ஷ்ரத்தா ஶ்ரீநாத் – கிஷோரின் கலியுகம் படத்தின் ரிலீஸ் எப்போது? போஸ்டருடன் அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!
Kaliyugam Movie Release Update: கலியுகம் படத்தில் நடிகை ஷ்ரத்தா ஶ்ரீநாத் மற்றும் நடிகர் ஆடுகளம் கிஷோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் இனியன் சுப்ரமணி, அஸ்மல், ஹரி, மிதுன் ஆகியோரும் இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கலியுகம்
நடிகர்கள் ஷ்ரத்தா ஶ்ரீநாத் (Shraddha Srinath) மற்றும் ஆடுகளம் கிஷோரின் (Kishore) நடிப்பில் உருவாகியுள்ள கலியுகம் படத்தின் வெளியீட்டு தேதியை போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது படக்குழு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நாயகியாக வலம் வருபவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர் 2015-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான கோஹினூர் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார். அதனைத் தொடந்து 2016-ம் ஆண்டு வெளியான யு – டர்ன் படத்தின் மூலம் கன்னட சினிமாவில் நடியகையாக நடிக்கத் தொடங்கினார். மேலும் 2017-ம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கதில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான காற்று வெளியிடை படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து இயக்குநர் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இவன் தந்திரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனார்.
அதனை தொடர்ந்து அதே 2017-ம் ஆண்டு இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் வெளியான விக்ரம் வேதா படத்தில் நடித்தார். இதில் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க மாதவனின் மனைவியாக நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் இந்தப் படத்தில் நடித்திருந்தார்.
இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இவர் தமிழில் ரிச்சி, கே – 13, நேர்கொண்ட பார்வை, மாறா, சக்ரா, விட்னஸ் ஆகிய படங்களில் நடித்தார். இது ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து தமிழில் இவர் இறுதியாக நடித்தப் படம் இறுகப் பற்று. இந்தப் படம் திருமணம் ஆன தம்பதிகளின் இடையே நடக்கும் மனச் சிக்கல்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. இதில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒரு மனநல மருத்துவராக இருப்பார். இவரது கணவராக நடிகர் விக்ரம் பிரபு நடித்திருந்தார்.
படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் ஓடிடியில் வெளியான பிறகு பலதரப்பட்ட மக்களிடையே சென்ற இந்தப் படம் வாழ்க்கையில் எதார்த்தத்தை காட்டுவதாக தெரிவித்தனர். மேலும் திருமனத்தில் ஏற்படும் உறவுச் சிக்களையும் படம் தெளிவாக காட்டியிருந்தது விமர்சகர்களால் பாராட்டைப் பெற்றது.
இந்த நிலையில் இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தற்போது நடிகர் ஆடுகளம் கிஷோர் உடன் இணைந்து கலியுகம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பிரமோத் சுந்தர் இயக்கியுள்ளார். சைக்கலாஜிகல் திரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தை ஆர்.கே இன்டர்நேஷனல் & பிரைம் சினிமாஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
ட்விட்டரில் படக்குழு வெளியிட்ட போஸ்டர்:
🌪️ Scarcity. Survival. Sanity.
Veteran producer #KalaippuliSThanu @theVcreations reveals the release date of #Kaliyugam! – Releasing worldwide on May 9, 2025#KaliyugamFromMay9@ShraddhaSrinath #Kishore @rkintrnational @primecinemas_ @prastories @rck_dop @SonyMusicSouth… pic.twitter.com/uIDHfVG4P9
— Yuvraaj (@proyuvraaj) April 19, 2025
இந்த நிலையில் இந்தப் படத்தின் பணிகள் தற்போது முடிவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி உள்ளது. அதன்படி படம் வருகின்ற மே மாதம் 9-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் போஸ்டரை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு வெளியிட்டுள்ளார்.