அழகி படத்தில் நடித்த சிறுவன் பாலுவா இது? ஷாக்கான தேவயானி
Actress Devayani about Azhagi Movie Balu: தமிழில் தொடர்ந்து முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர்கள் கமல் ஹாசன், சரத்குமார், சத்யராஜ், பிரசாந்த், விஜய், அஜித், விக்ரம் என பலருக்கும் நாயகியாக நடித்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார் என்பது குறிப்பிடதக்கது.

தேவயானி
சமீபத்தில் நடந்த பட விழாவில் அழகி (Azhagi) படத்தில் தன்னுடன் பாலு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த சிறுவனைப் பார்த்து நடிகை தேவயானி (Devayani) ஷாக்காகியுள்ளார். இயக்குநர் தங்கர் பச்சன் (Thangar Bachan) இயக்கத்தில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான படம் அழகி. இந்தப் படத்தில் நடிகர்கள் பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி என பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் வந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. சிறுவயதில் ஏற்பட்ட ஈர்ப்பு பதின் பருவத்தில் காதலாக மாறுகிறது. ஆனால் அந்த காதால் வெற்றியடையாமல் பிறகு அவர்களது வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.
கிராமத்தில் சண்முகம் மற்றும் தனலட்சுமி என்ற சிறுவர்கள் பள்ளியில் ஒன்றாக படித்து வருகிறார்கள். அதில் தனலட்சுமி வசதியான குடும்பத்தை சேர்ந்த பெண். சண்முகம் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சிறுவன். நன்கு படிக்கக்கூடிய சண்முகம் படிப்பில் தனலட்சுமிக்கு உதவி செய்கிறான்.
அந்த வயதிலேயே தனலட்சுமி மீது சண்முகத்திற்கு காதல் ஏற்படுகிறது. இப்படியே படம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் பதின் பருவத்திற்கு வருவார்கள். அப்போது தனலட்சுமி மற்றும் சண்முகம் இருவரும் தங்களது காதலை வெளிப்படுத்திக்கொள்வார்கள். பிறகு சண்முகம் மேல் படிப்பிற்காக சென்னைக்கு செல்வார்.
அதே நேரத்தில் தனலட்சுமிக்கு அவரது வீட்டில் உள்ளவர்கள் திருமணம் செய்துவிடுகிறார்கள். காதல் பிரிந்து அவர் அவர் வாழ்க்கையில் கவனம் செலுத்துவார்கள் தனலட்சுமியும் சண்முகமும். அதனை தொடர்ந்து தனலட்சுமியின் கணவர் பணத்தை இழந்து நொடிந்துவிடுகிறார். மேலும் எதிர்பாரத விதமாக உயிரிழந்துவிடுகிறார்.
அதே நேரத்தில் சென்னையில் படிப்பை முடித்த சண்முகம் டாக்டராக வேலை செய்கிறார். வளர்மதி கேரக்டரில் நடித்த தேவயானியை திருமணம் செய்துக்கொள்கிறார். இந்த நிலையில் எதிர்பாராத சூழலில் தனலட்சுமியை பார்க்கிறார் சண்முகம். தனலட்சுமியின் வறுமையைப் பார்த்து மனமுடைந்தார் சண்முகம்.
தனலட்சுமி அவரது மகன் பாலுவுடன் ரோட்டில் தங்கியிருப்பதைப் பார்த்த சண்முகம் அவருக்கு உதவ நினைக்கிறார். அப்போது சண்முகம் அவரது நண்பர் வீட்டில் வேலைக்கு தனலட்சுமியை சேர்த்து விடுகிறார். பின்னர் சண்முகத்தின் வீட்டிலேயே தனலட்சுமி அவரது குழந்தைகளை பார்த்துக்கொள்கிறார்.
அப்போது தனலட்சுமியின் மகன் பாலுவையும் சண்முகம் பள்ளியில் சேர்த்து பார்த்துக் கொள்கிறார். இதனை தொடர்ந்து அவர்களது வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் மீதிக் கதை. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பட விழாவில் நடிகை தேவயானி அழகி படத்தில் பாலு கதாப்பாத்திரத்தில் நடித்த தங்கர் பச்சனின் மகனைப் பார்த்து ஷாக்காகியுள்ளார். அவர் தற்போது வளர்ந்து ஹீரோவாக நடிக்க உள்ளார்.
விஜித் பச்சனின் இன்ஸ்டா பதிவு:
மேலும் தங்கர் பச்சனின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடிக்கும் பேரன்பும் பெருங்கோபமும் என்ற படத்தில் தற்போது நாயகனாக அறிமுகம் ஆகியுள்ளார். இதனை அறிந்த தேவயானி நெகிழ்ச்சி அடைந்து பேசினார். இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய தேவயானி விஜித் பச்சனுக்கு பாராட்டு தெரிவித்துவிட்டு சில அட்வைஸ்களையும் கொடுத்துள்ளார்.
அதில், உங்க அப்பா அம்மா உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை உருவாகி கொடுத்துள்ளனர். மேலும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். யாரும் நம் கூடவே இருந்து எல்லாத்தையும் சொல்லி கொடுக்க மாடடர்கள். நாம் தான் ஹார்ட் வொர்க் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இது தொடர்பான செய்தி வெளியாகி வைரலாகி வருகின்றது.