சிம்புவுடன் நடிக்கணும்னா ஒரு கண்டிஷன்.. ஹரிஷ் கல்யாண் சொன்னது என்ன?

Simbu And Harish Kalyan Collaboration : கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்து வருபவர்கள் சிலம்பரசன் மற்றும் ஹரிஷ் கல்யாண். கிட்டத்தட்ட ஹரிஷ் கல்யாணின் நடிப்பு சிலம்பரசனை போல இருக்கும் என்றே கூறலாம். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர்கள் சிம்பு மற்றும் ஹரிஷ் கல்யாணிடம், நீங்கள் இருவரும் ஒன்றாக நடிப்பீர்களா என்ற கேள்விக்கு அவர்கள் அளித்த பதில் மக்களிடையே வைரலாகி வருகிறது.

சிம்புவுடன் நடிக்கணும்னா ஒரு கண்டிஷன்.. ஹரிஷ் கல்யாண் சொன்னது என்ன?

சிலம்பரசன் மற்றும் ஹரிஷ் கல்யாண்

Published: 

27 Apr 2025 21:00 PM

தமிழ் சினிமாவை பொறுத்தவரைக் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது வரையிலும் சினிமாவில் தொடர்ந்து இருந்து வருபவர் சிலம்பரசன் (Silambarasan). தனது தந்தையின் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மிகவும் பிரபலமானார். அவருக்குச் சிறியவர் முதல் பெரியவர்களை வரை அனைத்து கேட்டகிரியிலும் ரசிகர்கள் இருக்கின்றனர். சிறுவயதிலே பல கோடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் என்றே கூறலாம். இவர் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக பத்து தல (Pathu Thala) படமானது வெளியானது. அதை தொடர்ந்து மணிரத்னத்தின் (Mani Rthnam) தக் லைஃப் (Thug Life) படத்தில் நடித்து வந்தார். இதை அடுத்தாக நடிகர் ஹரிஷ் கல்யாணின்  (Harish Kalyan) நடிப்பில் வெளியான பார்க்கிங் பட இயக்குநருடன் STR 49 என்ற படத்திலும் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் சிலம்பரசன் மற்றும் ஹரிஷ் கல்யாணிடம், நீங்கள் இருவரும் ஒன்றாக இணைந்து அண்ணன், தம்பி கதாபாத்திரத்தில் நடிப்பீர்களா என்று கேட்டனர். அதற்கு இவர்கள் இருவரும் என்ன பதில் அளித்துள்ளனர் தெரியுமா?.

முதலில் நடிகர் சிலம்பரசன் “நிச்சயமாக நடிக்கலாம் அதில் ஆட்சேபனை ஒன்றும் இல்லை, அதற்கு ஏற்ற மாதிரியான கதை கிடைத்தால் நடிக்கலாம்” என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து பேசிய நடிகர் ஹரிஷ் கல்யாண் “ஒருவேளை இருவரும் இணைந்து நடித்தால் அந்த படத்தைச் சிம்பு சார் இயக்கினால் நன்றாக இருக்கும், என்று கூறியுள்ளார். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இவர்கள் இருவரின் காமினேஷனில் படம் வெளியான மக்களிடையே நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் சிம்பு மற்றும் ஹரிஷ் கல்யாண் பேசிய வீடியோ :

நடிகர் ஹரிஷ் கல்யாணின் புதிய படம் :

நடிகர் ஹரிஷ் கல்யாணின் முன்னணி நடிப்பில் இறுதியாக லப்பர் பந்து படமானது வெளியானது. இந்த படமானது எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியாகி, தமிழில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இந்த படத்தைத் தொடர்ந்து நூறுகோடி வானவில் என்ற படத்திலும் நடித்துவந்தார். இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்து, ரிலீசிற்கு தயாராகி வருகிறது. இந்த படத்திற்கெல்லாம் முன் நடித்த படம் டீசல். இந்த படமானது கடந்த 2 வருடங்களுக்கும் மேலாகத் தயாராகி வருகிறது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார்.

இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகி வருகிறது. இந்த படமானது நிச்சயமாக இந்த 2025ம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், நடிகர் சிலம்பரசன் ஒரு பாடல் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரிஷ் கல்யாணின் 15வது படத்தின் அறிவிப்பு :

இந்த படங்களைத் தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாணின் நடிப்பில் புதியதாக உருவாகிவரும் படம் HK15. இந்த படத்தை இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கவுள்ளார். இந்த படத்தின் அறிவிப்புகளை நடிகர் ஹரிஷ் கல்யாண் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டிருந்தார். இந்த படத்தில் அவருடன் ஜோடியாக நடிகை ப்ரீத்தி முகுந்தன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.