த்ரில்லர் பாணியில் உருவாகும் நடிகை அனுபமா பரமேசுவரனின் அடுத்தப் படம் – வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Actress Anupama Parameswaran: நடிகை அனுபமா பரமேசுவரன் பரதா என்ற தெலுங்கு படத்தில் முன்னணி வேடத்தில் நடித்துள்ளார். முன்னதாக இந்தப் படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் பிரவீன் கந்த்ரெகுலா இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

த்ரில்லர் பாணியில் உருவாகும் நடிகை அனுபமா பரமேசுவரனின் அடுத்தப் படம் - வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

கிஷ்கிந்தாபுரி

Updated On: 

28 Apr 2025 07:26 AM

மலையாளத்தில் 2015-ம் ஆண்டு இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி (Nivin Pauly) நாயகனாக நடித்தப் படம் பிரேமம். இந்தப் படத்தில் மூன்று நாயகிகள் நடித்திருந்தனர். அதில் ஒரு நாயகியாக நடிகை அனுபமா பரமேசுவரன் (Anupama Parameswaran) அறிமுகம் ஆகியிருந்தார். அந்தப் படத்தின் நடிகர் நிவின் பாலியின் பள்ளி வயது காதலியாக நடிகை அனுபமா பரமேசுவரன் நடித்திருந்தார். நடித்த முதல் படத்திலேயே தனது சுருள் முடி அழகால் ரசிகர்களை கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து மலையாளத்தில் பல படங்களில் நடித்த நடிகை அனுபமா பரமேசுவரன் தமிழில் 2016-ம் ஆண்டு ஆர்.எஸ்.துரை இயக்கத்தில் வெளியான கொடி படத்தில் நாயகியாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருந்த நிலையில் தம்பியாக நடித்த தனுஷிற்கு நாயகியாக இந்தப் படத்தில் நடித்தார்.

இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் பிசியாக நடிக்கத் தொடங்கினார் நடிகை அனுபமா பரமேசுவரன். தமிழில் இறுதியாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ட்ராகன் படத்தில் நடித்தார்.

இந்தப் படம் இவருக்கு மாபெரும் வரவேற்பைக் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து தமிழில் அடுத்ததாக இவர் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் பைசன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நாயகனாக நடிகர் துருவ் விக்ரம் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து தெலுங்கில் இவர் முக்கிய வேடத்தில் நடிக்கும் பரதா படமும் தற்போது உருவாகி வருகிறது. இதில் இவருடன் இணைந்து நடிகைகள் சங்கீதா மற்றும் தர்ஷனா ராஜேந்திரனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது இவரது நடிப்பில் உருவாகவுள்ள கிஷ்கிந்தாபுரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

கிஷ்கிந்தாபுரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்:

த்ரில்லர் பாணியில் உருவாகவுள்ள இந்தப் படத்தில் நடிகை அனுபமா பரமேசுவரன் உடன் இணைந்து பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தை இயக்குநர் கவுசிக் பெகல்லபதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் படத்தில் கிளிம்ஸ் வீடியோ 29-ம் தேதி ஏப்ரல் மாதம் 2025-ம் ஆண்டு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.