழ் சினிமாவில் பிரபல கதாநாயகியாக இருந்து வந்தவர் நடிகை ஜோதிகா. தற்போது இவர் இந்தி படங்களில் நடிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறார். இவர் பழைய வீடியோ ஒன்றில் தான் நடிப்பதற்குக் காரணம் யார் என்றும், எப்போது நடிக்க தொடங்கினேன் என்றும் கூறியுள்ளார். அது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

நடிகை ஜோதிகா (Jyothika) தமிழில் இறுதியாக உடன்பிறப்பே (Udanpirappe) என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். கடந்த 2021ம் ஆண்டில் வெளியான இப்படத்தைப் பிரபல இயக்குநர் இரா. சரவணன் (Ira. Saravanan) இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் நடிகர் சமுத்திரக்கனியின் மனைவியாகவும், சசிகுமாரின் தங்கை கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து கடந்த 4 வருடங்களாக எந்த தமிழ்ப் படங்களிலும் இவர் நடிக்கவில்லை. அதற்குப் பதிலாக மலையாளம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் படங்களில் நடித்து வருகிறார். தற்போது குடும்பத்துடன் மும்பையில் செட்டிலாகிவிட்டார். இதைத் தொடர்ந்து பல இந்தி படங்களிலும், வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். தமிழில் எஸ்.ஜே. சூர்யாவின் வாலி (Vaali) படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து உச்ச நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, பிரபு, சரத்குமார் என பல்வேறு பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார். சினிமாவில் நடிகையாவதற்கு யார் காரணம் என நடிகை ஜோதிகா பேசிய பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அது குறித்து முழுமையாகப் பார்க்கலாம்.
நடிகை ஜோதிகாவின் சினிமா நுழைவிற்கு யார் காரணம் :
நடிகை ஜோதிகா அந்த வீடியோவில் “எனக்கு சினிமாவில் நடிக்கவேண்டும் என்று சிறுவயதில் இருந்து ஆசையெல்லாம் கிடையாது. எனக்குப் படத்தில் நடிக்கும் முதல் வாய்ப்பு நான் காலேஜில் முதலாம் ஆண்டு படிக்கும்போது கிடைத்தது, அந்த வாய்ப்பிற்குக் காரணம் எனது அக்கா நக்மாதான். அவரை உதாரணமாக வைத்துத்தான் நானும் படங்களில் நடிக்கத்தொடங்கினேன், அதன் பிறகுதான் தமிழ் படங்களில் நடிக்கத்தொடங்கினேன்.
மேலும் தமிழில் ஆரம்பத்தில் மிகவும் நடிப்பதற்குக் கஷ்டப்பட்ட படம் குஷி. இந்த படத்தில் நான் பொறாமை நிறைந்த பெண்ணாக, அதாவது கோபக்கார பெண்ணாக நடிக்கவேண்டும். அந்த சமயத்தில் தமிழ் மொழி எனக்குச் சுத்தமாகத் தெரியாது. அந்த படத்தில் நடிக்கும் போது தான் நான் மிகவும் கஷ்டப்பட்டேன் என்று நடிகை ஜோதிகா தெரிவித்திருந்தார்.
மீண்டும் இந்தி படங்களில் நடிகை ஜோதிகா :
கடந்த 4 வருட காலமாக நடிகை ஜோதிகா எந்த ஒரு தமிழ்த் திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. அதற்குக் காரணம் அவரிடம் கேட்டபோது, பெண் நடிகைகளுக்குத் தமிழ் சினிமாவில் பாதுகாப்பு இல்லை என்று அவர் கூறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது இந்தியில் அவர் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
அவர் இறுதியாக சைத்தான் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படமானது மக்களிடையே ஓளரவு வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது பாலிவுட் இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படமானது அமேசன் ப்ரைம் வீடியோவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.