விஜய் சேதுபதி – தபு கூட்டணியில் புதிய படத்தின் அப்டேட் இதோ!
Filmmaker Puri Jagannadh announced his new film: தபு மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் பூரி ஜெகநாத் அறிவித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கவுள்ளது என்றும் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார். இவரது இயக்கத்தில் இறுதியாக தெலுங்கில் டபுஸ் இஸ்மார்ட் படம் வெளியானது குறிப்பிடதக்கது.

விஜய் சேதுபதி - தபு
தென்னிந்திய திரைப்பட இயக்குநர் பூரி ஜெகன்நாத் (Puri Jagannadh) தனது ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை கூறியுள்ளார். ஏப்ரல் மாதம் 10ம் தேதி 2025-ம் ஆண்டு வியாழக்கிழமை ரசிகர்கள் பெரிதும் ரசிக்கக்கூடிய நடிகர்களை கொண்டு படம் இயக்க உள்ளதாக அவர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர்கள் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) மற்றும் தபு (Tabu) கூட்டணியில் தயாரிப்பாளர் நடிகை சார்மி கவுர் ஆகியோர் சந்தப்போது எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து தனது புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டார் இயக்குநர் பூரி ஜெகன்நாத். இதன் மூலம் இயக்குநர் பூரி ஜெகன்நாத் தனது வரவிருக்கும் படத்தை பான் – இந்திய முறையில் எடுக்க உள்ளதாகவும் அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். ஒரு ம்கிழ்ச்சியான புன்னகையுடன், தபு, பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுரு அந்த புகைப்படத்தில் காட்சியளித்தனர்.
அதனை தொடர்ந்து இயக்குநர் பூரி ஜெகன்நாத் மிகவும் உற்சாகமான பதிவு ஒன்ரை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ஷீ இஸ் எலக்ட்ரிக். ஷீ இஸ் எக்ஸ்ப்ளோசிவ். ஷீ இஸ் தி தபு. இந்திய சினிமாவின் ரத்தினமான நடிகை தபுவை பெருமையுடன் வரவேற்கிறோம் என்று அந்த பதிவில் தெரிவித்திருந்தார்.
பூரி ஜெகன்நாத் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
She’s electric.
She’s explosive .
She’s THE TABU.Proudly welcoming THE GEM OF INDIAN CINEMA, Actress #Tabu on-board for a ROLE as DYNAMIC as her presence in #PuriSethupathi ❤️🔥
A #PuriJagannadh Film
Starring Makkalselvan @VijaySethuOfflProduced by Puri Jagannadh,… pic.twitter.com/WGp0kkuZDl
— Puri Connects (@PuriConnects) April 10, 2025
இந்த அறிவிப்பை கேட்ட ரசிகர்கள் தங்களது உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கமெண்ட் பாக்ஸில் தெரிவித்து வருகின்றனர். நெட்டிசன் ஒருவர் கூறியதாவது “உலகின் மிக அழகான தபுவுடன் மிக அற்புதமான திட்டங்களுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று எழுதினார். மற்றொருவர், “OG மாஸ்டர்பீஸ் ஏற்றப்படுகிறது” என்று கூறினார்.
பூரி ஜெகன்நாத் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
On this auspicious day of #Ugadi ✨🙏🏻
Embarking on an electrifying new chapter with a sensational collaboration 🔥Dashing Director #PuriJagannadh and powerhouse performer, Makkalselvan @VijaySethuOffl join forces for a MASTERPIECE IN ALL INDIAN LANGUAGES ❤️🔥
Produced by Puri… pic.twitter.com/Hvv4gr0T2Z
— Puri Connects (@PuriConnects) March 30, 2025
முன்னதாக மார்ச் மாதம் 30 ஆம் தேதி 2025-ம் ஆண்டு உகாதி பண்டிகையை முன்னிட்டு, பூரி ஜெகன்நாத் விஜய் சேதுபதியுடன் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டு தனது புதிய படத்தை அறிவித்தார். ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று அவர் குறிப்பிட்டார். உகாதியில் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது குறிப்பிடதக்கது.