Thug Life Movie : தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது? படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட் இதோ

Thug Life Movie first single Update : நடிகர் கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசனின் முன்னணி நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் தக் லைஃப். இந்த திரைப்படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கிவருகிறார். முற்றிலும் மாறுபட்ட ஜானரில், பிரம்மாண்ட கதைக்களத்துடன் இந்த படமானது உருவாகிவருகிறது. தற்போது இந்த படத்தில் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

Thug Life Movie : தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது? படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட் இதோ

தக் லைஃப்

Published: 

16 Apr 2025 19:44 PM

கோலிவுட் பிரபல இயக்குனர் மணிரத்னத்தின் (Mani Ratnam) முன்னணி இயக்கத்தில் உருவாகிவரும் படம் தக் லைஃப் (Thug Life). இந்த படத்தின் கதையை மணிரத்னத்துடன், நடிகர் கமல் ஹாசனும் (Kamal Haasan) இணைந்து எழுதியுள்ளார். இந்த படமானது மிகவும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகிவருகிறது. மேலும் இப்படத்தின் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் போன்ற தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது. இந்த படத்தில் நடிகர் கமல் ஹாசன் முன்னணி கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும் அவருக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிகர் சிலம்பரசன் (Silambarasan)நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் அறிவிப்புகள் கடந்த 2022ம் ஆண்டில் கமல் ஹாசன் 234 என்ற தலைப்பில் வெளியாகியது. மேலும் நடிகர் சிலம்பரசனும் இப்படத்தில் முக்கிய ஆக்ஷ்ன் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்த படத்திற்குப் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வரும் நிலையில், தக் லைஃப் படத்தின் முதல் பாடல் குறித்தான அப்டேட் வெளியாகியுள்ளது. ஜிங்குச்சா என்று தொடங்கும் இந்த பாடலானது வரும் 2025, ஏப்ரல் 18ம் தேதியில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தக் லைஃப் படக்குழு வெளியிட்ட அறிவிப்பு :

நடிகர் கமல் ஹாசனின் நடிப்பிலும், தயாரிப்பிலும் சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தக் லைஃப் படமானது உருவாகி வருகிறது. தற்போது இந்த படமானது இறுதிக்கட்ட பணியிலிருந்துவரும் நிலையில், இந்த படத்தைப் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகிறது. தற்போது தக் லைஃப் படத்தின் ஆன்தம் என்ற ஜிங்குச்சா என்ற பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த முழு பாடலானது வரும் 2025, ஏப்ரல் 18ம் தேதியில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பினால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. இந்த படமானது வரும் 2025, ஜூன் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ரிலீசிற்கு இன்னும் இடையில் 1 மாதம் மட்டும் உள்ள நிலையில், இப்படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

தக் லைஃப் படத்தின் நடிகர்கள் :

இந்த படத்தில் கமல் மற்றும் சிலம்பரசனுடன் நடிகர்கள் திரிஷா கிருஷ்ணன், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி, நாசர், சின்னி ஜெயந்த், வையாபுரி, சானியா மல்ஹோத்ரா, சேத்தன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிவடைகிறதாகக் கூறப்படுகிறது. மேலும் நடிகர் சிலம்பரசனும் அடுத்தடுத்த புதிய படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.