Devayani : எதிர்பாராத கதைக்களம்… தேவயானியின் நிழற்குடை படத்தின் டீசர்!
Nizhar Kudai Movie Teaser : நடிகை தேவயானியின் முன்னணி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் நிழற்குடை. இந்த படத்தை அறிமுக இயக்குநர் சிவா ஆறுமுகம் இயக்கியுள்ளார். மிகவும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தற்போது இந்த படத்தின் டீசர் மக்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
கோலிவுட் சினிமாவில் 90ஸ் காலத்தில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் தேவயானி (Devayani). இவர் தனது திருமணத்திற்குப் பின் திரைப்படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டார். தற்போது மீண்டும் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் தற்போது இவரின் முன்னணி நடிப்பில் உருவாகியுள்ள படம் நிழற்குடை (Nizhar Kudai). இந்த படத்தை அறிமுக இயக்குநர் சிவா ஆறுமுகம் (Shiva Arumugam) இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தை தர்ஷன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகை தேவயானியுடன் நடிகர்கள் விஜித் , கண்மணி மனோகரன் , ராஜ்கபூர் , வடிவுக்கரசி மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக் களத்தில் உருவாகியுள்ளது. இந்த படமானது வரும் 2025, மே 9ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், அதை முன்னிட்டு தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தேவயானியின் அதிரடி க்ரைம் த்ரில்லர் படமாக இது அமைந்துள்ளது.