Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Genelia : சச்சின் ரீ-ரிலீஸ்.. விஜய்யின் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் வீடியோவை வெளியிட்ட நடிகை ஜெனிலியா!

Genelia Releases Video For Vijays Fans : தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாகக் கலக்கி வருபவர் விஜய். இவரின் நடிப்பில் பல்வேறு படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த 2005ம் ஆண்டு வெளியான படம் சச்சின். இந்த படமானது வெளியாகி 20 ஆண்டுகளைக் கடந்த நிலையில், ரீ- ரிலீஸாகியுள்ளது. ரீ ரிலீஸிலும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில், நடிகை ஜெனிலியா வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Genelia : சச்சின் ரீ-ரிலீஸ்.. விஜய்யின் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் வீடியோவை வெளியிட்ட நடிகை ஜெனிலியா!
நடிகை ஜெனிலியாImage Source: X
barath-murugan
Barath Murugan | Published: 24 Apr 2025 16:22 PM

தமிழ் சினிமாவில் நம்பர் 1 நாயகனாகப் படங்களில் நடித்து வருபவர் தளபதி விஜய் (Thalapathy Vijay). இவரின் நடிப்பில் கடைசி படமாக ஜன நாயகன் (Jana Nayagan)  திரைப்படமானது உருவாகி வருகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து இவர் முழு நேரமாக அரசியலில் இறங்கவுள்ள நிலையில், அது அவரது ரசிகர்கள் அனைவருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து இவரின் நடிப்பில் வெளியான பழைய படங்கள் (Old movies)  எல்லாம், திரையரங்குகளை ரீ-ரிலீஸ் (Re-release) செய்யப்பட்டு வருகிறது. மேலும் சமீபத்தில் இவரின் சச்சின் (Sachein)  திரைப்படமானது உலகமெங்கும் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படமானது ரீ- ரிலீசாகி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் இந்த படமானது, திரையரங்குகளில் வெளியாகி எதிர்பாராத வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த படமானது கடந்த 2025, ஏப்ரல் 18ம் தேதியில் வெளியானது. மேலும் இந்த படமானது திரையரங்குகளில் தற்போதுவரை சுமார் ரூ. 6 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தின் ரீ- ரிலீஸ் எதிர்பாராத வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில், நடிகை ஜெனிலியா  (Genelia ) வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தளபதி விஜய்யின் ரசிகர்களுக்காகப் பேசி வீடியோவை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு வெளியிட்ட எக்ஸ் பதிவு :

அந்த வீடியோவில், நடிகை ஜெனிலியா தளபதி விஜய்யின் ரசிகர்களுக்காகப் பேசியுள்ளதாவது, “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், சுமார் 20 வருடங்களுக்குப் பின் வெளியான சச்சின் படத்திற்காக நீங்கள் கொடுக்கும் வரவேற்பை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வரவேற்பை என்னால் நம்பமுடியவில்லை, இதெல்லாம் யாருக்காகத் தளபதி விஜய்க்காக, அவரின் க்யூட் மற்றும் ஸ்வீட்டான நடிப்பிற்காக நீங்கள் கொடுக்கும் வரவேற்பு. நீங்கள் சச்சின் படத்தின் ரீ- ரிலீஸை திருவிழாவைப் போல் கொண்டாடுகிறீர்கள், நிச்சயம் இந்த படம் உங்களுக்கு மனத்திற்கு நெருக்கமானது என்று தெரியும். நானும் அதை நம்புகிறேன்” என்று அவர் கூறியுள்ளார். நடிகை ஜெனிலியா தளபதியின் ரசிகர்களுக்காக இந்த வீடியோவை வெளியிட்ட நிலையில், மிகவும் வைரலாகி வருகிறது.

விஜய் மற்றும் ஜெனிலியாவின் சச்சின் திரைப்படம்

இந்த படமானது கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதியில் வெளியானது. இந்த படத்தில் நடிகர் விஜய் முன்னணி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஜெனிலியா நடித்திருந்தார். இதில் நடிகர் விஜய் கல்லூரியில் படிக்கும் மாணவன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முற்றிலும் மாறுபட்ட நடிப்பில் வெளியாகியிருந்த இந்த படமானது மக்கள் மத்தியில் அப்போதே பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றது.

இந்த படத்தைப் பிரபல இயக்குநர் ஜான் மகேந்திரன் இயக்கியிருந்தார், மேலும் வி க்ரியேஷன் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்தார். இந்த படமானது சமீபத்தில் ரீ- ரிலீசாகி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த படமானது இதுவரை ரூ. 6 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இனி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பாடல்களை இணைப்பது எப்படி?
இனி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பாடல்களை இணைப்பது எப்படி?...
நடிகர் ஆசிப் அலியின் நடிப்பில் வெளியானது ‘சர்கீத்’ பட ட்ரெய்லர்!
நடிகர் ஆசிப் அலியின் நடிப்பில் வெளியானது ‘சர்கீத்’ பட ட்ரெய்லர்!...
தளபதி விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பை தவறவிட்டேன்...
தளபதி விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பை தவறவிட்டேன்......
ஓடிடியில் வெளியானது விக்ரமின் வீர தீர சூரன் பாகம் 2...
ஓடிடியில் வெளியானது விக்ரமின் வீர தீர சூரன் பாகம் 2......
ஹிட் 3 படத்தில் கேமியோ ரோலில் கார்த்தி? நானியின் கலகலப்பான பதில்
ஹிட் 3 படத்தில் கேமியோ ரோலில் கார்த்தி? நானியின் கலகலப்பான பதில்...
தஞ்சை அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து: மக்கள் அதிருப்தி!
தஞ்சை அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து: மக்கள் அதிருப்தி!...
திருமண வாழ்க்கையில் 25 வருடங்களை நிறைவு செய்த அஜித் - ஷாலினி!
திருமண வாழ்க்கையில் 25 வருடங்களை நிறைவு செய்த அஜித் - ஷாலினி!...
சிம்லா ஒப்பந்தம் ரத்து - அதிரடி முடிவு எடுத்த பாகிஸ்தான்!
சிம்லா ஒப்பந்தம் ரத்து - அதிரடி முடிவு எடுத்த பாகிஸ்தான்!...
ஆன்மீகத்தில் பச்சை கற்பூரத்தின் முக்கியத்துவம்!
ஆன்மீகத்தில் பச்சை கற்பூரத்தின் முக்கியத்துவம்!...
சிந்து நதிநீரை நிறுத்திய இந்தியா - பாகிஸ்தான் எச்சரிக்கை!
சிந்து நதிநீரை நிறுத்திய இந்தியா - பாகிஸ்தான் எச்சரிக்கை!...
கிரெடிட் கார்டை அதிகமாக யூஸ் பண்றீங்களா? எப்படி தவிர்ப்பது?
கிரெடிட் கார்டை அதிகமாக யூஸ் பண்றீங்களா? எப்படி தவிர்ப்பது?...