கணவர் ரித்தேஷ் தேஷ்முக் குறித்து வெளிப்படையாக பேசிய ஜெனிலியா…
Actress Geneliea about Riteish Deshmukh: மீம்ஸ் கலாச்சாரம் தொடங்கிய பிறகு ஜெனிலியாவின் பல ரியாக்ஷன்கள் அதில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உண்மையை கூறவேண்டும் என்றால் தமிழ் சினிமாவில் அதிக அளவில் ஜெனிலியா நடிக்கவில்லை என்றாலும் அவர் இன்றளவு பிரபலமானவராகவே உள்ளார் என்பது நிதர்சனமான உண்மை.

ரித்தேஷ் தேஷ்முக், ஜெனிலியா
நடிகை ஜெனிலியா (Genelia) திருமண வாழ்க்கை குறித்தும் தனது கணவர் ரித்தேஷ் தேஷ்முக்கின் (Riteish Deshmukh) சிறந்த குணங்கள் குறித்தும் முன்னதாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது. மும்பையில் கடந்த 1987-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி பிறந்தார் நடிகை ஜெனிலியா. இவரது இயற்பெயர் ஹரிணி. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்து பான் இந்திய நடிகையாக இருக்கிறார். தமிழில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் (Boys Movie) படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் ஜெனிலியா. இந்தப் படத்தில் இவரது உண்மையான பெயரான ஹரிணி என்ற பெயரிலியே நடித்திருப்பார். தமிழில் ஜெயம் ரவியுடன் சந்தோஷ் சுப்ரமணியம் படத்திலும், விஜயுடன் சச்சின் படத்திலும், தனுஷுடன் உத்தம புத்திரன் படத்திலும் நடித்து அசத்தியிருப்பார் ஜெனிலியா.
கோலிவுட்டில் விரல் விட்டு எண்ணும் அளவிற்கே படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களின் மனதில் இன்றும் நீங்காத இடத்தை தக்கவைத்துள்ளார். அதற்கு காரணம் சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் இவர் நடித்த கதாப்பாத்திரம் தான். துறு துறு பெண்ணாக சேட்டைகள் அதிகம் கொண்ட நாயகியா நடித்திருப்பார் அந்தப் படத்தில்.
அந்தப் படத்தில் தனது பெயரை கூறும் போது கூட ஹஹ ஹாசினி என்று கூறுவது இன்றளவும் ரசிகர்களின் மனதில் இருந்து நீங்கவில்லை. இந்தப் படம் வெளியான பிறகு இப்படி துறுதுறுவென இருக்கும் பெண்களை பார்த்து வந்துட்டாங்க ஹாசினி என்று கிண்டல்களும் செய்யத்தொடங்கினர். 90ஸ் கிட்ஸ்களுக்கு பரிச்சையமான ஒன்று அது.
திரைத்துறையில் ஒன்றாக வேலை செய்து பின்பு காதலித்து திருமணம் செய்தவர்கள் ஏராளம். இதில் அனைவரின் திருமண வாழ்க்கையும் சிறப்பாக இருந்ததா என்றால் குறைவுதான். நட்சத்திர தம்பதிகளாக மற்றகவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் சிலரில் ஜெனிலியா மற்றும் தேஷ்முக் தம்பதியும் அடங்குவர்.
இந்த நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு சிறிது இடைவெளி விட்ட ஜெனிலியா தற்போது மீண்டும் தொடர்ச்சியாக நடிக்கத் தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில் நடிகரும் தனது கணவருமான ரித்தேஷ் குறித்து முன்னதாக பேட்டி ஒன்றில் நடிகை ஜெனிலியா பேசியது வைரலாகி வருகின்றது. அதில் அவர் பேசியதாவது ரித்தேஷ் ஒரு பெஸ்ட் ஹஸ்பண்ட். எங்க இரண்டு பேருக்கு நடுவுள இதுவரைக்கும் சண்டை வந்ததே இல்லை. ஏதாவது மன சங்கடம் வந்தாலும் இருவரும் உக்காந்து பேசி புரிந்துகொள்வோம்.
இந்த மாதிரி எங்க வாழ்க்கை போறதுக்கு ரித்தேஷின் மெச்சூரிட்டியும், பொருமையும் தான் காரணம். எனது கணவர் இந்த உலகில் சிறந்த கணவர் என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்திருப்பார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.