Janani Iyer : பிரம்மாண்டமாக நடந்த நடிகை ஜனனி ஐயரின் நிச்சயதார்த்தம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

Actress Janani Iyer Engagement : தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல கதாநாயகியாக இருந்து வருபவர் ஜனனி ஐயர். இவர் தமிழில் அவன் இவன் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துவந்த இவருக்கு இன்று 2025, ஏப்ரல் 16ம் தேதியில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அவரின் வருங்கால கணவர் யார் என்பது குறித்து முழுமையாகப் பார்க்கலாம்.

Janani Iyer : பிரம்மாண்டமாக நடந்த நடிகை ஜனனி ஐயரின் நிச்சயதார்த்தம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

ஜனனி ஐயர் மற்றும் சாய் ரோஷன் ஷ்யாம்

Published: 

16 Apr 2025 21:29 PM

தமிழ் சினிமாவில் இயக்குநர் பாலாவின் (Bala)  இயக்கத்தில் வெளியான அவன் இவன்  (Avan Ivan) படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜனனி ஐயர் (Janani Iyer) . இந்த படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமானார். இந்த படத்தை அடுத்தாக இவர்  நாயகியாக நடித்த திரைப்படம் தெகிடி (Thegidi) . கடந்த 2014ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் நடிகர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்துப் பிரபலமானார். இந்த படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் கதாநாயகியாக நடித்து வந்தார். அதைத் தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு வெளியான பிக் பாஸ் சீசன் 2ல் போட்டியாளராகப் பங்கேற்றுப் பிரபலமானார். நடிகை ஜனனி ஐயர், இன்று 2025, 16ம் தேதியில் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டுள்ளார். அவரின் வருங்கால கணவரின் பெயர் சாய் ரோஷன் ஷ்யாம் (Sai Roshan Shyam) ஆகும். அவர் என்ன வேலை பார்க்கிறார் தெரியுமா?, அவர் விமானி ஆவார்.

இன்று திருமணம் நிச்சயமான நிலையில், வருங்கால கணவர் சாய் ரோஷன் ஷ்யாம் உடன் இருக்கும் புகைப்படங்களைத் தனது இணையப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இவருக்குப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை ஜனனி ஐயர் வெளியிட்ட நிச்சயதார்த்தம் புகைப்படங்கள் :

இந்த பதிவின் கீழ் நடிகை ஜனனி ஐயர் “இன்றும் என்றென்றும்” என்று பதிவிட்டுள்ளார். நடிகை ஜனனி ஐயர், தனது வருங்கால கணவர் சாய் ரோஷன் ஷ்யாம் உடன் இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்ப் படங்கள் :

நடிகை ஜனனி ஐயர் தமிழில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்துவந்தார். நடிகர் அசோக் செல்வனின் தெகிடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிய இவர், அதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் அவன் இவன் படத்தின் மூலம் பிரபலமானாலும், அதற்கு முன் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் உதவி இயக்குநராக விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதன் பிறகுதான், இயக்குநர் பாலாவின், அவன் இவன் படத்தில் முக்கிய தோற்றத்தில் நடித்திருந்தார்.

பிக் பாஸ் சீசன் 2:

நடிகை ஜனனி ஐயர், கடந்த 2018ம் ஆண்டு வெளியான பிக் பாஸ் சீசன் 2ல் போட்டியில் பங்கேற்றுள்ளார். இந்த போட்டியில் 4வது ரன்னர் பட்டத்தைப் பெற்றார். அதை தொடர்ந்து பல படங்களில் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இறுதியாக ஹாட்ஸ் ஸ்பாட் என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் இந்த படமானது ஓரளவு வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.