கதையே இல்லனாலும் பரவாயில்லை அவருடன் நடிக்கனும்… நடிகை கேத்ரின் தெரசா ஓபன் டாக்
Actress Catherine Teresa: சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை கேத்ரின் தெரசா தற்போது கேங்கர்ஸ் என்ற படத்தின் மூலம் தமிழில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கி அவரே நாயகனாக நடித்துள்ளார். இதில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் வடிவேலு மற்றும் வாணி போஜன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா என தென்னிந்திய மொழிகளில் நாயகியாக வலம் வருபவர் நடிகை கேத்ரின் தெரசா (Catherine Tresa). துபாயில் பிறந்த இவர் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரி படிப்பை பெங்களூரு வந்து முடித்துள்ளார். 14 வயதில் இருந்து மாடலிங் செய்து வந்த கேத்ரின் தெரசா இந்தியாவிற்கு வந்தும் பல நிறுவனங்களுக்கு மாடலாக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் 2010-ம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான சங்கர் ஐபிஎஸ் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வந்த இவர் 2014-ம் ஆண்டு இயக்குநர் பா. ரஞ்சித் (Pa Ranjith) இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் படத்தில் நாயகியாக நடித்தார். நடிகர் கார்த்திக் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடித்திருந்தார்.
தமிழில் அறிமுகம் ஆன முதல் படமே கேத்ரின் தெரசாவிற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் கொடுத்தது. இந்தப் படத்தில் இவர் பேசும் வசனங்கள் தற்போதும் சமூக வலைதாளத்தில் வைரலாகி வருகின்றது. இதில் இவரது நடிப்பில் வெளியான பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து நடிகை கேத்ரின் தெரிசா தமிழில் கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, வந்தா ராஜாவாதான் வருவேன், நீயா 2, அருவம் என 2019-ம் ஆண்டு வரை தொடர்ந்து தமிழில் பிசியான நடிகையாக வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து சுமார் 6 ஆண்டுகளுக்கு தமிழில் அவர் எந்தப் படங்களிலும் நடிக்கவில்லை.
இந்த நிலையில் இவரது நடிப்பில் தற்போது கேங்கர்ஸ் படம் வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. மேலும் ஏப்ரல் மாதம் 24-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. காமெடி ஆக்ஷனை மையமாக வைத்து உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை கேத்ரின் தெரசாவின் இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் நடிகை கேத்ரின் தெரசா பேட்டி ஒன்றில் பேசிய போது அவரிடம் கதையே இல்லை என்றாலும் எந்த நடிகருடன் நடிப்பீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த நடிகை கேத்ரின் தெரசா ஒரு படத்தில் கதையே இல்லை என்றாலும் அஜித் நடிக்கிறார் என்றால் அந்தப் படத்தில் நிச்சயமாக நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அஜித் குமார் சாரின் குட் பேட் அக்லி படத்தை இன்னும் பார்க்கவில்லை. விரைவில் அந்தப் படத்தை பார்ப்பேன் என்றும் அவர் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.