ஓடிடியில் வெளியானது விக்ரமின் வீர தீர சூரன் பாகம் 2 – எங்கு பார்க்கலாம்?
Veera Dheera Sooran part 2: திரையரங்குகளில் வெளியான சில நாட்களிலேயே நடிகர் விக்ரமின் ஆக்ஷன் த்ரில்லர் படமான வீர தீர சூரன்: பாகம் 2 தற்போது டிஜிட்டலில் வெளியாகியுள்ளது. படம் திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதம் முடிவதற்கு முன்பே படத்தின் ஓடிடி வெளியீட்டால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் சியான் விக்ரமின் நடிப்பில் மார்ச் மாதம் 27-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது வீர தீர சூரன் படத்தின் 2-ம் பாகம். இந்தப் படத்தை இயக்குநர் அருண்குமார் இயக்கியிருந்தார். இவரது இயக்கத்தில் முன்னதாக வெளியான சேதுபதி, பண்ணையாரும் பத்மினியும், சித்தா ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இன்று வீர தீர சூரன் பாகம் இரண்டு ஓடிடியில் வெளியாகியுள்ளது. உலகளவில் சுமார் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. இந்தப் படம் தமிழில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. மேலும் தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் டப்பிங் செய்யப்படும் என்றும் படக்குழு தெரிவித்திருந்தது.
இந்த அதிரடி ஆக்ஷன் படத்தில் நடிகர் விக்ரமுடன் இணைந்து நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் மற்றும் ப்ருத்வி ராஜ் உள்ளிட்ட பல திறமையான நடிகர்கள் நடித்துள்ளனர். மதுரையில் நடக்கும் ஒரு கோவில் திருவிழாவின் பின்னணியில் அமைக்கப்பட்ட இந்தப் படம், கடந்த காலக் குழப்பங்களைக் கொண்ட காளியின் வாழ்க்கையை பின்பற்றுகிறது.
ஓடிடி வெளியீடு குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:
View this post on Instagram
ஒரு அன்பான தந்தை மற்றும் கணவரான கதாநாயகன் விக்ரம் தனது முந்தைய வாழ்க்கையில் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறார், ஆனால் எதிர்பாராத விதமாக அவர் விட்ட இடத்திற்குத் திரும்ப செல்லும் சூழல் ஏற்படுகின்றது. அடுத்து என்ன நடக்கிறது எல்லா பிரச்னைகளையும் காளி சரி செய்தாரா என்பதே படத்தின் கதை.
சுவாரஸ்யமான விசயம் என்ன என்றால் வீர தீர சூரன்: பகுதி 1 தொடங்குவதற்கு முன்பு இரண்டாம் பாகம் வெளியானது. முதல் பாகம் இன்னும் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனரிடமும் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த இயக்குனர் எஸ்.யு. அருண் குமார், “இது விக்ரமின் யோசனை. நான் முதலில் அவரிடம் ஸ்கிரிப்டை விவரித்தபோது, இந்த படத்தின் தொடர்ச்சியை உருவாக்கலாம் என்று சொன்னேன், அது ஒரு தொடர்ச்சி. மேலும், அது ஒரு பொருத்தமான தலைப்பாக இருக்கும் என்பதால், அதை இரண்டாம் பாகம் என்று அழைக்கச் சொன்னார். எனவே, அவர்தான் தலைப்புக்குக் காரணம்” என்று அவர் தெரிவித்திருந்தார்.