அஜித் கூட முதல் படத்திலிருந்தே ஈசியா கனெக்ட் ஆகிட்டேன்… நடிகை ஜோதிகா சொன்ன விசயம்
Actress Jyothika About Ajith: தமிழ் சினிமாவில் நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா, மாதவன், விக்ரம், சிலம்பரசன், ரஜினிகாந்த், கமல் ஹாசன், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்தார் நடிகை ஜோதிகா. இவர்கள் கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

நடிகை ஜோதிகா மும்பையில் 18-ம் தேதி அக்டோபர் மாதம் 1978-ம் ஆண்டு பிறந்தார். அவர் இந்தியில் 1997-ம் ஆண்டு வெளியான டோலி சஜா கே ரக்னா என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தை இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கி இருந்தார். அதனைத் தொடர்ந்து 1999-ம் ஆண்டு இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்த வாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார். அந்தப் படத்தில் நாயகி சிம்ரன் என்றாலும் அஜித்தின் காதலி என்று அவர் கூறும் ஒரு கதைக்கு நடிகை ஜோதிகா நடித்திருந்தார். இந்த கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் வசந்த் இயக்கத்தில் 1999-ம் ஆண்டு வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக நடித்தார் நடிகை ஜோதிகா. இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்திருந்தார்.
நடிகை ஜோதிகா நடித்த படங்கள்:
இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய நடிகையாக பல படங்களில் நடிகை ஜோதிகா நடித்தார். 2000-ம் ஆண்டு இயக்குநர் வி.இசட்.துரை இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நாயகனாக நடித்த முகவரி படத்திலும் நடிகை ஜோதிகா நாயகியாக நடித்தார்.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் குஷி, ரிதம், உயிரிலே கலந்தது, தெனாலி, ஸ்நேகிதியே, லிட்டில் ஜான், டும் டும் டும், ஸ்டார், பூவெல்லாம் உன் வாசம், 12 பி, ராஜா, 1 2 3, தூள், பிரியமான தோழி, திருமலை, 3 ரோசஸ், அருள், பேரழகன், மன்மதன், மாயாவி, சந்திரமுகி, வேட்டையாடு விளையாடு, சில்லுனு ஒரு காதல், மொழி, பச்சைக்கிளி முத்துச்சரம் என தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்தார்.
சூர்யாவை திருமணம் செய்த ஜோதிகா:
இதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவை காதலித்து வந்த நடிகை ஜோதிகா கடந்த 2006-ம் ஆண்டு இரண்டு குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். அதனைத் தொடர்ந்து இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர். திருமண வாழ்க்கைக்கு பிறகு சிறிது காலம் நடிப்பில் இருந்து விலகி இருந்தார் நடிகை ஜோதிகா.
மீண்டும் நடிக்கத் தொடங்கிய ஜோதிகா:
நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போது ஜோதிகா மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து தற்போது தமிழிலும் இந்தியிலும் படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் முன்னதாக நடிகர் அஜித் உடன் இணைந்து நடித்தது குறித்து நடிகை ஜோதிகா பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.
அதில் அவர் பேசியதாவது. சூர்யாவுடன் நடித்த பூவெல்லாம் கேட்டுப்பார் படம் தான் தமிழ் சினிமாவில் முதல் படம் என்றாலும் நடிகர் அஜித் உடன் நடித்த வாலி படம் தான் முதலில் வெளியானது. எனக்கு அப்போது அவர்கூட ஈசியா கனெக்ட் ஆச்சு. ஏனா இந்தி பேசுற ஒரே தமிழ் நடிகர் அவர்தான் அப்போ.
அவர் மட்டும் இன்றி அவருடைய குடும்பத்தினருடன் எனது அம்மா மிகவும் நெறுக்கமாக இருந்தார். அவர் தான் தமிழ் சினிமாவில் எனக்கு கிடைத்த முதல் நண்பர் என்றும் நடிகை ஜோதிகா பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.