Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா – ஜோதிகா!

Suriya - Jyothika Swamy Darshan : கோலிவுட் சினிமாவில் ரீல் மற்றும் ரியல் ஜோடியாக ரசிகர்களை கவர்ந்து வருபவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. தமிழில் சிறந்த பிரபல தம்பதியர்கள் என்றால் நமது நினைவிற்கு வருவதே சூர்யா - ஜோதிகாதான். இந்த தம்பதி அசாம் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காமாக்யா கோவிலில் ரெட்ரோ படம் வெற்றிபெற மற்றும் ஜோதிகாவின் புதிய படத்திற்காக தரிசனம் செய்துள்ளனர்.

படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா – ஜோதிகா!
சூர்யா மற்றும் ஜோதிகாImage Source: Instagram
barath-murugan
Barath Murugan | Published: 20 Apr 2025 22:44 PM

நடிகர் சூர்யாவின் (Suriya) முன்னணி நடிப்பில் தற்போது ரிலீசிற்கு தயாராகியுள்ள படம் ரெட்ரோ (Retro). இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் (Karthik Subbaraj)  இயக்க, நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde)  முன்னணி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இந்த படமானது வரும் 2025, மே 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில், இந்த படம் வெற்றிபெற வேண்டும் என்று நடிகை ஜோதிகா மற்றும் நடிகர் சூர்யா (Jyothika and  Suriya) அசாம் (Assam) மாநிலத்தில் குவாஹாத்தில் உள்ள ஸ்ரீ காமாக்யா கோவிலில்  (Kamakhya Temple) சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த கோவிலானது இந்தியாவில் மிகவும் பழமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாகும் . சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ திரைப்படமானது வெற்றிபெறவும் மற்றும் ஜோதிகா நடிக்கவுள்ள புதிய படத்திற்காகவும்  தம்பதியர்கள் இணைந்து சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

இது குறித்தான புகைப்படங்களை நடிகை ஜோதிகா பகிர்ந்துள்ளார். அவரின் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் இந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த பதிவின் கீழ் அவர்களின் ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களையும், லைக்குகளையும் பறக்கவிட்டு வருகின்றனர்.

நடிகை ஜோதிகா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு :

 

View this post on Instagram

 

A post shared by Jyotika (@jyotika)

இந்த பதிவில் நடிகை ஜோதிகா “புனிதமான புத்தாண்டில் சக்தி பீடங்களை தரிசித்தது எங்களின் பாக்கியம். மேலும் எனது அடுத்த படத்தைத் தொடங்குகிறேன், உங்கள் அன்புக்கும் ஆசீர்வாதங்களுக்கும் எப்போதும் நன்றி” என்று எழுதியுள்ளார். இந்த புகைப்படத்தில் சிகப்பு நிற உடையில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து இருக்கின்றனர். தற்போது இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

ரெட்ரோ திரைப்படம் :

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில், நடிகர் சூர்யா முதன் முறையாக நடித்து வந்த படம் ரெட்ரோ. இந்த படத்தை சூர்யா – ஜோதிகா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கதாநாயகி பூஜா ஹெக்டே நடித்துள்ளார். வின்டேஜ் கேங்ஸ்டர் கதைக்களத்தில், சூர்யாவின் கம்பேக் படமாக உருவாகியுள்ளது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக கனிமா, கண்ணாடி பூவே என்ற பாடல்கள் அனைத்தும் இணையத்தில் ட்ரெண்டிங் பட்டியலில் இருந்து வருகிறது.

இந்த படமானது வரும் 2025, மே 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அதை தொடர்ந்து நடிகர் சூர்யா மற்றும், அவரின் மனைவியும், நடிகையுமான ஜோதிகா இருவரும் இணைந்து, அஸ்ஸாமில் உள்ள காமாக்யா கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். ரெட்ரோ படம் வெற்றிபெற மற்றும் ஜோதிகா நடிக்கவுள்ள புதிய படத்திற்காக தரிசனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதை தெரியப்படுத்தும் விதத்தில் நடிகை ஜோதிகா வெளியிட்ட பதிவு இணையத்தல் வைரலாகி வருகிறது.

2026 சட்டமன்ற தேர்தலில் யார் யாருக்கு எவ்வளவு தொகுதிகள் - நயினார்
2026 சட்டமன்ற தேர்தலில் யார் யாருக்கு எவ்வளவு தொகுதிகள் - நயினார்...
வெயிலும் மழையும் தொடரும் – வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை
வெயிலும் மழையும் தொடரும் – வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை...
எலுமிச்சையை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்? ஆச்சரிய தகவல்!
எலுமிச்சையை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்? ஆச்சரிய தகவல்!...
சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!
சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!...
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி...
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்...
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!...
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!...
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?...
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?...
அவரால் தான் நான் நடிக்கவில்லை... வடிவேலு பேச்சு!
அவரால் தான் நான் நடிக்கவில்லை... வடிவேலு பேச்சு!...