Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஜவான் படத்தின் போது ஷாருக்கான் செய்த காரியம்… மிரண்ட யோகி பாபு

Actor Yogi Babu About Shah Rukh Khan: தமிழ் சினிமாவில் சமீப காலமாக எந்த ஒரு படத்தின் பூஜை தொடங்குகிறது என்றாலும் படக்குழு படத்தில் சிறிய கதாப்பாத்திரமாவது யோகி பாபுவிற்கு இருக்க வேண்டும் என்று நினைக்கும் அளவிற்கு தமிழ் சினிமாவில் வேரூன்றி இருக்கிறார்.

ஜவான் படத்தின் போது ஷாருக்கான் செய்த காரியம்… மிரண்ட யோகி பாபு
ஷாருக்கான், யோகி பாபுImage Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 16 Apr 2025 12:27 PM

இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் (Shah Rukh Khan) நடிப்பில் உருவான ஜவான் (Jawan) படத்தின் படப்பிடிப்பில் ஷாருக்கான் யோகிபாவுவை (Yogi Babu) பார்த்தவுடன் செய்த காரியத்தை முன்னதாக பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார். இயக்குநர் அமீர் இயக்கத்தில் உருவான யோகி என்ற படத்தில் நடிகராக அறிமுகம் ஆனார் யோகி பாபு. இந்தப் படத்தில் நடித்த பிறகே இவர் யோகி பாபு என்று அழைக்கைத் தொடங்கினர். இதனை தொடர்ந்து தில்லாலங்கடி, பையா, வேலாயுதம், தூங்காநகரம், ராஜபாட்டை, கலகலப்பு, அட்டக்கத்தி, பட்டத்து யானை, சூது கவ்வும், சென்னை எக்ஸ்பிரஸ், வீரம், மான் கராத்தே, என்னமோ ஏதோ, அரண்மனை, ஜெய்ஹிந்த் 2 ஆகிய படங்களில் சின்ன சின்ன கதாப்பாத்திரத்தில் நடித்தார். கடந்த 2014-ம் ஆண்டு வெளியான யாமிருக்க பயமேன் என்ற படத்தில் பன்னி மூஞ்சி வாயன் என்ற காமெடியில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நன்கு அறியப்பட்டார்.

அதனை தொடர்ந்து பல படங்களில் சிறிய சிறிய காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் யோகி பாபு சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தில் ரசிகர்களின் பேராதரவைப்ப் பெற்றார். ரெமோ படத்தில் சிவகார்த்திகேயன் பெண் வேடமிட்டு நடிப்பார். அவரை காதலிக்கும் நபராக கலகலப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் யோகி பாபு.

இதனை தொடர்ந்து பல படங்களில் தொடந்து காமெடி நடிகராக நடித்து வந்தார் யோகி பாபு. தமிழில் ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன், ஆர்யா, விஷால் என பலருடன் இணைந்து நடித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு இயக்குநர் முத்துகுமரன் இயக்கத்தில் வெளியான தர்மபிரபு படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

அதனை தொடர்ந்து காமெடி படங்களில் மட்டும் இன்றி கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் மண்டேலா, பொம்மை நாயகி, போட் ஆகிய படங்களில் கதையின் நாயகனாக நடித்தார். இந்தப் படங்கள் மூன்றுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து காமெடி மற்றும் நாயகன் என தொடர்ந்து நடித்து வருகிறார் யோகி பாபு.

இவரது நடிப்பில் கோலிவுட்டில் படங்கள் தொடர்ந்து வெளியகி வருகிறது. மேலும் படங்களிலும் தற்போது பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் முன்னதாக பேட்டி ஒன்றில் ஷாருக்கான் உடன் நடந்த நிகழ்வு ஒன்றை சுவாரஸ்யமாக தெரிவித்துள்ளார். அதில் இயக்குநர் அட்லி இந்தியில் நடிகர் ஷாருக்கான் வைத்து இயக்கிய படம் ஜவான். இந்தப் படத்தில் நடிகர் யோகி பாபுவும் நடித்திருந்தார்.

அப்போது யோகிபாபுவை ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்த ஷாக்கான் மிகவும் மகிழ்ச்சியாக வரவேற்றுள்ளார். மேலும் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் யோகிபாபு நடித்திருந்ததை ஷாருக்கான் நினைவில் வைத்திருந்தது மிகவும் பிரம்பிப்பாக இருந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஃபேமிலி காரை தேடுகிறீர்களா? 8 லட்சத்திற்குள் டாப் 5 கார்கள் இதோ!
ஃபேமிலி காரை தேடுகிறீர்களா? 8 லட்சத்திற்குள் டாப் 5 கார்கள் இதோ!...
வக்ஃப் சட்டம்.. மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!
வக்ஃப் சட்டம்.. மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!...
சரத்குமார் படத்தில் விருப்பமே இல்லாமல் நடித்த வடிவேலு...
சரத்குமார் படத்தில் விருப்பமே இல்லாமல் நடித்த வடிவேலு......
அமெரிக்கா: பேஸ்புக்கில் மனித எலும்புகள் விற்பனை செய்த பெண்
அமெரிக்கா: பேஸ்புக்கில் மனித எலும்புகள் விற்பனை செய்த பெண்...
அறிகுறியே இல்லாமல் கண் பார்வையை பறிக்கும் நோய் - தடுப்பது எப்படி?
அறிகுறியே இல்லாமல் கண் பார்வையை பறிக்கும் நோய் - தடுப்பது எப்படி?...
முந்தானை முடிச்சு படம் குறித்து நடிகை ஊர்வசியின் கலகலப்பான பேச்சு
முந்தானை முடிச்சு படம் குறித்து நடிகை ஊர்வசியின் கலகலப்பான பேச்சு...
மருத்துவமனை ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
மருத்துவமனை ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை...
கூலி படம் குறித்து முக்கிய அப்டேட் கூறிய நடிகர் உபேந்திரா
கூலி படம் குறித்து முக்கிய அப்டேட் கூறிய நடிகர் உபேந்திரா...
மலையாள நடிகர் ஃபஹத் பாசில் கூட்டணியில் படம்? - எஸ்.ஜே.சூர்யா!
மலையாள நடிகர் ஃபஹத் பாசில் கூட்டணியில் படம்? - எஸ்.ஜே.சூர்யா!...
கூலி படத்தில் ஸ்பெஷல் பாடல்.. கண்டிப்பா ஹிட்டாகும்- பூஜா ஹெக்டே!
கூலி படத்தில் ஸ்பெஷல் பாடல்.. கண்டிப்பா ஹிட்டாகும்- பூஜா ஹெக்டே!...
'குட் பேட் அக்லி' சர்ச்சை: இளையராஜாவின் குற்றச்சாட்டு நியாயமானதா?
'குட் பேட் அக்லி' சர்ச்சை: இளையராஜாவின் குற்றச்சாட்டு நியாயமானதா?...