தமிழ் சினிமாவில் 6 பேக் முதலில் வைத்தது நானும் இல்லை சூர்யாவும் இல்லை – நடிகர் விஷால் சொன்ன விசயம்
Actor Vishal about Six Pack: சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர்து தந்தை நடிகர் சிவக்குமார் பேசும் போது தமிழ் சினிமாவில் முதன் முறையாக 6 பேக் வைத்தது சூர்யா தான் என்று தெரிவித்திருந்தார். இது இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ரெட்ரோ. இந்தப் படத்தில் நாயகனாக சூர்யா நடித்துள்ளார். மேலும் நாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். படம் மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது. அதில் படக்குழுவினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். சூர்யாவின் தந்தை சிவக்குமார் அந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியது இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் விஷால் விளக்கம் அளிக்கும் விதமாக பேசியுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த மாதிரி பேசுபொருளாக காரணம் தமிழ் சினிமாவில் யார் முதலில் 6 பேக் வைத்தது என்பதே முக்கிய காரணம் ஆகும்.
சூர்யாவின் ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழா 18-ம் தேதி ஏப்ரல் மாதம் 2025-ம் ஆண்டு நடைப்பெற்றது. இதில் இயக்குநர், நடிகர்கள் என படக்குழுவினர் பலரும் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டனர். மேலும் படக்குழுவினரின் குடும்பத்தினரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் நடிகர் சூர்யாவின் தந்தையும் நடிகருமான சிவக்குமார் பேசுகையில் நடிகர் சூர்யாவின் கடின உழைப்பை குறித்து பேசினார். சினிமாவில் நடிப்பதற்காக நடிகர் சூர்யா தன்னை தானே எப்படி செதுக்கிக் கொண்டார் என்பது குறித்தும் வெளிப்படையாக பேசினார். அந்த விழாவில் பேசிய போது தமிழ் சினிமாவில் சூர்யாவிற்கு முன்பு 6 பேக் வைத்தவன் எவன் இருக்கான் என்று தெரிவித்தார்.
இது இணையத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து ரசிகர்கள் யார் முதலில் 6 பேக் வைத்தார்கள் என்று விவாதம் கிளம்பியது. அதில் சூர்யாவிற்கு முன்பு விஷால் சத்யன் படத்தில் விஷால் 6 பேக் வைத்துவிட்டார் என்று தெரிவித்து வந்தனர். காரணம் சூர்யா 6 பேக் வைத்த வாரணம் ஆயிரம் படம் 2008-ம் ஆண்டு நவம்பரில் வெளியாகி இருந்தது.
ஆனால், நடிகர் விஷாலின் நடிப்பில் வெளியான சத்யன் படம் ஆகஸ்ட் மாதம் 2008-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இதனால் சூர்யாவிற்கு முன்பு விஷால் தான் 6 பேக் வைத்தார் என்று ரசிகர்கள் தெரிவித்து வந்தனர். இதனை தொடர்ந்து இந்த சலசலப்பு குறித்து நடிகர் விஷால் முதன்முறையாக வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதில் அவர் பேசியதாவது, தமிழ் சினிமாவில் முதன் முறையாக 6 பேக் வைத்தது நானோ அல்லது சூர்யாவோ கிடையாது. எங்கள் இருவருக்கும் முன்பாக நடிகர் தனுஷ் 6 பேக் வைத்துவிட்டார். ஆம் தனுஷ் பொல்லாதவன் படத்திலேயே 6 பேக் வைத்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார். மேலும் பொல்லாதவன் படம் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.